திருமால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Jkalaiarasan86ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Removed redirect Rollback
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Mergeto|விஷ்ணு}}
{{இந்து தெய்வங்கள்| <!--Wikipedia:WikiProject Hindu mythology-->
{{இந்து தெய்வங்கள்| <!--Wikipedia:WikiProject Hindu mythology-->
Image = Srinivasa Perumal idols with flowers.jpg
Image = Srinivasa Perumal idols with flowers.jpg

15:08, 8 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

திருமால்
மயிலாப்பூர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சிலை
அதிபதிமுல்லை (திணை)
ஆயுதம்சங்கு, சக்கரம், வில், வாள் மற்றும் கதாயுதம்
துணைஸ்ரீதேவி, பூதேவி
வாகனம்கருடாழ்வார்

திருமால் அல்லது பெருமாள் என்பவர் வைணவ சமயத்தின் ஸ்ரீவைஷ்ணவ மரபைப் பின்பற்றுவகள் வணங்கும் ஒரு கடவுள் ஆவார். சங்க காலத்தில் தமிழர்கள் வணங்கிய மாயோன் என்ற கடவுள் திருமாலைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. சங்க காலத்திற்குப் பிறகு ஆழ்வார்கள் மற்றும் வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரால் திருமால் வழிபாடு வளர்ச்சி பெற்றது.

தமிழ் இலக்கியங்களில் திருமால்

தமிழர்கள் முல்லை நிலத் தெய்வமாக மாயோன் என்பவரை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு கருமை நிறம் கொண்டவன் என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில் திருமாலைக் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமாலைக் குறித்துப் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் என்று அழைக்கப்படுகிறது.

பெருமாள் கோவில்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலில் கூறப்படும் 108 பெருமாள் கோவில்கள் திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன.[1]

வழிபாடு

வடகலை மரபினர் வேதங்கள் மற்றும் பஞ்சராத்திர ஆகமங்கள் போன்ற வடமொழி நூல்களைப் பின்பற்றியும் தென்கலை மரபினர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் போன்ற தமிழ் நூல்களைப் பின்பற்றியும் பெருமாள் கோவில்களில் வழிபாடு செய்கின்றனர்.

காண்க

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமால்&oldid=2671172" இலிருந்து மீள்விக்கப்பட்டது