சீரியம்(III) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீரியம் அசிட்டேட்டு
Cerium(III) acetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீரியம்(III) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
சீரியம் மூவசிட்டேட்டு
சீரியம் அசிட்டேட்டு
இனங்காட்டிகள்
537-00-8 நீரிலி Y
206996-60-3 நீரேற்று Y
பண்புகள்
Ce(CH3COO)3
வாய்ப்பாட்டு எடை 317.26
தோற்றம் வெண்மை நிறத்தூள்
உருகுநிலை 308 பாகை செல்சியசு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இலந்தனம்(III) அசிட்டேட்டு
பிரசியோடைமியம்(III) அசிட்டேட்டு
நியோடிமியம் அசிட்டேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சீரியம் அசிட்டேட்டு (Cerium acetate) என்பது Ce(CH3COO)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வெண்மை நிறத்தில் தூளாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரையும். 1.5 நீரேற்றானது 133 பாகை செல்சியசு வெப்பநிலையில் நீர் மூலக்கூற்றை இழந்து படிக உருவமற்ற நீரிலியாக மாற்றமடையும். 212 பாகை செல்சியசு வெப்பநிலையில் இந்நிலையும் மாற்றமடைந்து படிகநிலைக்கு மாறும். மேலும், 286 பாகை செல்சியசு வெப்பநிலையில் மீண்டும் ஒரு முறை நிலையில் மாற்றமடைகிறது.

தயாரிப்பு[தொகு]

சீரியம்(III) கார்பனேட்டு மற்றும் 50% நீர்ம அசிட்டிக் அமிலம் ஆகியன் வினை புரிந்து சீரியம் அசிட்டேட்டு உருவாகிறது.

Ce2(CO3)3 + 6 CH3COOH → 2 Ce(CH3COO)3 + 3 H2O + 3 CO2

பண்புகள்[தொகு]

நீரிலி நிலை சீரியம் அசிட்டேட்டு தண்ணீரிலும் எத்தனாலிலும் கரையும். ஆனால் நீரேற்று வடிவம் எத்தனாலில் கரையாது. பிரிடின் எளிதாக கரைகின்ற இச்சேர்மம் அசிட்டோனில் கரையாது.[1] 310 பாகை செல்சியசு வெப்பநிலையில் வெப்பச் சிதைவுக்கு உட்பட்டு கார சீரியம்(III) அசிட்டேட்டு உருவாகிறது. இது மேலும் அதிகமான வெப்பநிலையில் மேலும் சிதைவடைந்து Ce2O2CO3 சேர்மமாக மாற்றமடைகிறது. மேலும் அதிக வெப்பநிலையில் CeO2 மற்றும் CO போன்றவை உருவாகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 《无机化合物合成手册》.第二卷.日本化学会 编. 曹惠民 译. 化学工业出版社. 1988.7第一版.【1260】稀土元素的乙酸盐.P582
  2. Arii T, Kishi A, Ogawa M, et al. Thermal decomposition of cerium (III) acetate hydrate by a three-dimensional thermal analysis பரணிடப்பட்டது 2018-10-24 at the வந்தவழி இயந்திரம்[J]. Analytical sciences, 2001, 17(7): 875-880.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீரியம்(III)_அசிட்டேட்டு&oldid=3526845" இலிருந்து மீள்விக்கப்பட்டது