காயத்ரி (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயத்ரி
பிறப்புகாயத்ரி சங்கர்
2 மே 1993 (1993-05-02) (அகவை 30)[1]
பெங்களூர், கருநாடகம், இந்தியா
பணிதிரைப்பட நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2012 – தற்போது வரை

காயத்ரி சங்கர் (Gayathrie Shankar) தமிழ் திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் தோன்றும் ஒரு நடிகையாவார். இவர் 2012 ஆம் ஆண்டில் "18 வயசு" என்றப் படத்துடன் அறிமுகமானார். ஆனாலும், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தினால் இவர் மிகவும் பிரபலமானவர். அதன் பின்னர், இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். "வெள்ள ராஜா" என்ற வலைத் தொடரில் தனது திறமையைக் காண்பித்தார். இவர் தற்போது மாமனிதன் படத்தில் நடித்து வருகிறார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

காயத்ரியின் குடும்பம் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தது. இவர் கர்நாடகாவின் பெங்களூரில் வளர்ந்தார். [2]

தொழில்[தொகு]

18 வயசு என்ற உளவியல் படம் இவரது முதல் வெளியீடாக இருந்தாலும், விஜய் சேதுபதியுடன் இணைந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படத்தில் நடித்ததற்காக அங்கீகரிக்கப்பட்டார். 2013 இல் பொன்மாலைப் பொழுது, மத்தாப்பூ என்ற இரு திரைப்படங்களில் நடித்தார். இவர் அடுத்ததாக 1980களில் நடக்கும் கல்லூரிக் காதல் கதையான ரம்மியில் இனிகோ பிரபாகரனுக்கு இணையாக நடித்தார்.[3]

சித்திரம் பேசுதடி 2 [4] என மறுபெயரிடப்பட்டு, 2019 இல் ஒரு வெளியிடப்பட்ட உலா என்றத் திரைப்படத்திலும், இரஞ்சித் செயகொடி இயக்கி 2017 இல் வெளியான புரியாத புதிர் என்றப் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்தார்.[5]

அறிமுக இயக்குநர் ஆறுமுகுகுமார் இயக்கிய "நல்ல நாள் பாத்து சொல்றேன்" என்றப் படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிகாரிகா கொனிதேலா ஆகியோருடன் நடித்தார். இப்படம் 2 பிப்ரவரி 2018 அன்று வெளியிடப்பட்டது. "சீதக்காதி" என்ற படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். 2018 ஆம் ஆண்டில் இவர் அமேசான் பிரைம் வெளியிட்ட வலைத் தொடரான "வெள்ள ராஜா" என்ற பிரத்தியேகத் தொடரில் ஆதிராவாக நடித்தார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கி, விஜய் சேதுபதி, சமந்தா அக்கினேனி, பஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்த சூப்பர் டீலக்ஸ் என்றத் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது சீனு இராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன்] மாமனிதன் என்ற படத்தில் பணிபுரிகிறார்.

குறிப்புகள்[தொகு]

  1. "Archived copy" இம் மூலத்தில் இருந்து 7 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107072220/https://in.bookmyshow.com/person/gayathrie-shankar/31812. 
  2. "Gayathrie Shankar – Interview" இம் மூலத்தில் இருந்து 2 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140302081004/http://www.behindwoods.com/tamil-actress/gayathrie/gayathrie-shankar-interview.html. 
  3. Anupama, Subramanian (18 May 2013). "Rummy is a 1980s film" இம் மூலத்தில் இருந்து 13 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131013135539/http://www.deccanchronicle.com/130518/entertainment-kollywood/article/rummy-1980s-film. 
  4. Gupta, Rinku (1 October 2013). "I came as a blank slate: Gayathrie" இம் மூலத்தில் இருந்து 26 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131126042946/http://newindianexpress.com/entertainment/tamil/I-came-as-a-blank-slate-Gayathrie/2013/10/01/article1812016.ece. 
  5. "Gayathrie Shankar – Interview" இம் மூலத்தில் இருந்து 2 March 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140302081004/http://www.behindwoods.com/tamil-actress/gayathrie/gayathrie-shankar-interview.html. "Gayathrie Shankar – Interview". Archived from the original on 2 March 2014. Retrieved 28 February 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயத்ரி_(நடிகை)&oldid=3335754" இருந்து மீள்விக்கப்பட்டது