உள்ளடக்கத்துக்குச் செல்

விஜயரகுநாத இராமசாமி சேதுபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விஜயரகுநாத இராமசாமி சேதுபதி என்பவர் இராமநாதபுரம் ஜமீனின் ஜமீந்தார் ஆவார். இவர் அண்ணாசாமி சேதுபதிக்கு அடுத்த ஜமீன்தார் ஆவார். இவர் அண்ணாசாமி சேதுபதியின் சுவிகாரப் புத்திரன் ஆவார்.

வாரிசாக நியமிக்கப்படுதல்[தொகு]

அண்ணாசாமி சேதுபதி ஆட்சிக்காலத்தில் இராமநாதபுரம் சமஸ்தானம் நடுவர் மன்ற நிர்வாகத்தில் இருந்தது. தொடர்ந்து 14 ஆண்டுகள் நீடித்த வாரிசு உரிமை வழக்கின் காரணமாக இராமநாதபுரம் சமஸ்தானம் முதன் அதுவரை இல்லாத அளவிற்கு பணச் சிக்கலில் இருந்து வந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியாரிடம் இருந்து மாதந்தோறும் அண்ணாசாமி சேதுபதிக்கு அளிக்கப்பட்டு வந்த பராமரிப்புத் தொகையான ரூபாய் 100 எந்த வகையிலும் தேவைகளை நிறைவு செய்வதாக இல்லை. இதனால் பல தனவந்தர்களிடம் இவர் கடன் பெற்று வாழ்க்கை நடத்தியதினார். இதனால் ரூ. 96,000 வரையான கடனுக்குக் கடன்காரர்கள் இவர் மீது வழக்கு தாக்கல் செய்தனர்.

ஏற்கனவே இவர் இராமநாதபுரம் சமஸ்தானத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்னொரு புறம் நடந்துவந்தது. இதற்கிடையில் இவர் மரணமடைவதற்கு முன்னால் தனது மனைவி முத்து வீராயி நாச்சியாரின் சகோதரர் இராமசாமித் தேவரைத் தமது வாரிசாக நியமித்திருந்தார்.

இராமசாமி சேதுபதி வாழ்க்கை குறிப்பு[தொகு]

இராமசாமித் தேவருக்கு அவருடைய மனைவி, ராணி பர்வதவர்த்தனி நாச்சியார் மூலம் மங்களேஸ்வரி நாச்சியார், துரைராஜ நாச்சியார் என்ற இரு பெண் மக்கள் இருந்தனர். இராமசாமித் தேவர் கி.பி. 1830இல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் சுவீகாரத் தாயாருமான முத்து வீராயி நாச்சியாரைத் தமது வாரிசாக நியமித்தார். சிறுமிகளாக இருந்த தன் இரு பெண்களுக்கு பாதுகாவலராக தனது தம்பி முத்துச்செல்லத் தேவரை நியமனம் செய்திருந்தார். இந்தச் சாசனத்தில் இராமநாதபுரம் ஜமீன்தாரியில், நிர்வாகப் பொறுப்பாளரான செய்யது இஸ்மாயில் சாகிப் என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. [[விஜயரகுநாத இராமசாமி சேதுபதி (கி.பி. 1814-30)|டாக்டர். எஸ். எம். கமால்]] (2003). சேதுபதி மன்னர் வரலாறு. இராமநாதபுரம்: சர்மிளா பதிப்பகம். pp. 97. {{cite book}}: line feed character in |authorlink= at position 28 (help)