பாஸ்கர சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்கர சேதுபதி

பாஸ்கர சேதுபதி (1888-1903) என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார் ஆவார். இவர் முத்துராமலிங்க சேதுபதியின் மகனும், அவருக்கு அடுத்து ஆட்சிக்குவந்தவரும் ஆவார்.

வாழ்கைக் குறிப்பு[தொகு]

இவரது தந்தையான முத்துராமலிங்க சேதுபதி இறக்கும்போது அவரது மூத்த மகனான பாஸ்கர சேதுபதி ஐந்து வயது பாலகனாக இருந்தார். இதனால் பிரித்தானிய அரசால் இராமநாதபுரம் ஜமீன்தாரி நிர்வாகமானது முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அரச குடும்பத்தையும் பராமரித்து வந்ததனர். ஆங்கில அரசாங்கத்தார் பாஸ்கர சேதுபதிக்கும் அவரது தம்பி தினகர சேதுபதிக்கும் கல்வி புகட்டுவதற்காக இந்தச் சிறுவர்கள் இருவரையும் சென்னைக்கு அனுப்பி ஆங்கில ஆசான்கள். தாதிமார்கள், பணியாட்கள் ஆகியோரை அவர்களுக்கென நியமித்து முறையாகக் கல்வி பெற ஏற்பாடு செய்தனர். கி.பி. 1888இல் பாஸ்கர சேதுபதி சென்னை கிறித்தவக் கல்லூரியிலிருந்து பட்டதாரியாக வெளி வந்தவுடன் இராமநாதபுரம் ஜமீன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இவரது 12 வருட நிர்வாகத்தில் பல கண்மாய்களும், நீர்ப்பாசன ஆதாரங்களையும் பழுது பார்க்க ஏற்பாடு செய்தார். பெரும்பாலும் சமஸ்தானத்தின் பல பகுதிகளுக்கும் சாலை வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல்லக்கிலே பயணம் செய்து மக்களது வாழ்க்கை நிலையையும், தேவைகளையும் அறிந்து வந்தார். இவர் சிறந்த சைவ சித்தாந்தியாக இருந்து வந்ததால் இராமநாதபுரம் சீமை சமஸ்தான கோவில்களில் ஆகம முறைப்படி வழிபாடுகளும் விழாக்களும் நடந்து வர ஏற்பாடு செய்தார்.

இவரது ஆட்சிக் காலத்தில் நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது. இராமநாதபுரம் கோதண்டராம சுவாமி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில், இராமேஸ்வரம் இராமநாத சுவாமி திருக்கோயில், இராமநாதபுரம் இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியன திருப்பணி செய்யப்பட்டன. இவரது காலத்தில் தான் இராமேஸ்வரம் திருக்கோயிலின் முதலாவது குட முழுக்கு 1.11.1902-ல் நடைபெற்றது. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி ஆலயத்திலும், திருச்செந்தூர், பழனி, முருகன் ஆலயங்களிலும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்திலும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலிலும் உச்சி காலக் கட்டளைகளை ஏற்படுத்தினார். அவை இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக 14.9.1893-ஆம் நாள் அமெரிக்க நாட்டு சிக்காகோ நகரில் நடைபெற்ற அனைத்து உலக சமயப் பேரவைக்குச் சுவாமி விவேகானந்தரைத் தனது சொந்தச் செலவில் அனுப்பி வைத்து நாட்டின் பெருமையினை உலகு அறியச் செய்ததார். FA( first examination in arts) தேர்வில் தேர்ச்சி பெற்ற 'பரிதிமாற் கலைஞருக்கு' கல்வி உதவித்தொகை வழங்கியவர் பாஸ்கர் சேதுபதி மன்னர்.

இந்திய அஞ்சல் தலை

தமிழ்ப் பணிகள்[தொகு]

இவர் தன் ஆஸ்தான புலவராக இரா. இராகவையங்காரை வைத்திருந்து அவரை ஆதரித்து உரிய மரியாதைகளை செய்தார். இவர் பாடல் இயற்றும் ஆற்றல் கொண்டவர். இவர் இயற்றிய பதிகங்களில் ஆலவாய்ப் பதிகம், இராமேஸ்வரர் பதிகம். காமாட்சி அம்மன் பதிகம், இராஜேஸ்வரி பதிகம் ஆகியன மட்டும் கிடைத்துள்ளன.

இறப்பு[தொகு]

இந்த மன்னர் கல்லிடைக்குறிச்சியில் உள்ள திருவாவடுதுறை மடத்திற்குச் சென்றிருந்தபோது 27.12.1903 இல் காலமானார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. டாக்டர். எஸ். எம். கமால் (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். pp. 101.
He was also a free mason and contributed to the Freemasons hall in Chennai.He was responsible for recovering the wealth which was nearly lost by his philanthropic father.he was also in the railway board.
முன்னர்
இராமநாதபுரம் மன்னர்
1903–1929
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கர_சேதுபதி&oldid=3582943" இலிருந்து மீள்விக்கப்பட்டது