சென்னையின் தாவரங்களும் விலங்குகளும்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் சென்னையிலுள்ள , தாவரங்கள் மற்றும் விலங்குகள்.(flora and fauna of Chennai)

கடற்கரைகள்[தொகு]

பெசன்ட் நகரில் எலியட் கடற்கரைக்கு வடக்கு.

மெரினா கடற்கரை நாட்டின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகும், அதன் 13-கிலோமீட்டர் நீளமுடையது. கடற்கரையின் (கூவம் ஆற்றின் வடக்குப்பகுதி ) வடக்குப் பகுதியிலிருந்து சாந்தோம் கடற்கரை வரையிலும் இதனைத் தொடர்ந்து அடையாறு ஆற்றின் முகத்துவாரம் வரையிலும் மெரினா என அழைக்கப்படுகிறது. இங்கே ஒரு கலங்கரை விளக்கம் மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது

அடையாரின் தெற்கே, முதல் பிரிவு எலியட் கடற்கரை அல்லது பெசன்ட் நகர் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருவான்மியூர் கடற்கரை, கொட்டிவாக்கம் கடற்கரை மற்றும் நீலாங்கரை கடற்கரை வரை இது தொடர்கிறது. கடலோர காற்று வலுவாக இருக்கும் போது மாலை நேரங்களில் பெரும்பாலான மக்கள் இங்கு கூடுவார்கள். மேலும் அதிகாலையில் பொதுமக்கள் நடைபயிற்சியும் மேற்கொள்கின்றனர்.

சென்னை துறைமுகம் கட்டப்படுவதற்கு முன், மெரினா கடற்கரை மணலால் சூழப்பட்ட ஒரு இடமாக இருந்தது.

தாவரங்கள் மற்றும் விலங்குகள்[தொகு]

1853 ஆம் ஆண்டு,காடுகளின் பாதுகாப்பாளரான ஹக் கில்கார்ன் என்பவரால் எழுதப்பட்ட ஹார்டஸ் மெட்ராஸ்ப்பேட்டென்சிஸ் எனும் புத்தகத்தில் மெட்ராஸில் ஆரம்பகாலத்திலிருந்த தாவரங்களைப் பற்றிய ஆவணங்கள் பற்றிய குறிப்பிடப்பட்டுள்ளது. நகரின் பசுமைப் பகுதி 4% ஆக இருந்தது, அந்த காலத்தில் நேரத்தில் மாநிலத்தில் 19.65% காடுகள் இருந்தன.[1]

நகரின் தெற்கில் உள்ள கிண்டி தேசியப் பூங்கா நாட்டின் மிகச்சிறிய தேசிய பூங்காவாகும் , இது 2.76 கிமீ 2 என்ற பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஒரு நகரத்திற்குள் அமைந்திருக்கும் ஒரு அரிய தேசிய பூங்கா ஆகும். புதர் காடுகளாய் உள்ள புள்ளிமான் மற்றும் புல்வாய், போன்ற விலங்குகள் மற்றும் பல பாம்புகள், பறவைகள் மற்றும் பூச்சிகள் போன்றவை இங்கு காணப்படும். [1] பரணிடப்பட்டது 2005-02-11 at the வந்தவழி இயந்திரம் இதன் அருகிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழக வளாகத்தில் பல கருப்பு ஆண் மான்கள், புள்ளிமான்கள், குரங்குகள், புனுகுப்பூனை, கீரிப்பிள்ளை, பல வகை பறவைகள், பாம்புகள் மற்றும் பூச்சிகள் போன்றவை உள்ளன. அருகிலுள்ள அண்ணா பல்கலைகழக வளாகத்தில் ஒரு சிறிய மான் கூட்டம் வளர்கிறது. நகரின் வளிமண்டலத்தை தூய்மைப்படுத்துவதில் கின்டி தேசிய பூங்கா மற்றும் அதன் அருகில் உள்ள சென்னை, இந்திய தொழில் நுட்பக் கழக வளாகம் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் கோடை காலத்தில் நகரத்தை விட பல வெப்பம் குறைவாக இருக்கும்.

இது அடையாறு சுற்றுச் சூழல் பூங்கா , என்றும் தொல்காப்பிய பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது, இது அடையாறு ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள் சிற்றோடைகளின் பாதுகாப்பதற்காக அமைத்துள்ளது. இது சுற்றுச்சூழல் சுற்றுலாவை ஊக்குவிக்கும் படியாக உருவாக்கப்பட்டது.

அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா என்று அழைக்கப்படும் வண்டலூர் பூங்கா நகரின் தென் மேற்கு பகுதியில் 5.1 கிமீ 2 பரப்பளவில் அமைந்துள்ளது. நாட்டின் மிக பழமையான மிருகக்காட்சி சாலையான இது 1854இல் இந்த மிருகக்காட்சி சாலை "மெட்ராஸ் ஜூ" என்ற பெயரில் பார்க் டவுனில் அமைக்கப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இந்த பூங்கா தற்போதைய புறநகர் பகுதிக்கு மாற்றப்பட்டது.

அரிஞார் அண்ணா விலங்கியல் பூங்கா[தொகு]

அண்ணா உயிரியல் பூங்காவில் வெள்ளைப்புலி

1855 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் முதல் உயிரியல் பூங்கா சென்னை ரிப்பன் கட்டிடம் அருகே மூர் மார்கெட்டில், இருந்தது. அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் , மற்றும் மக்களின் கோரிக்கை ஆகியவற்றின் காரணமாக, 1979 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வனத்துறைக்குச் சொந்தமான வண்டலூர் காடுகளுக்கு மாற்றம் செய்யப்பட்டது.[2] இந்த பூங்கா 510 ஹெக்டேர் பரப்பளவில் பரவி உள்ளது. மென்மையான ஈரமான மற்றும் உலர் பசுமையான நிலப்பரப்பு கொண்ட காடுகளில், குறிப்பாக இயற்கை சூழலை உருவகப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது.

இங்கு ஏறக்குறைய 81 வகை விலங்குகள் உள்ளன. மான் வகைகளில் குரைக்கும் மான் , கடமான் , புல்வாய் , நீலான் , சாங்காய் மான் , குரங்கு இனங்களில் நீலகிரி மந்தி , சிங்கம் வால் குரங்கு , பபூன், அனுமன் குரங்கு ,மேலும் ஓநாய் , குள்ளநரி , கழுதை புலி , பொதி ஒட்டகம் , நீநாய் , போன்ற விலங்கினக்களும் இங்கு காணப்படுகின்றன. மேலும் புலி , சிங்கம் , சிறுத்தை போன்ற உயிரினங்களுக்கும், யானைகள் , ஒட்டகம் போன்ற விலங்குகளும் இங்கு வசிக்கின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. மாணவர்களின் உதவியுடன், சென்னை மக்கள் தொகை கணக்கெடுப்பு துவங்குகிறது
  2. https://sriramv.wordpress.com/2014/09/18/lost-landmarks-of-chennai-corporation-zoo/