உள்ளடக்கத்துக்குச் செல்

அயோடோமெத்தில்துத்தநாக அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அயோடோமெத்தில்துத்தநாக அயோடைடு (Iodomethylzinc iodide) என்பது சிம்மான்சு-சிமித் வினையில் செயல்படும் செயல்திறன் மிக்க ஒரு வினையாக்கியாகும். உதாரணமாக, ஈரயோடோ மீத்தேன் மற்றும் துத்தநாக- தாமிர இரட்டை வினையில் உருவாகும் மூலநிலை அயோடோமெத்தில்துத்தநாக அயோடைடு வளைய எக்சேனுடன் வினைபுரிந்து நார்கரேனைக் கொடுக்கிறது[1].

An example of the Simmons-Smith reaction
An example of the Simmons-Smith reaction

ஈரசோமீத்தேனுடன் துத்தநாக அயோடைடு வினைபுரிவதாலும் அயோடோமெத்தில்துத்தநாக அயோடைடைத் தயாரிக்க முடியும் அல்லது மெத்திலீன் அயோடைடுடன் ஈரெத்தில்துத்தநாகத்தை வினைபுரியச் செய்வதாலும் இச்சேர்மத்தைத் தயாரிக்க முடியும்[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Smith, R. D.; Simmons, H. E.. "Norcarane". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv5p0855. ; Collective Volume, vol. 5, p. 855