உள்ளடக்கத்துக்குச் செல்

தி அட்டேக்ஸ் ஆப் 26/11 (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாக்குதல்கள் 26/11
தி அட்டேக்ஸ் ஆப் 26/11
தி அட்டேக்ஸ் ஆப் 26/11 திரைப்படச் சுவரொட்டிப் படிமம்
இயக்கம்ராம் கோபால் வர்மா
தயாரிப்புபராக் சங்கவி[1]
கதைராம் கோபால் வர்மா
ரோம்மல் ரோட்ரிகஸ்[2]
நடிப்புநானா படேகர்[3]
சஞ்சீவ் ஜெய்ஷ்வல்[4]
கலையகம்அலும்ப்ரா என்டர்டெயின்மென்ட்
விநியோகம்ஈரோஸ் இன்டர்நேஷனல்
வெளியீடுபெப்ரவரி 2013 (2013-02)(பெர்லின்)
1 மார்ச்சு 2013
ஓட்டம்116 நிமிடங்கள்[5]
நாடு இந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு30 கோடி (US$3.8 மில்லியன்)[6]

'"தி அட்டேக்ஸ் ஆப் 26/11' அல்லது 26/11 தாக்குதல்கள் (ஆங்கிலம்: The Attacks of 26/11) இது ஒரு குற்றவியல் - பரபரப்பூட்டும் பாலிவுட், இந்தித் திரைப்படம் ஆகும். இத் திரைப்படமானது நவம்பர் 26, 2008 ஆம் ஆண்டு மும்பைத் தாக்குதல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை ராம் கோபால் வர்மா இயக்கத்தில் நானா படேகர், சஞ்சீவ் ஜெய்ஷ்வல் மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் மார்ச் 1, 2013 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.

கதை விளக்கம்

[தொகு]

நவம்பர் 26, 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி அஜ்மல் கசாப்புடன் பத்து பயங்கரவாதிகளுடன் கடல் வழியாக, மும்பைக்குள் ஊடுருவி, சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், தாஜ் தங்குவிடுதி, ஒபராய் தங்குவிடுதி மற்றும் லியோபோல்ட் கஃபே உள்ளிட்ட இடங்கள் தாக்கப்பட்டது. இதில் 166 பேர் பலியானார்கள். இச்சம்பவத்தை மையப்படுத்தி ராம் கோபால் வர்மா அவர்கள் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும் இச்சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், காவல் துறை அறிக்கைகள், நீதி மன்றத் தீர்ப்பு, மற்றும் சம்பவத்தால் பாதிக்கப்பட நபர்கள் அளித்த தகவல்கள் ஆகியவை திரைக் கதைக்கு கருவூலமாக அமைந்ததுள்ளது.[7][8] மேலும் இப்படத்தை ஆராய்ந்த மத்திய திரைப்பட தணிக்கைக் குழு இப்படத்தில் உள்ள காட்சிகள் அனைத்தும் திரைப்படத்திர்க்கு முக்கிய உயிரோட்டமாக அமைந்திருப்பதால் இதில் எந்தக் காட்சியையும் நீக்காமல் அப்படியே அனுமதித்துள்ளது. ஆனால் இப்படத்திர்க்கு வயது வந்தவர்களுக்கு மட்டும் (A (Adult)) என்ற முத்திரைச் சான்றிதழ் வழங்கியுள்ளது.[9] மேலும் தீவிரவாதி அஜ்மல் கசாப் வேடத்தில் சஞ்சீவ் ஜெய்ஸ்வால் நடித்துள்ளார். இணை காவல்துறை ஆணையராக நானா படேகர் நடித்துள்ளார்.

விளம்பரப்படுத்துதல்

[தொகு]

இத் திரைப்படத்தின் முதல் ஏழு நிமிட சிறப்பு காட்சியை ஈரோஸ் இன்டர்நேஷனல் சேனல் நிறுவனம் மூலம் யூடியூப் இணையத்தில் நவம்பர் 23, 2012, அன்று வெளியிடப்பட்டது. மேலும் இப்படத்தின் சிறப்பு காட்சியை மகாராட்டிரம் இணை காவல்துறை ஆணையரான ராகேஷ் மரியா அவர்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதனை இயக்குனர் கரண் ஜோஹர் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றும் இதனுடன் சத்யா 2 திரைப்படத்தின் முன்னோட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

துணுக்குகள்

[தொகு]
  • இப்படத்தின் முக்கியக் காட்சிகளை தாஜ் உணவகத்தில் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதால், கலை இயக்குனர் உதய் சிங் அவர்களைக் கொண்டு அச்சு அசலாக தாஜ் தங்கு விடுதியியைப் போன்று ஒரு நகல் நான்கு கோடி செலவில் உருவாக்கப்பட்டது.[10]
  • முதல் தாக்குதலுக்குள்ளான லியோபோல்ட் கஃபேயின் உரிமையாளரே தனக்குச் சம்மந்தப்பட்ட காட்சியில் அவரே நடித்துள்ளார்.[11]
  • அஜ்மல் கசாப் கதாபத்திரத்தில் நடிக்க சுமார் 500 பேர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அதில் தில்லியைச் சேர்ந்த சஞ்சீவ் ஜெய்ஸ்வால் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.[12]

ஆதாரங்கள்

[தொகு]
  1. "RGV builds replica of Taj hotel worth 2.5 crores for 26/11". daily.bhaskar.com. 2012-08-31. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 22, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Rommel Rodrigues. "The face of terror unveiled". Mid Day. http://www.mid-day.com/specials/2011/jan/020111-ajmal-kasab-mumbai-terror-attacks-book-rommel-rodrigues.htm. 
  3. . http://www.koimoi.com/bollywood-news/ramu-and-nana-reunite-after-10-years/. பார்த்த நாள்: 2013 - பிப்ரவரி 22. 
  4. "Sanjeev Jaiswal to play Kasab in RGV's next film - Movies News - Bollywood - ibnlive". Ibnlive.in.com. 2012-03-16 இம் மூலத்தில் இருந்து 2012-06-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120623020215/http://ibnlive.in.com/news/ram-gopal-vermas-hunt-for-kasab-ends/239797-8-66.html. பார்த்த நாள்: 2013, பிப்ரவரி 22. 
  5. "THE ATTACKS ON 26/11 (18)". British Board of Film Classification. 25 பிப்ரவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 27 பிப்ரவரி 2012. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "Makers of RGV's next to distribute BO earnings among 26/11 victims' families". Hindustan Times. Archived from the original on 2013-03-03. பார்க்கப்பட்ட நாள் 2013-02-22.
  7. "Censor will not have issue withThe Attacks of 26/11: RGV". m.firstpost.com. சனவரி 18, 2013. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 26, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  8. "The Attacks Of 26/11 not on Kasab: RGV". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Feb 22, 2013. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 26, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  9. "மத்திய திரைப்பட தணிக்கைக் குழுவின் சான்றிதழ் வழங்கியுள்ளது". பிப்ரவரி 19, 2013. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 25, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  10. TNN Feb 24, 2013, 12.00AM IST (24 பிப்ரவரி 2013). "வர்மா அவர்களின் படம் எதிர்கொண்ட பிரச்சினைகள் மற்றும் அனுமதிகள் - டைம்ஸ் ஆஃப் இந்தியா". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 7, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  11. "Cafe Leopold owner to play key role in Ram Gopal Varma's 26/11 | NDTV Movies.com". Movies.ndtv.com. 2012-07-25. Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 7, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  12. "Sanjeev Jaiswal to play Kasab in RGV's next film". IBNLive. மார்ச் 16, 2012. Archived from the original on 2012-11-28. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 7, 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]

தி அட்டேக்ஸ் ஆப் 26/11 திரைப்படத்தின் முதல் 7 நிமிடங்கள் கைபேசியின் யூடியூப்பில் காண்க