மறவர் (இனக் குழுமம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மறவர்
பூலித்தேவன்
மொத்த மக்கள்தொகை
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தென் தமிழகம்
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
முக்குலத்தோர், பாளையக்காரர்கள், குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் வருவோர்,

தமிழகத்தின் தென்பகுதியில் வாழும் ஒரு சாதியினர் மறவர். தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் முக்குலத்தோர் எனப்படும் கள்ளர், மறவர், அகமுடையர் எனும் மூன்று சாதியினங்கள் அடங்கிய தேவர் எனும் சாதீய அமைப்பில் மறவர் சாதியும் ஒன்று. தமிழகத்தின் தொன்மையான போர்க்குடியினர் மறவர் இனத்தோர்களே. மறம் என்பது வீரம் என்றும்,மறவர் என்றால் போர்த்தொழில் புரியும் வீரர் என்றும் பொருளாகும்.

மக்கள்தொகை

தமிழகத்தில் மறவர், பிரமலைக் கள்ளர், அம்பலக்காரர், சேர்வை, ஆப்பனாடு கொண்டையைங் கோட்டை மறவர், அம்பலக்காரர் (சூரியனூர்), கந்தர்வக்கோட்டை கள்ளர், கூட்டப்பால் கள்ளர், பெரிய சூரியர் கள்ளர், செம்மநாடு மறவர் உள்ளிட்ட சீர்மரபினர் வசிக்கின்றனர்.[1]

மரபு

செவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார் .

ராமநாதபுரம் பகுதியில் மறவர்கள் பழங்காலம் முதல் வாழ்ந்து வந்தாலும் ஆதியில் மறவர்கள் குடியிருந்த பகுதி ராமநாதபுரம் பகுதியே என்பதற்கு வரலாற்று பூர்வமான சான்றுகள் இல்லை. ஆனாலும் தமிழகம் முழுமைக்கும் இருந்த பெருங்குழுக்களில் ஒரு பிரிவினரே அவர்கள் என கருதப்படுகிறனர். அந்த வகையில் மறவர்கள் ராமநாதபுரத்திலும் இருந்திருக்கின்றனர்.

மறவர் ஜமீன்கள்

திருநெல்வேலி

 1. சேத்துர்-ராஜ ராம சேவுக பாண்டிய தேவர்
 2. சிங்கம்பட்டி-நல்லகுட்டி தீர்த்தபதி
 3. கொல்லம்கொண்டன்-வீரபுலி வாண்டாய தேவர்
 4. கங்கைகொண்டன்-சிவதுரை சோழக தேவர்
 5. சுரண்டை- வெள்ளைதுரை பாண்டிய தேவர்
 6. ஊர்க்காடு- சேது ராம தலைவனார்
 7. தெங்காஞ்சி- சீவல மாறன்
 8. வடகரை- சின்னஞ்சா தலைவனார்
 9. திருக்கரங்குடி- சிவ ராம தலைவனர்
 10. ஊற்றுமலை- ஹிருதலய மருதப்ப பாண்டியன்
 11. குமாரகிரி- குமார பாண்டிய தலைவனார்
 12. நெற்கட்டன் செவ்வல்- வரகுன ராம சிந்தமனி பூலி துரை பாண்டியன்
 13. கொடிகுளம்- முருக்கனட்டு மூவரயன் (அ) மூவரய கண்டன்
 14. கடம்பூர்- சீனி வள்ளால சொக்கதலைவனார்(அ) பூலோக பாண்டியன்
 15. மனியச்சி- தடிய தலைவனார் பொன் பாண்டியன்
 16. குற்றாலம்- குற்றால தேவன்
 17. புதுகோட்டை(திருனெல்வெலி)- சுட்டால தேவன்
 18. குருக்கள்பட்டி- நம்பி பாண்டிய தலைவனார்
 19. தென்கரை- அருகு தலைவனார்
 20. நடுவகுறிச்சி- வல்லப பாண்டிய தேவர்

ராமநாதபுரம்

1. பாலவனத்தம்- பாண்டி துரை தேவர்

2. பாளையம்பட்டி – தசரத சின்ன தேவர்

3. படமாத்துர்-வேங்கை உடையன தேவர்

4. கட்டனூர்- தினுகாட்டுதேவர்

5. அரளிகோட்டை- நல்லன தேவர்

6. செவேரக்கோட்டை – கட்டனதத் தேவர்

7. கார்குடி- பெரிய உடையன தேவர்

8. செம்பனூர்- ராஜ தேவர்

9. கோவனூர்- பூலோக தேவர்

10. ஒரியுர்- உறையூர் தேவர்

11. புகலூர்- செம்பிய தேவர்

12. கமுதி கோட்டை – உக்கிர பாண்டிய தேவர்

13. சாயல்குடி- சிவஞான பாண்டியன்

14. ஆப்பனூர்- சிறை மீட்ட ஆதி அரசு தேவர்.

மறவர் மன்னர் குடும்பங்கள்

 1. ராமநாதபுரம்- சேதுபதி
 2. சிவகங்கை- கௌரி வல்லப உடையார் தேவர்
 3. பூழி நாட்டு மன்னர்கள்

பெயர்க்காரணம்

முற்காலத்தில் அவரவர் செய்யும் தொழிலினை வைத்தே அவர்களின் சாதியையும் வரையறுக்க பட்டது. அதன்படி போர்த்தொழில் புரிந்தவர்கள் மறவரினதினர் ஆனார்கள். இவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் "மறம்" என்றால் "வீரம்" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர்கள்,இவர்களில் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். மேலும் இவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த இனத்தை சேர்ந்தவர்.மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.[2]

ஆதாரம்

 1. அனைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதிகளின் அதிகாரபூர்வ மக்கள்தொகை முதல்-அமைச்சர் கருணாநிதி விளக்கம் சென்னை, ஜுலை.10-2009விகடன்*தமிழ்கூடல் டட்ஸ் தமிழ் நக்கீரன்
 2. மறவர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மறவர்_(இனக்_குழுமம்)&oldid=1886882" இருந்து மீள்விக்கப்பட்டது