தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
The Taj Mahal Palace Hotel
Taj Mahal Palace Hotel
Map
பொதுவான தகவல்கள்
இடம்மும்பை, Maharashtra, India
திறப்பு16 December 1903
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை7 floors in Taj Mahal Palace, 22 floors in Taj Mahal Tower
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)Siddhesh S., Sitaram Khanderao Vaidya and D. N. Mirza
பிற தகவல்கள்
அறைகள் எண்ணிக்கை560
தொகுப்புகளின் எண்ணிக்கை44
உணவகங்களின் எண்ணிக்கை11
வலைதளம்
http://www.tajhotels.com/Luxury/Grand-Palaces-And-Iconic-Hotels/The-Taj-Mahal-Palace-Mumbai/Overview.html
தாஜ்மகால் கோபுரம் என்றழைக்கப்படும் புதுப் பிரிவு
தாஜ் மகால் பேலஸ் மற்றும் டவரின் இரவுக்காட்சி
அரபிக்கடலிலிருந்து காணும் தோற்றம் (தாஜ் விடுதியும் கேட்வே ஆஃப் இந்தியாவும்).
தாஜ் மகால் பேலஸ் இன் இரவுக்காட்சி

தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் (The Taj Mahal Palace & Tower) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் கொலாபா பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர தங்குவிடுதி ஆகும். இது 565 அறைகளைக் கொண்டுள்ளது. பல நாட்டு பிரபலங்களும் புகழ்பெற்றவர்களும் இங்கு தங்கியுள்ளனர்.

தாஜ் மஹால் பேலஸ் மற்றும் ஹோட்டல் மும்பையில் (மகாராஷ்டிரா) உள்ள பிரபலமான ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுள் ஒன்று. இந்த ஹோட்டல் 560 அறைகளையும் 44 அறைத்தொகுதிகளையும் கொண்டுள்ளது. வரலாறு மற்றும் கட்டிடக்கலையின்படி இரு கட்டிடங்கள் ஒன்று சேர்ந்து ஹோட்டலாக உள்ளது. தாஜ் மஹால் பேலஸ் மற்றும் டவர் இரு வேறுபட்ட கட்டிடங்கள் ஆகும், மேலும் அவை இரண்டும் இரு வேறுபட்ட காலகட்டங்களில், வெவ்வேறு கட்டிடக்கலையினால் கட்டப்பட்டவை.

இதில் பீட்டில்ஸ், ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ், பில் கிளின்டன், ஜாக் சிராக், கென்ட் கிங் மற்றும் ராணி நார்வே, டியூக் & டச்சஸ், எடின்பர்க் டியூக், வேல்ஸ் இளவரசர், ரோஜர் மூர், ஜோன் காலின்ஸ், மிக் ஜாக்கர், ஏஞ்சலினா ஜோலி, பிராட் பிட், டீ பர்பில், மைக்கேல் பாலின், ஹிலாரி கிளிண்டன், பாரக் ஒபாமா, மிஷல் ஒபாமா, மற்றும் ஓப்ரா வின்ஃப்ரே போன்ற பல பிரபலங்கள் விருந்தினர்களாக தங்கியுள்ளனர். மேலும் பல கிரிக்கெட் வீரர்களும் அவர்களின் அணியினரும் தங்கள் சுற்றுப்பயணத்தின் போது இந்த ஹோட்டலில் தங்கியிருக்கின்றனர்.

வரலாறு[தொகு]

தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் மும்பையிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல். தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டல் முதலில் டாடாவால் இந்திய-சரசெனிக் பாணியில் கட்டப்பெற்றது. 1903 ம் ஆண்டு டிசம்பர் 16 முதல் விருந்தினர்களுக்காக இந்த ஹோட்டலின் கதவுகள் திறக்கப்பட்டது. பிரபலமான வாட்சன் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக டாடா தாஜ் ஹோட்டலைக் கட்டினார் என பலரால் நம்பப்படுகிறது. வாட்சன் ஹோட்டலில் வெள்ளையர்களுக்கு மட்டும் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இந்த கோபத்தில்தான் ஜாம்சேதிஜி டாடா இந்த தாஜ் ஹோட்டலைக் கட்டினர் எனவும் குறிப்பிடுகின்றனர். மேலும் சிலர் மும்பைக்கு மதிப்பு கூட்டும் வகையில் ஒரு ஹோட்டல் வேண்டும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் ஆசிரியர் வலியுறித்தியதால் கட்டப்பட்டது எனவும் கூறுகின்றனர்.[1]

இந்த ஹோட்டலின் சீதாராம் கண்டேராவ் மற்றும் டி. என். மிர்சா ஆகிய இந்திய கட்டிடக்கலை நிபுணர்களால் தொடக்கப்பட்டு பின்னர் ஆங்கிலேய பொறியியலரான டபிள்யூ. ஏ. சேம்பரால் கட்டிமுடிக்கப்பட்டது. கான்சாகிப் சொராப்ஜி ருட்டன்ஜி இந்த ஹோட்டலின் மிகப் பிரபலமான மிதக்கும் மாடிப்படிக்கட்டுகளை வடிவமைத்து, அவரே கட்டியுள்ளார். இந்த ஹோட்டலைக் கட்டுவதற்கான செலவு £250,000 (தற்போதைய மதிப்பின்படி £127 மில்லியன்) ஆகும்[2]. முதல் உலகப்போரின் போது இந்த ஹோட்டல் 600 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனையாக பயன்படுத்தப்பட்டது. இதன் மேற்கூரை ஈஃபிள் டவரில் பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பினால் செய்யப்பட்டது. அதே வகையான இரும்பினை டாடா அந்த நேரத்திலே இறக்குமதி செய்தார். நீராவியால் இயக்கக்கூடிய உயர்த்திகள் (elevator) இந்தியாவிலே முதன்முறையாக இந்த ஹோட்டலில் தான் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் விசிறிகளும், துருக்கியின் குளியல் மற்றும் ஜெர்மனின் உயர்த்திகள், ஆங்கில பட்லர்கள் என அனைத்தையுமே இந்தியாவில் முதன்முதலில் இறக்குமதி செய்து பயன்படுத்தியது இந்த ஹோட்டல்தான்.

இந்த ஹோட்டலை துறைமுகத்தில் இருந்து பார்க்கும்போது இதன் ஓரப்பகுதியினைப் பார்ப்பது போலத் தெரியும் ஆனால் அது உண்மையில் ஹோட்டலின் பின்பகுதி. இந்த கட்டிடத்தினை கட்ட பயன்படுத்தபட்ட திட்டங்களால் குழப்பமானதால் இதனை துறைமுகத்தில் இருந்து விலகிச் செல்வதைப்போல் கட்டியுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல, நகரத்தினை பார்க்கும்படி கட்டிடத்தினை கட்டுவதன் மூலம் ஏராளமானவர்கள் ஹோட்டலுக்குள் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பதால் வேண்டுமென்றே அவ்வாறு கட்டப்பட்டது. 40 வருடங்களுக்கு முன்னால், பழைய முகப்பு பக்கம் மூடப்பட்டது. அன்றிலிருந்து அனைத்து பயன்பாடுகளும் துறைமுகத்தின் பக்கமுள்ள முகப்பின் வழியே நடக்கிறது. இதன் பின்புறமான வெலிங்கடன் மீயூஸ், தாஜ் குழுமத்தினால் மதிப்பு கூட்டப்பட்ட அடிக்குமாடிகளாக நடத்தப்பட்டு வருகிறது.

டவரின் இறக்கை நிறுவப்பட்டுள்ள இடம் கிரீன் ஹோட்டலுக்குச் சொந்தமானது, டாடா அவர்கள் அந்த இடத்தினை வாங்கி அதனை தாஜ் நிறுவனத்தின் ஹோட்டலுடன் இணைத்துவிட்டார். 1973 ம் ஆண்டு கிரீன் ஹோட்டல் அழிக்கப்பட்டு தாஜ் ஹோட்டல் டவர் நிறுவப்பட்டது, அதற்கு முன்பு கிரீன் ஹோட்டல், கடல் மாலுமிகளுக்கிடையே பிரபலமான இடமாக இருந்தது அதற்குக் காரணம் அந்த ஹோட்டலின் குறைந்த விலை மற்றும் அங்கு நடைபெறும் மிகப்பெரிய விருந்துகள் தான். [3]

ஜாம்செய்து டி. எஃப். லேம் பொதுமேலாளராக இருந்த 1980-1985 காலகட்டத்தில் தாஜ் ஹோட்டல் மற்றும் டவர், உலகின் சிறந்த ஹோட்டல்களில் ஐந்தாவது இடத்தில் தொடர்ந்து இரு ஆண்டுகள் இருந்தது. பெருமைமிக்க ‘காண்டே நாஸ்ட் டிராவலர்’ (Conde Nast Traveller Readers) பயண விருதுகள் 2010 ல், ஆசியாவில் 20 வது இடத்தினை இந்த தாஜ் ஹோட்டல் பெற்றது.

2008 தீவிரவாதிகள் தாக்குதல்[தொகு]

நவம்பர் 26, 2008 தீவிரவாதிகளின் தீவிர தாக்குதலால் மும்பை தாஜ் ஹோட்டல் தாக்கப்பட்டது. சில மணி நேரங்களிலே அதன் மேற்கூரை பாதிக்கப்பட்டது. [4] இந்த தாக்குதலின் போது பலர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சுமார் 167 பேர் (வெளிநாட்டவர்களையும் சேர்த்து) கொல்லப்பட்டனர். இறந்தவர்களில் இந்தியக் குடிமக்கள் பெரும்பான்மையாக இருந்தனர். மூன்று நாட்கள் போராட்டத்திற்குப் பின்னர் கமேண்டோக்கள் தீவிரவாதிகளைக் கொன்றனர். தாஜ் ஹோட்டலில் இருந்து குறைந்தபட்சம் 31 பேர் இறந்தனர். தீவிரவாதிகள் ஹோட்டலைப் பிடிக்கும் போது தாஜ் ஹோட்டலில் சுமார் 450 பேரும், ஓபராய் ஹோட்டலில் 380 பேரும், இருந்தனர்.[5]

அதன் பின்பு நவம்பர் 30 ல் தாஜ் ஹோட்டலின் தலைவர் திரு.ரட்டன் டாடா, CNN ன் ஃபரீத் சக்ரியா எடுத்த பேட்டியில் கூறியதாவது: தாக்குதலைப் பற்றி முன் கூட்டியே சிலர் அறிந்திருந்தும் அது பற்றி போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல் இருந்ததே இதற்குக் காரணம் எனக்கூறினார்.[6] தாக்குதலுக்கு பின்பு ஹோட்டல் மீண்டும் கட்டப்படும் என ஹோட்டலின் மேலாண்மை அறிக்கித்தது. அடுத்த 12 மாதங்களில் 5 பில்லியன் ரூபாய் செலவில் ($84 மில்லியன்) ஹோட்டல் பழுதுபார்க்கப்பட்டது.

குறைந்த சேதம் அடைந்த தாஜ் ஹோட்டல் மற்றும் டவரின் பகுதிகள் டிசம்பர் 21,2008 ல் திறக்கப்பட்டது. ஹோட்டலின் பாரம்பரியப் பகுதிகளை மீண்டும் கட்டுவதற்கு பல மாதங்கள் ஆனது. [7] இந்திய-அமெரிக்க உறவுகளை வலுப்படுத்த ஹிலாரி கிளின்டன் இந்தியா ஜீலை 29 ல், வருகை தந்த போது தாஜ் ஹோட்டலில் தங்கினார் மேலும் அங்கு நடந்த நினைவுகூறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். எனது நாட்டின் அனுதாபங்களையும் ஒருமைபாட்டினையும், தாஜ் ஹோட்டலில் இறுதியாக விருந்தினர்களாகவும் வேலையாட்களாகவும் இருந்து தாக்குதலில் உயிர்விட்டவர்களுக்குக் கூற விரும்புவதாக இந்தியாவின் டைம்ஸ் நவ் எடுத்த பேட்டியில் அவர் தெரிவித்தார். [7]

அனைத்துவிதமான புதுப்பித்தலுக்குப் பிறகு ஆகஸ்ட் 15,2010 சுதந்திர தினத்தில் தாஜ் மஹால் பேலஸ் மீண்டும் திறக்கப்பட்டது. புதுப்பித்தலுக்கு மட்டும் 1.75 பில்லியன் ரூபாய் ($40 மில்லியன்) செலவிடப்பட்டது. பேலஸின் இறக்கை மீண்டும் கொண்டு வரப்பட்டு புதுப்புது சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டது.[8]

தாக்குதலுக்குப் பின்னர் நவம்பர் 6 அன்று முதன் முதலாக வெளிநாட்டுத் தலைவரான அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தாஜ் மஹால் பேலஸில் தங்கினார். “தாஜ் இந்திய மக்களின் வலிமை மற்றும் மீண்டு வருவதற்கான ஒரு அடையாளமாகும்” என்று ஹோட்டலின் மாடியில் நடந்த நிகழ்ச்சியில் ஒபாமா பேசினார். [9]

அமைந்துள்ள இடம்[தொகு]

இந்திய நுழைவு வாயிலின் அருகில் தாஜ் ஹோட்டல் அமைந்துள்ளது (மும்பை). மும்பையின் உயர் தொழில் பகுதிகளில் அதிக நெருக்கத்துடன் அமைந்துள்ளது, மேலும் நகரின் மற்ற இடங்களையும் அணுகும்படி அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள பிரபலமான சுற்றுலாத்தலங்கள் இந்திய நுழைவு வாயில் (சுமார் 100 மீ), ஜஹாங்கீர் கலைக்கூடம் (சுமார் 1 கி.மீ), சத்ரபதி சிவாஜி மகாராஜா அருங்காட்சியகம் (சுமார் 1 கி.மீ). உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து உள்ள தூரம் : சுமார் 30 கி.மீ சர்வதேச விமான நிலையத்திலிருந்து உள்ள தூரம் : சுமார் 25 கி.மீ மும்பை CST ரயில்நிலையத்திலிருந்து உள்ள தூரம் : சுமார் 5 கி.மீ மும்பை சென்ட்ரல் ரயில்நிலையத்திலிருந்து உள்ள தூரம் : சுமார் 7 கி.மீ குறிப்புகள்[10]


மேற்கோள்கள்[தொகு]

  1. "The Taj Mahal hotel will, as before, survive the threat of destruction". The Guardian (London). 24 May 2010. {{cite web}}: |first= missing |last= (help); no-break space character in |publisher= at position 13 (help)CS1 maint: multiple names: authors list (link)
  2. "Terrorists target haunts of wealthy and foreign". The Guardian (London). 24 May 2010. {{cite web}}: |first= missing |last= (help); no-break space character in |publisher= at position 13 (help)CS1 maint: multiple names: authors list (link)
  3. Taj" Vol. 32, No. 3, 3rd Quarter 2003. Edited by Fatma R. Zakaria. taj.magazine@tajhotels.com
  4. "Dozens still held hostage in Mumbai after a night of terror attacks". London: The Guardian. 28 November 2008. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. "Timeline: Mumbai under attack". BBC News. 1 December 2008. 3 December 2008. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
  6. "Taj Mahal Hotel chairman: We had warning". CNN. 29 November 2008. 6 September 2013.
  7. "Clinton meets Mumbai victims, serenaded by artisans". Reuters (Mumbai). Archived from the original on 13 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 25 ஏப்ரல் 2014. {{cite web}}: |first= missing |last= (help); Check date values in: |access-date= and |archive-date= (help); no-break space character in |publisher= at position 8 (help)CS1 maint: multiple names: authors list (link)
  8. "HNN Newswire".
  9. "Obama visits site of Mumbai attacks, praises India's resilience". Los Angeles Times. {{cite web}}: Unknown parameter |Date= ignored (|date= suggested) (help)
  10. "About The Taj Mahal Palace And Tower". cleartrip.com.