இரட்டை ரோஜா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 161: வரிசை 161:
}}
}}


{{ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்}}
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}


[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]

13:04, 24 மார்ச்சு 2021 இல் நிலவும் திருத்தம்

இரட்டை ரோஜா
வகை
இயக்கம்
  • மணிகண்ட குமார் (2019-2020)
  • அப்துல்லா (2020)
  • ரோஸ்.நந்தகுமார் (2020-தற்போது)
நடிப்பு
இசைகிரண்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்சுருதி நாராயணன்
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்ருதி ஸ்டூடியோஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்12 ஆகத்து 2019 (2019-08-12) –
ஒளிபரப்பில்
Chronology
தொடர்புடைய தொடர்கள்அக்கா செல்லலு (கதை அம்சம் தற்போது மாறி விட்டது)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இரட்டை ரோஜா என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் நாடகத் தொடர் ஆகும். இது இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் குடும்பப் பின்னணியைக் கொண்டது. இந்த தொடர் 12 ஆகத்து 2019 முதல் ஒளிபரப்பானது. [1] இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அக்கா செல்லலு என்ற தெலுங்கு மொழி தொடரின் தமிழ் தயாரிப்பாகும். ஆனால் தற்போது இத்தொடரின் கதை அம்சம் மாறி விட்டது.[2]

இந்தத் தொடரின் நாயகிகளான அனுவாகவும், அபியாகவும் இரட்டைக் கதாபாத்திரங்களில் சாந்தினி தமிழரசன்[3] நடிக்கிறார். அண்ணனாக நிமேஷ் சாகரும், தம்பியாக அக்‌ஷயும் நடிக்கிறார்கள். மணிகண்ட குமார் இந்தத் தொடரை இயக்க, ஸ்ருதி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் நாராயணன், இந்தத் தொடரையும் தயாரிக்கிறார்.[4][5][6]

கதைச்சுருக்கம்

இரட்டை சகோதரிகளான அனு, அபி இருவரும் ஒரே வயிற்றில் பிறந்திருந்தாலும், எதிரெதிர் துருவங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அக்கா அனு சுயநலம் கொண்டவள். தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவள். தங்கை அபி அனுவுக்கு நேரெதிர், அபி. குடும்பத்துக்காகவே யோசிப்பவள். இருவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தம்பியை மணப்பதால் ஏற்படும் பிரச்சினைகளும், தீர்வுகளும்தான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • ஷிவானி நாராயணன் (பகுதி:1-168) → சாந்தினி தமிழரசன் (பகுதி: 169-தற்போது)[7]
    • அபி - குடும்பத்துக்காகவே யோசித்து, அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் துணியும் தன்மையுள்ளவளாக இருக்கிறார்.
    • அனு - அக்காவான அனு, தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவர், சுயநல குணம் கொண்டவர். ஆனால் இவள் இடையில் இறந்துவிட்டாள்.
  • நிமேஷ் சாகர் - சந்தோஷ்
    • ஒழுக்கமான பையன், சஞ்சீவின் அண்ணன் மற்றும் ஸ்ரீஜாவின் கணவன்.
  • அக்‌ஷய் கமல்- சஞ்சீவ்
    • சந்தோஷின் தம்பி, கோபக்கார குணம் கொண்டவன் மற்றும் அபியின் கணவன்.

அனு மற்றும் அபி குடும்பத்தினர்

சந்தோஷ் மற்றும் சஞ்சீவ் குடும்பத்தினர்

  • எல்.ராஜா - ராமசந்திரன்
    • சந்தோஷ் மற்றும் சஞ்சீவின் தந்தை.
  • தமிழ்ச்செல்வி (2019-2020) → மீரா கிருஷ்ணா (2020-தற்போது) - சீதா
    • சந்தோஷ் மற்றும் சஞ்சீவின் தாய்.
  • மௌனிகா - ஸ்ரீஜா
    • சிந்தாமணியின் மகள் மற்றும் சந்தோஷின் மனைவி.
  • மீனா வெமுரி - சிந்தாமணி
    • ராமசந்திரனின் தங்கை ஸ்ரீஜாவின் தாய்.
  • பிரியா - கவிதா
    • ஸ்ரீஜாவின் அத்தை.

துணை கதாபாத்திரம்

  • திவாகர் - காளி
    • சீதாவின் தம்பி.
  • பவித்ரன் - சதீஸ்
    • ஸ்ரீஜாவின் முதல் கணவன்.
  • இந்திரன் - சல்மான்
    • அபியின் முன்னாள் வருங்கால கணவன்.
  • சுஜாதா - நாகலக்ஷ்மி
    • சல்மானின் தாய்.

சிறப்புத் தோற்றம்

நடிகர்களின் தேர்வு

இந்தத் தொடரின் நாயகியாக பகல் நிலவு தொடர் புகழ் ஷிவானி நாராயணன், அனு, அபி என இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது நடிகை சாந்தினி தமிழரசன் இந்த வேடங்களில் நடிக்கிறார். இவர் தாழம்பூ தொடரில் நடித்துள்ளார். அண்ணனாக நிமேஷ் சாகர், தம்பியாக அக்‌ஷய் நடிக்கிறார்கள். சாந்தினியின் அப்பாவாக பிரபல நடிகர் பூவிலங்கு மோகன் நடிக்கிறார். அம்மாவாக சபிதா ஆனந்த் நடிக்கிறார்.

நேர அட்டவணை

இந்த தொடர் 12 ஆகத்து 2019 முதல் 27 மார்ச் 2020 ஆம் ஆண்டு வரை வரை திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 1:30 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
27 சூலை 2020-ஒளிபரப்பில்
திங்கள் - சனி
1:30 PM 158-தற்போது
12 ஆகத்து 2019
திங்கள் - வெள்ளி
2:00 PM 1-157

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 2.8% 4.1%
2020 2.1% 3.8%
0.0% 0.0%

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

  1. "இரட்டையர்களின் கதையை சொல்லும் இரட்டை ரோஜா தொடர்". cinema.dinamalar.com.
  2. "புத்தம் புதிதாய் ரெட்டை ரோஜா... இது காம்பில் பூக்கவில்லை.. ஜீ தமிழ் டிவியில் பூத்த மலர்கள்!". tamil.filmibeat.com.
  3. "'ரெட்டை ரோஜா' சீரியலில் ஷிவானிக்குப் பதில் சாந்தினி". www.hindutamil.in.
  4. "அழகிய ரோஜாவும் அகங்கார ரோஜாவும் இணையும்... இரட்டை ரோஜா!". cinema.vikatan.com.
  5. "Zee Tamil launches new fiction show 'Rettai Roja'". www.televisionpost.com.
  6. "அழகிய ரோஜாவும் அகங்கார ரோஜாவும் இணையும்... இரட்டை ரோஜா!". cinema.vikatan.com.
  7. "ரெட்டை ரோஜா'வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்". tamil.indianexpress.com.

வெளி இணைப்புகள்

ஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி 1:30 PM மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி இரட்டை ரோஜா
(ஒளிபரப்பில்)
அடுத்த நிகழ்ச்சி
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் -
ஜீ தமிழ் : திங்கள் - வெள்ளி 2:00 PM மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி இரட்டை ரோஜா அடுத்த நிகழ்ச்சி
நிறம் மாறாத பூக்கள் என்றென்றும் புன்னகை
(ஒளிபரப்பில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_ரோஜா&oldid=3124341" இலிருந்து மீள்விக்கப்பட்டது