டி.வி.சசிவர்ண தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி.வி. சசிவர்ண தேவர்
பிறப்பு06-ஆகத்து-1912
இறப்பு07-நவம்பர்-1973 (வயது 61)
பணிஅரசியல்வாதி

டி.வி. சசிவர்ண தேவர் (T.V. Sasivarna Thevar) [1] ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1912 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதி பிறந்தார். 1973 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி இறந்தார். இவர் உ.முத்துராமலிங்கத் தேவரின் ஆதரவாளராகவும், அனைத்திந்திய பார்வர்டு பிளாக் என்ற அரசியல் கட்சியின் தலைவராகவும் இருந்தார்.

சசிவர்ண தேவர் சென்னை மாகாணத்தின் தெற்குப் பகுதியில் பிறந்தவர் ஆவார். டி.லாடசாமி சேர்வை மற்றும் குருவம்மாளுக்கு 1934 ஆம் ஆண்டில் குற்றப் பழங்குடியினர் பரம்பரை சட்டத்தை எதிர்த்து முத்துராமலிங்கத் தேவர் ஏற்பாடு செய்த இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.

முத்துராமலிங்கத் தேவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் இருந்து பதவி விலகி 1939 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கு கட்சியில் இணைந்தபோது, சசிவர்ண தேவர் அக்கட்சியை பின்பற்றினார். 1951 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் வேட்பாளராக சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]

1957 ஆம் ஆண்டு அனைத்திந்திய பார்வர்டு பிளாக்கு கட்சி சார்பில் அருப்புக்கோட்டை தொகுதியில் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் தான் முன்பு வகித்து வந்த முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை பதவி விலகல் செய்தார். சசிவர்ண தேவர் முதுகுளத்தூர் இடைத்தேர்தலில் நின்று வெற்றி பெற்றார்.[3] இருப்பினும், இந்த வெற்றி சர்ச்சையைத் தூண்டியது. இதன் விளைவாக காங்கிரசு தலைவர் இம்மானுவேல் சேகரன் தேவேந்திரர் கொல்லப்பட்டார் மற்றும் 1957 ஆம் ஆண்டு முதுகுளத்தூர் கலவரத்தைத் தூண்டியது.

பல்வேறு சாதி மக்களிடையே நல்லிணக்கத்திற்காக அரசு ஏற்பாடு செய்திருந்த சாதிகளுக்கு இடையேயான அமைதி மாநாட்டில் சசிவர்ண தேவர் ஒரு பகுதியாக இருந்தார். இந்த மாநாட்டில் தேவர், நாடார், தேவேந்திரர் போன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மானுவேல் சேகரனின் மரணம் மற்றும் முதுகுளத்தூர் கலவரம் அதைத் தொடர்ந்து விரைவில் நடந்தது.

1963 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி முத்துராமலிங்கத் தேவர் இறந்ததைத் தொடர்ந்து, தேவரின் மற்றொரு சீடரான பா.கா.மூக்கைய்யாத் தேவர் மற்றும் சசிவர்ண தேவர் இடையே அதிகாரப் போட்டி வெடித்தது. மூக்கையா தேவர் வெற்றி பெற்றார் மற்றும் சசிவர்ண தேவர் சுபாசிசுட் பார்வர்டு பிளாக் கட்சியை உருவாக்கினார்.[4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி.வி.சசிவர்ண_தேவர்&oldid=3943802" இலிருந்து மீள்விக்கப்பட்டது