தீபக் மிசுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபக் மிசுரா
The Chief Justice of India, Justice Shri Dipak Misra during the 24th Foundation Day Function of the National Human Rights Commission (NHRC), in New Delhi on October 12, 2017 (cropped).jpg
தீபக் மிசுரா 2017-l
45ஆவது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
28 ஆகத்து 2017 – 2 அக்டோபர் 2018
நியமித்தவர் ராம் நாத் கோவிந்த்
முன்னவர் சகதீசு சிங் கேகர்
பின்வந்தவர் ரஞ்சன் கோகோய்
நீதிபதி இந்திய உச்ச நீதிமன்றம்
பதவியில்
10 அக்டோபர் 2011 – 27 ஆகத்து 2017
நியமித்தவர் பிரதிபா பாட்டீல்
தில்லி உயர் நீதிமன்றம்
பதவியில்
24 மே 2010 – 10 அக்டோபர் 2011
முன்னவர் அஜித் பிரகாசு ஷா
பின்வந்தவர் டி. முருகேசன்
பாட்னா உயர் நீதிமன்றம்
பதவியில்
1 திசம்பர் 2009 – 23 மே 2010
முன்னவர் புரபல குமார் மிசுரா
பின்வந்தவர் ரேகா தோஷித்
தனிநபர் தகவல்
பிறப்பு 3 அக்டோபர் 1953 (1953-10-03) (அகவை 69)
உறவினர் இரங்கநாத் மிசுரா (uncle)[1]
படித்த கல்வி நிறுவனங்கள் மதுசூதன் சட்டக் கல்லூரி, கட்டக்

தீபக் மிசுரா (Dipak Misra)(பிறப்பு: அக்டோபர் 3, 1953) என்பவர் இந்தியாவின் 45வது தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் ஆவார். இவர் 28 ஆகத்து 2017 முதல் 2 அக்டோபர் 2018 வரை தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.[2][3][4] மிசுரா, பாட்னா மற்றும் தில்லி உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதியாகவும் இருந்துள்ளார். இவர் 1990 முதல் 1991 வரை 21வது தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ராவின் மருமகன் ஆவார்.[5]

பணி[தொகு]

தலைமை நீதிபதியாக இந்திய உச்ச நீதிமன்ற்றத்தில் பதவியேற்கும் மிசுரா

மிசுரா 14 பிப்ரவரி 1977-ல் வழக்கறிஞராகப் பணியில் சேர்ந்தார். ஒரிசா உயர் நீதிமன்றம் மற்றும் சேவை தீர்ப்பாயத்தில் பயிற்சி பெற்றார். 1996ஆம் ஆண்டு ஒரிசா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக முதலில் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில், மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு இவர் 19 திசம்பர் 1997-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். திசம்பர் 2009-ல், இவர் பாட்னா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இங்கு இவர் மே 2010 வரை பணியாற்றினார். பின்னர் இவர் தில்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் பணியாற்றியபோது 10 அக்டோபர் 2011 அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[2][6]

நீதிபதி மிசுரா 28 ஆகத்து 2017 அன்று இந்தியாவின் 45வது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி 65 வயதில் கட்டாய ஓய்வு பெறும் வரை. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக பதின்மூன்று மாதங்கள் பதவி வகித்தார்.[7]

குற்றச்சாட்டுகள்[தொகு]

12 சனவரி 2018 அன்று, உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள்; ஜஸ்டி செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசப் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மிஸ்ராவின் நிர்வாக முறை மற்றும் வழக்குகளை ஒதுக்கீடு செய்ததை விமர்சித்தனர். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை மிசுராவின் நெருக்கமானவர்கள் மறுத்துள்ளனர்.[8] உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு நீதிபதிகள் நடத்திய இந்தக் கிளர்ச்சி, நீதித்துறையின் மீதுள்ள மக்களின் நம்பிக்கையைச் சிதைத்து, நீதித்துறையைக் காயப்படுத்தும் எனச் சோலி சொராப்ஜி, உஜ்வல் நிகம் போன்ற சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

20 ஏப்ரல் 2018 அன்று, ஏழு எதிர்க்கட்சிகள், எழுபத்தொரு நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துடன், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவிடம், மிசுராவை பதவி நீக்கம் செய்யக் கோரி மனு அளிக்கப்பட்டது.[9] 23 ஏப்ரல் 2018 அன்று, வெங்கையா நாயுடு இந்த மனுவை நிராகரித்தார். முதன்மையாகப் புகார்கள் உள் நிர்வாகம் மற்றும் தவறான நடத்தை அல்ல, மேலும் பதவி நீக்கம் என்பது நீதித்துறையின் அரசியலமைப்பு ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட சுதந்திரத்தில் தீவிர தலையீடாகும் என்று தெரிவித்தார்.[10][11][12]

மேற்கோள்கள்[தொகு]

  1. Rautray, Samanwaya (9 August 2017). "Dipak Misra, the Man behind Nation Anthem ruling to be next CJI". The Economic Times. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/dipak-mishra-will-be-the-next-chief-justice-of-india/articleshow/59973189.cms. 
  2. 2.0 2.1 "Hon'ble Mr. Justice Dipak Misra". Supreme Court of India. 11 June 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The courtrooom cast after presidential reference". http://www.indianexpress.com/news/the-courtrooom-cast-after-presidential-reference/1010129/. 
  4. "Tenure of CJI Dipak Misra: 400 days of tumult for the 'Master of Roster'". https://www.business-standard.com/article/current-affairs/tenure-of-cji-dipak-misra-400-days-of-tumult-for-the-master-of-roster-118100200640_1.html. 
  5. "He taught me that law needs to have a human face". https://timesofindia.indiatimes.com/home/sunday-times/He-taught-me-that-law-needs-to-have-a-human-face/articleshow/52273469.cms. 
  6. Mittal, Priyanka (8 August 2017). "Justice Dipak Misra to be next Chief Justice of India". Livemint. http://www.livemint.com/Politics/zOQPvAxmvlg60nrOubBMzJ/Justice-Dipak-Misra-to-be-next-Chief-Justice-of-India.html. 
  7. "CHIEF JUSTICE OF INDIA AND SITTING HON'BLE JUDGES ARRANGED ACCORDING TO DATE OF APPOINTMENT AS ON 29 September 2012". Supreme Court of India. 14 May 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 1 October 2012 அன்று பார்க்கப்பட்டது.
  8. Dev, Atul. "Dipak Misra's shadow over the Supreme Court". The Caravan (ஆங்கிலம்). 7 December 2019 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Chief Justice Dipak Misra Faces Impeachment Motion, 71 Have Signed: 10 Facts". https://www.ndtv.com/india-news/opposition-parties-submit-petition-to-rajya-sabha-chairman-for-chief-justices-impeachment-1840245. 
  10. "Venkaiah Naidu rejects impeachment motion against CJI". http://www.thehindu.com/news/national/venkaiah-naidu-rejects-impeachment-motion-against-cji/article23643125.ece. 
  11. "Decision to reject impeachment motion against CJI was not hasty: Venkaiah Naidu". https://timesofindia.indiatimes.com/india/decision-to-reject-impeachment-motion-against-cji-was-not-hasty-venkaiah-naidu/articleshow/63895986.cms. 
  12. "10 reasons why Venkaiah Naidu rejected the impeachment notice against CJI Dipak Misra". https://timesofindia.indiatimes.com/india/10-reasons-why-venkaiah-naidu-rejected-the-impeachment-notice-against-cji-dipak-misra/articleshow/63881915.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபக்_மிசுரா&oldid=3667120" இருந்து மீள்விக்கப்பட்டது