சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
18 ஆம் நூற்றாண்டின் அடையாளம் தெரியாத சேதுபதி மன்னரின் செப்பு நாணயம். நாணயத்தில் குதிரை உருவமும், தமிழில் சேதுபதி என்ற சொல்லும் காணப்படுகின்றன.

சேதுபதிகள் என்பவர்கள் இந்தியாவின், தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு தமிழ் குலத்தினர். [1] [2] கி.பி.12 ஆம் நூற்றாண்டில் வரலாற்றில் இடத்தைப் பெற்று பின்னர் மதுரை நாயக்க மன்னர் ஆட்சியில் சீரழிவு எய்தி மீண்டும் கி.பி.17 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் வரலாற்று ஏடுகளில் காணப்படுகின்றனர். இவர்கள் மறவர் நாடு என்றும் அழைக்கப்படும் இராமநாத இராச்சியத்தை ஆண்ட தன்னாட்சி மன்னர்களாகக் கருதப்படுகின்றனர். இராமநாதபுரத்தின் ஆண்ட ஆட்சியாளர்கள் "சேதுபதி" ( "பாலத்தின் காவலர்") என்ற பட்டத்தைப் பெற்றனர். இது முதல் சேதுபதியான இரகுநாத கிழவனுக்கு தஞ்சாவூர் நாயக்கர்களால் முதன்முதலில் வழங்கப்பட்டது. இங்குள்ள பாலம் புகழ்பெற்ற புனிதமான சேது பாலம் இராமர் பாலம் ஆகும். [3] [4] [5] இதன் பெண் ஆட்சியாளர்கள் "நாச்சியார்" என்ற பட்டத்தைப் பெற்றிருந்தனர். இப்பகுதியின் எழுபத்திரண்டு பாளையக்காரர்களில் (நாயக்க ஆட்சியாளர்களின் கீழ் இருந்த சிற்றரசர்கள்), சேதுபதி முதலிடம் பிடித்தார். இவரது இராச்சியம் ஈட்டிய வருவாயின் அடிப்படைக்கு, மாறாக இவரது இராணுவ வலிமை காரணமாக இந்த சிறப்புப் பதவி வழங்கப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், சேதுபதி மன்னர்கள் கணிசமான படையினரை அணிதிரட்டக் கூடியவர்களாக இருந்தனர், குறுகிய காலத்தில் (ஒரு வாரத்தில்) சுமார் 30,000 முதல் 40,000 வரையிலான வீரர்களைத் திரட்டும் ஆற்றல் கொண்டிருந்தனர். [6]

மதுரை நாயக்க மன்னர் முத்துகிருஷ்ணப்ப நாயக்கரின் காலத்தில் வரலாற்றில் பதிவான முதல் சேதுபதி, உடையான் ரெகுநாத சேதுபதி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்ட சடைக்கன் ஆவார். இவர் 1606-1621 முதல் ஆட்சியாளராக இருந்தார். [7] மதுரை நாயக்கர்களுக்குக் கட்டுபட்டவர்களாக இருந்த சேதுபதிகள் 1702 இல் முழு இறையைமை கொண்ட சுதந்திர ஆட்சியாளர்களாக ஆயினர். இராமநாதபுரம் இராச்சியம் பிரித்தானியப் பேரரசிடம் அதன் சுதந்திரத்தை இழந்து. பெரிய மறவர் சீமை என்னும் இராமநாதபுரம் சமஸ்தானமாகவும், சின்ன மறவர் சீமை சிவகங்கை சீமை என இரு சமீன்களாக ஆனது. [8]

சொற்பிறப்பியல்[தொகு]

சேதுபதி என்ற பெயரானது "சேதுவின் தலைவன்" என்று பொருள்படும் ஒரு தமிழ்ச் சொல் ஆகும். [9] சேது என்பது [இராமர் பாலத்தைக் ] குறிக்கிறது. [10] அது இந்தியாவின் பாம்பன் தீவிலிருந்து இலங்கையின் மன்னார் தீவு வரையிலான இடைப்பட்ட கடல் பகுதியில் சுண்ணக்கற்களைக் கொண்ட மணல் திட்டுக்களாக வரிசையாக காணப்படுகின்றன. பொ.ச. 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மறவர் குலத்தினர் இராமநாதசுவாமி கோயிலின் காப்பாளர்களாக இருந்தனர். அதன் பின்னர் சேதுபதி என்ற பட்டத்தை ஏற்றுக்கொண்டனர். [9]

"சேது காவலர்" என்ற பட்டமானது யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்களான ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தினரால் பயன்படுத்தப்பட்ட பட்டமாகும். சேதுபதிகளுடன் தொடர்புடைய காரணத்தினால் அவர்களின் நாணயத்தில் "சேது" என்ற சொல்லையும் பயன்படுத்தினார். [11]

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கையின் சேதுபதிகள்[தொகு]

17 -ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை பிராந்தியத்தின் ஆட்சியாளர்கள் சேதுபதிகள் என்று அழைக்கப்பட்டனர். பண்டைய பாண்டியர்களின் கீழ் தலைவர்களாக இருந்த சேதுபதிகளின் வாரிசை நாயக்க மன்னரான முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் 17 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்கீகரித்தார். சேதுசமுத்திரத்தின் பாதுகாவலர் சேதுபதி என்று அழைக்கப்பட்டனர். சேதுபதியான சடைக்கன்தேவர் நாயக்கர்களின் விசுவாசியாக இருந்தார். அவர் பாளையக்காரர்களின் தலைவராக உருவெடுத்தார். சேதுபதிகள் இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி மறவர்கள் ஆவர். இவர்கள் இராமநாதபுரத்தைத் தங்கள் அதிகார பூர்வ தலைமையகமாகக் கொண்டிருந்தனர். சடைக்கன் தேவர் மற்றும் அவரது மகன் கூத்தன்சேபதி ஆகியோர் சேதுபதிகளாக இருந்து இராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். சேதுபதிகள் 18 ஆம் நூற்றாண்டில் சமீந்தாராக மாறும் வரை செப்பு நாணயங்களையும் வெளியிட்டனர். நாணயங்கள் குதிரைகள், மயில்களை தெய்வத்துடன் கொண்டிருக்கின்றன. மேலும் தமிழில் சேதுபதி என்ற பெயரையும் கொண்டுள்ளன. [12]

சேதுபதிகளின் பட்டியல்[தொகு]

தனி ஆட்சியாளர்களாக
பிரிட்டிஷ் கம்பெனி ஆட்சியில்

சுதேச சமஸ்தான மன்னர்கள்:


சமீன்தார்கள் பின்வருமாறு:

குறிப்புகள்[தொகு]

 

 1. Trends in history. https://books.google.com/books?id=b-LvAAAAMAAJ. 
 2. Possessed by the Virgin: Hinduism, Roman Catholicism, and Marian Possession in South India. https://books.google.com/books?id=n2U9DwAAQBAJ. 
 3. "Sethupathi Tondaimans". The History of Tamil Nadu.
 4. "Holder of History:The Ramnad Sethupathis". 23 October 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது – Highbeam வழியாக.
 5. "Sethupathi Dynasty of Ramnad - Guardians of Rama Sethu". Bridge of Ram. 6 October 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது.
 6. Kingship and Political Practice in Colonial India. 
 7. (in en) Journal of Tamil Studies. International Association of Tamil Research, International Institute of Tamil Studies. 1987. பக். 79. https://books.google.com/books?id=nl45AAAAIAAJ. 
 8. (in en) History of Tinnevelly. Asian Educational Services. 1989. பக். 210. https://books.google.com/books?id=zjTneAGmatsC. 
 9. 9.0 9.1 Stein, Burton (1989) (in en). The New Cambridge History of India: Vijayanagara. Cambridge University Press. பக். 135. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521266932. https://books.google.com/books?id=OpxeaYQbGDMC. 
 10. Macdonell, Arthur Anthony (2004) (in en). A Practical Sanskrit Dictionary with Transliteration, Accentuation, and Etymological Analysis Throughout. Motilal Banarsidass. பக். 359. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120820005. https://books.google.com/books?id=laIPgMQF_XsC. 
 11. Holt, John (2011-04-13) (in en). The Sri Lanka Reader: History, Culture, Politics. Duke University Press. பக். 83–84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0822349822. https://books.google.com/books?id=Kj_aWm4DeFEC. 
 12. 11
 13. https://alagappauniversity.ac.in/siteAdmin/dde-admin/uploads/2/PG_M.A._History%20(English)_321-22-Tamil-Civilization-and-Culture-From-1336-1947-AD.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேதுபதி&oldid=3687547" இருந்து மீள்விக்கப்பட்டது