திரைப்படத் தழுவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரைப்படத் தழுவல் (Film adaptation) என்பது ஒரு படைப்பு அல்லது கதையை முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு திரைப்படத்திற்க்காக மாற்றுவது திரைப்பட தழுவல் ஆகும். திரைப்படத் தழுவலின் ஒரு பொதுவான வடிவம் ஒரு நாவலை திரைப்படத்தின் அடிப்படையாகப் பயன்படுத்துவதாகும். இது புனைகதை அல்லாத (பத்திரிகை உட்பட), சுயசரிதை, வரைக்கதைகள், வசனங்கள், நாடகங்கள், வரலாற்று கதைகள் மற்றும் பிற திரைப்படங்களில் தழுவி எடுக்கப்பட்டுள்ளன.

திரைப்படத்துறை ஆரம்பித்த நாட்களிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் இத்தகைய மாறுபட்ட வளங்களிலிருந்து பல திரைப்படங்கள் தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது.

நாடக தழுவல்[தொகு]

வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஹேம்லெட், ரோமியோ ஜூலியட், மற்றும் ஒத்தெல்லோ உள்ளிட்ட பல நாடகங்கள் திரைப்படங்களில் தழுவப்பட்டுள்ளன. ஷேக்ஸ்பியர் நாடகத்தின் முதல் ஒலித் தழுவல் 1929 ஆம் 'ஆண்டில் தி டேமிங் ஆப் தி சுரூ' என்ற தயாரிப்பாகும், இதில் மெரி பிக்ஃபோர்ட் மற்றும் டக்ளஸ் ஃபேர் பேங்க்ஸ் நடித்தனர்.[1]

தொலைக்காட்சி தழுவல்[தொகு]

இந்திரா சௌந்தரராஜன் எழுதிய பல நாவல்களை அடிப்படையாக கொண்டு மர்மதேசம், மந்திரவாசல், ருத்ரவீணை, கிருஷ்ணதாசி போன்று பல தொலைக்காட்சி தொடர்கள் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி உள்ளது.

வரைகதை புத்தக தழுவல்[தொகு]

வரைகதை புத்தக கதாபாத்திரங்கள் குறிப்பாக மீநாயகன் கதாபாத்திரங்கள் நீண்ட காலமாக திரைப்படமாக மாற்றப்பட்டுள்ளன. 1940 களில் தொடங்கி குழந்தைகளை இலக்காகக் கொண்டு ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திரைப்பட தொடர்கள் ஒளிபரப்பானது. சூப்பர்மேன் (1978) மற்றும் பேட் மேன் (1989) போன்ற திரைப்படங்கள் பிரபலமான வரைகதை புத்தகக் கதாபாத்திரங்களின் இரண்டு வெற்றிகரமான திரைப்படத் தழுவல்கள் ஆகும். அதை தொடர்ந்து 2000 களில் எக்ஸ்-மென் (2000) மற்றும் இசுபைடர் மேன் (2002) போன்ற வெற்றிகரமான திரைப்படங்கள் வெளியானது. வரைகதை புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் மற்றும் ஜோக்கர் போன்ற திரைப்படங்கள் 2019 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய திரைப்படங்கள் ஆகும்.[2]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sylvan Barnet (1998). "The Shrew on Stage and Screen". in Robert B. Heilman. The Taming of the Shrew. Signet Classic Shakespeare (Second Revised ). New York: New American Library. பக். 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780451526793. https://archive.org/details/tamingofshrewsha00will. 
  2. Mendelson, Scott (November 9, 2019). "Box Office: Joker Becomes The Most Profitable Comic Book Movie Ever". Forbes. பார்க்கப்பட்ட நாள் November 9, 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைப்படத்_தழுவல்&oldid=3098444" இலிருந்து மீள்விக்கப்பட்டது