சூப்பர் டீலக்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூப்பர் டீலக்ஸ்
சுவரிதழ்
இயக்கம்தியாகராஜன் குமாரராஜா
தயாரிப்புதியாகராஜன் குமாரராஜா
எழில்மதி<பிற>குமரேசன் வடிவேலு
சத்யராஜ் நடராஜன்
சுவாதி ரகுராமன்
திரைக்கதைமிஸ்கின்
நலன் குமரசாமி
நீலன் கே சேகர்
தியாகராஜன் குமாரராஜா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புவிஜய் சேதுபதி
பகத் பாசில்
சமந்தா ருத் பிரபு
ரம்யா கிருஷ்ணன்
ஒளிப்பதிவுபி. எஸ். வினோத்
நீரவ் ஷா
படத்தொகுப்புசத்யராஜ் நடராஜன்
கலையகம்டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட்
ஈஸ்ட் வெஸ்ட் ட்ரீம் ஒர்க்ஸ் என்டர்டெயின்மென்ட்
அல்சேமி விசன் ஒர்க்ஸ்
விநியோகம்வை நொட் ஸ்டூடியோஸ்
வெளியீடு29 மார்ச் 2019
ஓட்டம்176 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூப்பர் டீலக்ஸ் (super deluxe) என்பது 2019 ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம். தியாகராஜன் குமாரராஜா என்பவர் இதனை இயக்கினார். மேலும் உதவித் தயாரிப்பாளராகவும், எழுத்தாளராகவும் பணியாற்றினார்.  விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், விஜய் ராம் , அப்துல் ஜபார் மற்றும் நவீன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தனர்.  மிஷ்கின் , காயத்ரி மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணைக் கதாப்பத்திரத்தில்  நடித்தனர். பி. எஸ். வினோத் மற்றும் நீரவ் ஷா ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ள இத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். நலன் குமாரசாமி, நீலன். கே. சேகர் மற்றும் மிஷ்கின் மற்றும் தியாகராஜன் குமாரராஜா ஆகியோர் திரைக்கதை எழுதினர்.[1]  மார்ச் 29, 2019 இல் வெளியான இத்திரைப்படம் நேர்மறையான விமர்சங்களைப் பெற்றது.[2][3][4] 2019 ஆம் ஆண்டில் மெல்பர்னில் நடைபெற்ற இந்தியத் திரைப்பட விழாவில் சினிமாவிற்கான சமத்துவ விருதினை இந்தத் திரைப்படம் பெற்றது. [5]

கதைச் சுருக்கம்[தொகு]

இது நான்கு கிளைக் கதைகளைக் கொண்ட கருவாகும். முதலில் வேம்பு மற்றும் அவரின் கணவர் முகில் மற்றும் பெர்லின் எனும் காவல் அதிகாரி பற்றியது. இரண்டாவதாக ஷில்பாவாக மாறிய மாணிக்கம் அவரது மனைவி ஜோதி மற்றும்   பெர்லின் எனும் காவல் அதிகாரி பற்றியது. மூன்றாவது லீலா மற்றும் அவரது கணவர் தனசேகரன் எனும் அற்புதம் மற்றும் மகன் சூரி பற்றியது.  நான்காவதாக பாலாஜி (காஜி), சூரி, மோகன், வசந்த் (முட்ட பப்ஸ்) மற்றும் தூயவன் ஆகிய ஐந்து நண்பர்கள் பற்றியது.


நடிகர்கள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

ஐந்து வருட கால இடைவெளிக்குப் பிறகு தான் படம் இயக்கவிருப்பதாக அக்டோபர் 2016 இல் தியாகராஜன் குமார ராஜா தெரிவித்தார். மேலும் துவக்கத்தில் அநீதிக் கதைகள் எனப் பெயரிடப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் ஆகியோர் முதன்மைக் கதாப்பத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.  பின்பு சமந்தா முக்கிய பெண் கதாப்பத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.[6][7]  குமாராராஜா , ஈஸ்ட் வெஸ்ட் ட்ரீம் ஒர்க்  எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் அல்கெமி விசன் ஒர்க்ஸ் ஆகியோருடன் இணைந்து தயாரித்தார்.[8]     ஜுங்கா திரைப்படத்தின் முதல் பாதி படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதில் இவர் திருநங்கை கதாப்பத்திரத்தில் நடித்தார்.[9] லீலா எனும் கதாப்பாத்திரத்தில் முதலில் ரம்யாகிருஷ்ணன் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சில காரணங்களினால் அவர் நடிக்க இயலாமல் போகவே நதியா நடித்தார். ஆனால் அவரும் சில காரணங்களினால் நடிக்க இயலாமல் போகவே மீண்டும் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

வெளியீடு[தொகு]

இந்தத் திரைப்படம் மார்ச் 29, 2019 இல் வெளியானது. ஆனால் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.[10]

வியாபாரம்[தொகு]

இந்தத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டம் பெப்ரவரி 22, 2019 இல் வெளியானது.[11][12][13]

விமர்சனம்[தொகு]

பரத்வாஜ் ரங்கன் அவர்களின் விமர்சனத்தில் கதையின் சில நுணுக்கமான விளக்கங்களுக்காகவும் கதையின் தன்மைக்காகவும் இயக்குநரைப் பாராட்டியுள்ளார். ஒரு தைரியமான மற்றும் தனித்துவமான தமிழ்த் திரைப்படம் எனப் பாராட்டினார். இதனைப் போன்று ஒரு தமிழ்ப் படத்தினைப் பார்ததில்லை எனவும் கூறினார். [14]

சான்றுகள்[தொகு]

 1. "Five directors to pen dialogues for Vijay Sethupathi's next". The NEWS Minute (5 November 2016). பார்த்த நாள் 12 April 2019.
 2. Saltz, Rachel (2019-03-28). "'Super Deluxe' Review: A Tamil Film, With a Cosmic Indie Vibe" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2019/03/28/movies/super-deluxe-review.html. 
 3. S, Srivatsan (2019-03-29). "'Super Deluxe' review: an unusual film with an assortment of quirky characters" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/super-deluxe-review-believe-the-hype/article26671414.ece. 
 4. Wetalkiess. "சூப்பர் டீலக்ஸ் திரை விமர்சனம்" (en-GB).
 5. "Vijay Sethupathi, Shah Rukh Khan, Tabu, win top awards at IFFM Awards 2019 - Life and Trendz | DailyHunt". M.dailyhunt.in. பார்த்த நாள் 2019-08-23.
 6. Rangan, Baradwaj (3 December 2016). "Interview: Thiagarajan Kumararaja". baradwajrangan.wordpress.com. பார்த்த நாள் 21 December 2016.
 7. "PC Sreeram to work in Vijay Sethupathi-Samantha film". behindwoods.com (2016-11-02). பார்த்த நாள் 6 November 2016.
 8. "Vijay Sethupathi likely to play the lead in Thiagarajan Kumararaja's next". behindwoods.com (2016-10-24). பார்த்த நாள் 6 November 2016.
 9. "Vijay Sethupathi in 'Super Deluxe': The problem with male actors portraying trans-women." (2018-12-18). பார்த்த நாள் 18 December 2018.
 10. https://www.deccanchronicle.com/entertainment/kollywood/210719/kadaram-kondan-banned-in-malaysia.html
 11. Reliance Entertainment (2019-03-25), Super Deluxe - Official Trailer | Yuvan | Vijay Sethupathi, Samantha, Ramya Krishnan | March 29, 2019-03-29 அன்று பார்க்கப்பட்டது
 12. "Super Deluxe trailer: This Vijay Sethupathi, Samantha starrer is highly intriguing" (en) (2019-02-23).
 13. "Vijay Sethupathi's 'Super Deluxe' trailer - Times of India" (en).
 14. "Super Deluxe a lip-smacking combination of "high" and "low" art" (29 March 2019).


வெளியிணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் சூப்பர் டீலக்ஸ்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூப்பர்_டீலக்ஸ்&oldid=3189456" இருந்து மீள்விக்கப்பட்டது