முல்லை (திணை)
Appearance
முல்லை என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும்.[1] காடும், காடு சார்ந்த இடங்களும் முல்லை நிலமாகும். செம்மண் பரந்திருத்தலால் முல்லை நிலமானது செம்புலம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலம் முல்லை மலரைத் தழுவிப் பெயரிடப்பட்டது. " மாயோன் மேய காடுறை உலகமும்" எனத் தொல்காப்பியம் முல்லை பற்றிக் கூறுகிறது.
முல்லை நிலத்தின் பொழுதுகள்
[தொகு]கார் என்னும் பெரும் பொழுதும், மாலை என்னும் சிறுபொழுதும் முல்லை நிலத்திற்குரிய பொழுதுகளாகும்.
முல்லை நிலத்தின் கருப்பொருட்கள்
[தொகு]- தெய்வம்: திருமால் (பெருமாள்)
- மக்கள்: ஆயர், ஆய்ச்சியர், இடையர் , இடைச்சியர்
- விலங்கு: மான், முயல்
- உணவு: தினை, சாமை, நெய், பால்.
- பறவைகள்:காட்டு கோழி, கருடன்
- தொழில்: கால்நடை வளர்ப்பு , உழவுத்தொழில் செய்தல்
- விளையாட்டு: ஏறுதழுவுதல்
- புலவர்: பேயனார்
முல்லை நிலத்தின் உரிப்பொருட்கள்
[தொகு]- அக ஒழுக்கம் : இருத்தல்
- புற ஒழுக்கம் : வஞ்சி
மேற்கோள்கள்
[தொகு]தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |