ஜஸ்டி செலமேஸ்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஜஸ்டி செலமேஸ்வர் (Jasti Chelameswar பிறப்பு 23 சூன் 1953) என்பவர் இந்திய உச்சநீதிமன்ற நீதிபதியாவார். இவர் 2018 சூன் 22 அன்று ஓய்வு பெற்றார்.[1] முன்னதாக, இவர் கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், கௌஹத்தி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார்.[2] இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசரான தீபக் மிஸ்ராவுக்கு எதிராக  பத்திரிகையாளர்கள் கூட்டத்தைக் கூட்டி கூட்டாக கேள்வி எழுப்பிய  4 நீதிதிகளில் ஒருவராகவும் இருந்தார்.[3].

வாழ்க்கை[தொகு]

செலமேஸ்வர் ஆந்திரப்பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தின் மொவாவா மண்டலத்தில் உள்ள பெத்தமுட்டெவி சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தையான ஜஸ்டி லட்சுமிநாராயணா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தவர்.  மச்சிலிப்பட்டணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த செலமேஸ்வர், சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர், 1976இல் விசாகப்பட்டண ஆந்திர சட்ட பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.[4]

தொழில்[தொகு]

ஆந்திர உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக ஆனார் செல்லமேஸ்வர். பின்னர் 2007இல் குவாஹாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி உயர்வுபெற்றார். அதையடுத்து கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் இருந்தார். 2011இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக்க ஆனார்.[5]

குறிப்பிடத்தக்க தீர்ப்புகள்[தொகு]

கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்[தொகு]

தகவல்தொடர்பு தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 66-ஏ-யை, அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தங்களை விமர்சிப்பவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைக்கப் பயன்படுத்தினர்.  இது போன்ற குற்றங்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்பட்டன. கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெரிக்கும் இந்தப் பிரிவை 2016-ல்  செலமேஸ்வர் மற்றும் ரோகின்டன் பாலி நரிமன் உள்ளடக்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்துசெய்தது..[6][7][8][9][10]

ஆதார்[தொகு]

செலமேஸ்வர், சரத் அர்விந்த் பாபெட், சொக்கலிங்கம் நாகப்பன் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசின் நல உதவிகளைப் பெற ஆதாரைக் கட்டாயமாக்குவதை தீர்ப்பின் வழியாகத் தடுத்தது.[11]

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம்(என்ஜேஏசி) தீர்ப்பு[தொகு]

நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம் முறையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தனி அதிகாரத்தைத் தடுக்கும் வகையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க முயன்றது இந்திய ஒன்றிய அரசு. ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வில் நால்வர் இந்த ஆணையம் அமைக்கும் முயற்சியை அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று சொல்லி ரத்துசெய்தனர். ஆனால், அந்தத் தீர்ப்பிலேயே கொலீஜியம் முறையை விமர்சித்து நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் முயற்சிக்கு ஆதரவளித்தார் செலமேஸ்வர்.[12]

மேற்கோள்கள்[தொகு]

 1. https://barandbench.com/justice-jasti-chelameswar-sits-cji-dipak-misra-dispels-speculations/
 2. "Meet Jasti Chelameswar, only judge who ruled in favour of government's NJAC - The Economic Times". பார்த்த நாள் 2015-11-03.
 3. "Turmoil in Supreme Court as four judges speak out against Chief Justice Dipak Misra" (in en). https://www.hindustantimes.com/. 2018-01-12. http://www.hindustantimes.com/india-news/4-senior-supreme-court-judges-speak-out-against-cji-dipak-misra-say-need-to-preserve-institution-for-survival-of-democracy/story-UqaLGhs4iCbyk4zckVmMbM.html. பார்த்த நாள்: 2018-05-18. 
 4. "Supreme Court of India - CJI & Sitting Judges". பார்த்த நாள் 2016-11-20.
 5. "Hon'ble Mr. Justice Jasti Chelameswar". பார்த்த நாள் 20 December 2016.
 6. "Section 66A: India court strikes down 'Facebook' arrest law". BBC. 24 March 2015. http://www.bbc.com/news/world-asia-india-32029369. பார்த்த நாள்: 19 December 2016. 
 7. "India supreme court strikes down internet censorship law". The Guardian. 24 March 2015. https://www.theguardian.com/world/2015/mar/24/india-supreme-court-strikes-down-internet-censorship-law. பார்த்த நாள்: 19 December 2016. 
 8. "A blow for free speech". The Hoot. 25 March 2015. http://www.thehoot.org/media-watch/law-and-policy/a-blow-for-free-speech-8195. பார்த்த நாள்: 19 December 2016. 
 9. "Supreme Court upholds free speech on internet, scraps 'unconstitutional' Section 66A of IT Act". Hindustan Times. 25 March 2015. http://www.hindustantimes.com/india/supreme-court-upholds-free-speech-on-internet-scraps-unconstitutional-section-66a-of-it-act/story-6eWmUdBFtnPBccmsV9LPtL.html. பார்த்த நாள்: 19 December 2016. 
 10. "SC strikes down ‘draconian’ Section 66A". The Hindu. 24 March 2015. http://www.thehindu.com/news/national/SC-strikes-down-‘draconian’-Section-66A/article10740659.ece. பார்த்த நாள்: 19 December 2016. 
 11. "Don't insist on Aadhar, warns SC". The Hindu. 16 March 2015. http://www.thehindu.com/news/national/aadhaar-not-mandatory-sc-reiterates/article6999924.ece. பார்த்த நாள்: 20 December 2016. 
 12. "The judge who dissented: ‘No accountability, mediocrity or even less promoted, reform overdue’" (2015-10-17). பார்த்த நாள் 2015-11-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸ்டி_செலமேஸ்வர்&oldid=2721199" இருந்து மீள்விக்கப்பட்டது