உள்ளடக்கத்துக்குச் செல்

இலாமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாமா
மாச்சு பிச்சுவைப் பார்த்துக் கொண்டிருக்கும் லாமா ஒன்று, பெரு நாடு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
L. glama
இருசொற் பெயரீடு
Lama glama
(லின்னேயசு, 1758)

லாமா (Llama) என்பது தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்கானது பொதியேற்றிச் செல்ல ஆண்டீய மலைத்தொடரை ஒட்டி வாழும் இன்காக்கள் முதலான இனக்குழுக்களால் பயன்படுத்தப் படுகிறது. இவ்விலங்கு இன்று பணி விலங்காக சுமை ஏற்றிச் செல்லவும், இதன் மயிர், இறைச்சி ஆகியவற்றுக்காகவும் வளர்க்கப்படுகிறது.[1][2][3]

நன்கு வளர்ந்த லாமாவானது தலைப்பகுதி வரை ஐந்தரை அடி முதல் ஆறு அடி உயரம் இருக்கும். சராசரியாக 127 கிலோ முதல் 204 கிலோ எடை வரை இருக்கும். பிறந்த ஒட்டகக் கன்றுகள் ஒன்பது கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். லாமாக்கள் மந்தைகளாகக் கூடி வாழ்வன. பொதுவாக இவற்றின் மயிரிழையானது மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். இவை புத்திசாலி விலங்குகளாகும். பல வேலைகளைச் சில முறை சொல்லிக்கொடுத்தவுடன் கற்றுக்கொண்டு செய்யும். பொதி சுமக்கும் லாமாக்கள் தங்கள் உடல் எடையில் 20-30% வரை தூக்கிக் கொண்டு பல மைல்கள் நடக்கவல்லன.

லாமாக்கள் வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இவை 3 மில்லியன் ஆண்டுகட்கு முன் தென் அமெரிக்காவுக்கும் ஆசியாவிற்கும் இடம்பெயர்ந்தன. பனியுகத்தின் முடிவில் இவை வடஅமெரிக்காவில் அழிந்துவிட்டன. 2007-ஆம் கணக்கெடுப்பின் படி தென்அமெரிக்காவில் 7 மில்லியன் லாமாக்களும் அல்ப்பாக்காக்களும் உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, கனடாவில் ஒரு இலட்சம் லாமாக்கள் உள்ளன. இவை தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

ஊடகங்கள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இலாமா
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேற்கோள்கள்

[தொகு]
  1. Daniel W. Gade, Nature and culture in the Andes, Madison, University of Wisconsin Press, 1999, p. 104
  2. Eveline. "Is Alpaca Wool Hypoallergenic? (Lanolin Free)". Yanantin Alpaca (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
  3. Oxford English Dictionary, 2nd edition, "llama"
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலாமா&oldid=4133256" இலிருந்து மீள்விக்கப்பட்டது