பா. கா. மூக்கைய்யாத்தேவர்
பா. கா. மூக்கையாத்தேவர் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1957–1962 | |
| தொகுதி | உசிலம்பட்டி |
| பதவியில் 1962–1967 | |
| பதவியில் 1967–1971 | |
| பதவியில் 1971 – 1971 (பதவி விலகல்) | |
| பின்னவர் | க. கந்தசாமி |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | க. கந்தசாமி |
| பின்னவர் | சி. ஆண்டித் தேவர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | ஏப்ரல் 4, 1923 பாப்பாபட்டி, உசிலம்பட்டி, மதுரை மாவட்டம், தமிழ்நாடு |
| இறப்பு | செப்டம்பர் 6, 1979 (அகவை 56) |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு |
| பணி | அரசியல்வாதி |
பா. கா. மூக்கையாத்தேவர் (P. K. Mookiah Thevar, ஏப்ரல் 4 , 1923 - செப்டம்பர் 6 , 1979) என்பவர் ஒரு தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு, 1957, 1962, 1967,. [1] 1971, 1977[2] ஆகிய ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் சார்பாக உசிலம்பட்டி தொகுதியிலிருந்து தொடர்ச்சியாக ஐந்துமுறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து போட்டியிட்டு வென்று இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கும் சென்றுள்ளார். இவரது மகன் எம். பசும்பொன் ஆவார்.[3]
வாழ்க்கை வரலாறு
[தொகு]மூக்கையா, காட்டமுத்து ஒச்சாத்தேவர் - செவனம்மாள் தம்பதிகளுக்கு 1923ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகாவில் உள்ள பாப்பாபட்டி என்ற வருவாய் கிராமத்தில் பிறந்தார்.[4]
மூக்கையா, 1963-இல் இவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967-இல் திமுக அரசு ஆட்சியமைத்த போது, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்காலிகப் பேரவைத் தலைவராகச் செயற்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை பதவியேற்பு உறுதிமொழியை வழங்கச் செய்தார். 1971-இல் அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் தலைவரானார். கச்சத்தீவு ஒப்பந்தத்திற்கு எதிராக இந்திய நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். இவரது முயற்சியால் உசிலம்பட்டி, மேநீலிதநல்லூர், கமுதி ஆகிய இடங்களில் கலைக் கல்லூரிகள் நிறுவப்பட்டன.
மூக்கையா, 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் ஆறாம் நாள் மறைந்தார். இவரின் கல்லறை உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கதேவர் கல்லூரியில் உள்ளது. இவரது நினைவைப் போற்றும் வகையில் இவரது சிலையொன்று மதுரை நகரத்தில் அரசரடி பகுதியில் 1990-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழ்நாடு அரசு மூக்கையாவின் நினைவாக மணிமண்டபம் ஒன்றை நிறுவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.[5]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1967. Madras-9: Madras Legislative Assembly Department. December 1968. p. 139.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 235-236.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ "VCK fields Mookiah Thevar's son". The Hindu (September 30, 2011)
- ↑ "இதே நாளில் அன்று". தினமலர் நாளிதழ்.
பா.கா.மூக்கையா தேவர்: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா, பாப்பாபட்டி என்ற கிராமத்தில், காட்டமுத்து ஒச்சாத்தேவர் -- -செவனம்மாள் தம்பதிக்கு மகனாக, 1923 ஏப்., 4ல் பிறந்தார்.
- ↑ "காரல் மார்க்ஸுக்கு சிலை; மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்: 110-விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு". Hindu Tamil Thisai. 2025-04-04. Retrieved 2025-04-04.