செவ்வயிறு நீல்தாவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செவ்வயிறு நீல்தாவா
ஆண்
பெண் பறவை
நீ. சு. டெனோடாடா
தாய்லாந்து
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
நீ. சுந்தரா
இருசொற் பெயரீடு
நீல்தாவா சுந்தரா
ஹோட்ஜ்சன், 1837

செவ்வயிறு நீல்தாவா (Rufous-bellied niltava)(நீல்தாவா சுந்தரா) என்பது பழைய உலக ஈப்பிடிப்பான் குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.

வாழிடம்[தொகு]

செவ்வயிறு நீல்தாவா வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, லாவோஸ், மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

விளக்கம்[தொகு]

செவ்வயிறு நீல்தாவாவின் நீளம் 15 முதல் 18 செ.மீ வரையும் உடல் எடையானது 19 முதல் 24 கிராம் வரையும் இருக்கும்.[2] இது வட்டமான தலையுடன், மிகவும் குட்டையான வால் மற்றும் அகண்ட அடியினைக் கொண்ட அலகினையும், கொண்ட பெரிய, தடிமனான மற்றும் பிரகாசமான ஈப்பிடிப்பான் ஆகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

சீனாவின் தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவில் காணப்படும் நீல்தாவா பேரினத்தில் உள்ள ஆறு சிற்றினங்களில் செவ்வயிறு நீல்தாவாவும் ஒன்றாகும். இந்த பறவை சில சமயங்களில் புஜியன் நீல்தாவா மற்றும் செம்புழை நீலதாவா ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

இது 1837-ல் பிரையன் ஹோட்ஜ்சன் என்பவரால் விவரிக்கப்பட்டது. சுந்தர என்ற குறிப்பிட்ட அடைமொழியானது சுந்தர் என்ற இந்தி வார்த்தையின் லத்தீன் மயமாக்கப்பட்ட சொல்லாகும். இதன் பொருள் "அழகானது" என்பதாகும்.[3]

செவ்வயிறு நீல்தாவா நீலம் மற்றும் ஆரஞ்சு நீல்தாவா அல்லது கருப்பு மற்றும் ஆரஞ்சு நீல்தாவா என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் ஆணின் நீல மேல் பகுதிகள் குறைவான வெளிச்சத்தில் கருப்பு நிறமாகக் காணப்படும். இதன் பிறப் பெயர்களாக ஆரஞ்சு-வயிற்று நீல்தாவா, அழகான நீல்தாவாஅல்லது சுந்தர உள்ளன.[4]

துணை இனங்கள்[தொகு]

நீ. சு. சுந்தரா - (ஹோட்ஜ்சன், 1837): பரிந்துரைக்கப்பட்ட துணையினங்கள், இது நேபாளத்திலிருந்து கிழக்கே மத்திய மற்றும் கிழக்கு இமயமலையிலும் தென் சீனாவிலிருந்து மியான்மர் வரையிலும் காணப்படுகிறது. இனப்பெருக்கம் செய்யாத பறவைகள் வடகிழக்கு வங்காளதேசத்தில் காணப்படுகின்றனர்.[2]

நீ. சு. விசுலெரி - (திச்சுருசுட், 1926) : வட இந்தியா மற்றும் பாக்கித்தானில் உள்ள இமயமலையில் கிழக்கு நோக்கி உத்தராகண்டம் வரை பரவியுள்ளது. ஹக் விசுலரின் நினைவாக இந்த துணையினப் பெயரிடப்பட்டுள்ளது.[2]

நீ. சு. டெனோடாடா- (பேங்சு & பிலீப்சு, 1914): கிழக்கு மியான்மர், தெற்கு சீனா மற்றும் வடமேற்கு வியட்நாமில் காணப்படுகிறது. இனப்பெருக்கம் செய்யாத பறவைகள் தெற்கே வடக்கு தாய்லாந்து மற்றும் இந்தோசீனாவில் காணலாம். ஆண்களின் திட்டு மற்றும் கழுத்தில் அதிக ஆலிவ்-பழுப்பு நிறமும், நெற்றியில் செம்-பழுப்பு நிறமும் மேல் வால்-மறைப்புகள் மற்றும் வால் விளிம்புகளில் செம்-பழுப்பு நிறமும் காணப்படும்.[2][5]

சூழலியல் மற்றும் நடத்தை[தொகு]

உணவுமுறை[தொகு]

செவ்வயிறு நீல்தாவா முக்கியமாகப் பூச்சி உண்ணக்கூடியது. இதன் உணவில் முதன்மையாகச் சிறிய முள்ளெலும்புகள் மற்றும் இளம் உயிரிகளும் (குறிப்பாக எறும்புகள் மற்றும் வண்டுகள்) காணப்படுகிறது. பழங்களை அவ்வப்போது உட்கொள்ளும். இரையைப் பிடிப்பதற்காக அடிமரத்தில் அமைதியாக அமர்ந்து வெளியே குதித்து அல்லது தரையில் விழுந்து பெறுகின்றது. செவ்வயிறு நீல்தாவா தனித்தனியாகவோ அல்லது இணையாகவோ உணவைச் சேகரிக்கின்றன. சில சமயங்களில் கலப்பு-இன மந்தைகளுடன் சேரும். குளிர்காலத்தில் தனிமையாகக் காணப்படும்.[2]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Niltava sundara". IUCN Red List of Threatened Species 2016: e.T22709473A94210975. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22709473A94210975.en. https://www.iucnredlist.org/species/22709473/94210975. பார்த்த நாள்: 13 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Clement, P. (2020).
  3. "A dictionary of scientific bird names originating from the Indian region". ResearchGate (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
  4. "Mystery bird: rufous-bellied niltava, Niltava sundara | GrrlScientist". the Guardian (in ஆங்கிலம்). 2012-05-07. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
  5. "ITIS Standard Report Page: Niltava sundara". www.itis.gov. பார்க்கப்பட்ட நாள் 2020-10-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செவ்வயிறு_நீல்தாவா&oldid=3509562" இலிருந்து மீள்விக்கப்பட்டது