சூரியநெல்லி
சூரியநெல்லி Suryanelli | |||||||
— நகரம் — | |||||||
ஆள்கூறு | 10°03′03″N 77°11′39″E / 10.05083°N 77.19417°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | • இடுக்கி | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | சூரியநெல்லி Suryanelli | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 1,412 மீட்டர்கள் (4,633 அடி) | ||||||
குறியீடுகள்
|
சூரியநெல்லி (ஆங்கிலம் : Suryanelli/Sooryanelli) கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் ஆகும்.[3] இந்த நகரத்திலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ் பெற்ற கோடைத் தலமான மூணார் உள்ளது.
சிறப்பம்சங்கள்
[தொகு]சூரியநெல்லி கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு மலை நகரமாகும். இந்த நகரத்தின் அருகே இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ் பெற்ற கோடைத் தலமான மூணார் அமைந்துள்ளது. மேலும் தேக்கடி சுற்றுலாத்தலம், யானை இரங்கல் அணை மற்றும் பவர் ஹவுஸ் நீர்வீழ்ச்சிகளும் இதன் அருகே உள்ளது. மற்றும் கொழுக்கு மலையில் அமைந்துள்ள தேயிலைப் பொடி தயாரிக்கும் தொழிற்சாலையை நேரடியாக உள்ளே சென்று காணலாம், இங்கு செல்ல வேண்டுமானால் பொதியுந்தில் (jeep) செல்ல வேண்டும். மேலும் சூரியநெல்லியில் சூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே விழும் பருவமழை மாதங்கள் தவிர, மற்ற அனைத்து மாதங்கள் முழுவதும் எழில் மிகுத் தோற்றத்தைக் காணலாம். மேலும் சூரியநெல்லி அருகே அமைந்துள்ள, சின்னக்கானல் என்னுமிடத்தில் மிப் பழமை வாய்ந்த ஜந்து நட்சத்திரத் தங்கும் விடுதியான மஹிந்திரா கிளப் உள்ளது.
தொழில்
[தொகு]இங்கு தேயிலை பொடி தயாரித்தல், மற்றும் தேயிலைச் சார்ந்த தொழிலே இங்கு முக்கியத் தொழில் ஆகும். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக தமிழர்கள் அதிகம் வசிக்கும் கேரள நகரங்களுள் சூரியநெல்லியும் ஒன்றாகும்.
விளைபயிர்கள்
[தொகு]இங்கு முக்கிய பணப் பயிராக ஏலக்காய் பயிர் செய்யப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் வெள்ளப்பூண்டு, பீன்ஸ், இஞ்சி, மற்றும் முட்டைக்கோசு, ஆகியவை பயிர் செய்யப்படுகிறது.
அமைவிடம் போக்குவரத்து
[தொகு]கேரளம் மற்றும் தமிழ் நாடு ஆகிய இரு மாநிலங்களிலிருத்தும் சூரியநெல்லிக்கு எடுத்துக் கொள்ளும் கிலோமீட்டர் அட்டவனை:
புறப்பிடுமிடம் | சேருமிடம் | கிலோமீட்டர் |
---|---|---|
மூணார் | சூரியநெல்லி | 25 |
கொச்சி | சூரியநெல்லி | 149 |
தேனி | சூரியநெல்லி | 54 |
மதுரை | சூரியநெல்லி | 130 |
சென்னை | சூரியநெல்லி | 553 |
தேக்கடி | சூரியநெல்லி | 90 |
கொடைக்கானல் | சூரியநெல்லி | 135 |
திருநெல்வேலி | சூரியநெல்லி | 262 |
கோயம்புத்தூர் | சூரியநெல்லி | 170 |
தேனியிலிருந்து சூரியநெல்லிக்கு சரியாக அதிகாலை 3.15 க்கு நேரடியாக ஒரு அரசு பேருந்து உள்ளது, ஆனால் இது மூணார் செல்லாது.[4][5] |
நிகழ்வுகள்
[தொகு]ஆதாரங்கள்
[தொகு]- ↑ http://india.gov.in/govt/governor.php
- ↑ "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- ↑ சூரியநெல்லி இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது = ஆங்கிலத்தில்
- ↑ தூரங்கள், கிலோமீட்டர். "மூணாரிலிருந்து மற்றும் மற்ற நகரங்களிலிருந் சூரியநெல்லிக்கு வர எடுத்துக்கொள்ளும் கிலோமீட்டர் தூரங்கள்" (in ஆங்கிலம்). கிலோமீட்ர் தூரங்கள். http://www.distancesbetween.com/distance-between/distance-from-munnar-to-suryanelli/316247/r3/. பார்த்த நாள்: நவம்பர் 4 – 2012.
- ↑ தூரங்கள், கிலோமீட்டர். "மூணாரிலிருந்து மற்றும் மற்ற நகரங்களிலிருந் சூரியநெல்லிக்கு வர எடுத்துக்கொள்ளும் கிலோமீட்டர் தூரங்கள்" (in ஆங்கிலம்). The Hindu இம் மூலத்தில் இருந்து 2009-08-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090804045719/http://www.hindu.com/mp/2009/08/01/stories/2009080161250500.htm. பார்த்த நாள்: நவம்பர் 5 – 2012.
வெளியிணைப்பு
[தொகு]