பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *திருத்தம்* |
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) சி Rsmn பயனரால் பீடாலயம், மறைமாவட்டப் பேராலயம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: பேச்சுப்... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:51, 7 அக்டோபர் 2014 இல் நிலவும் திருத்தம்
பீடாலயம் அல்லது மறைமாவட்டப் பேராலயம் அல்லது கதீட்ரல் (cathedral, இலத்தீனிடமிருந்து பிரான்சியம் cathédrale. கிரேக்க மொழியில் cathedra என்பதற்கு "இருக்கை") ஆயரின் பீடம் அடங்கிய கிறித்தவ தேவாலயம் ஆகும்.[1] எனவே இது ஓர் மறை மாவட்டத்தின், வருடாந்திர சங்கமத்தின் ஆயரின் நடுவண் தேவாலயமாகும்.[2] இதனை இடாய்ச்சு மொழியில் டொம் என்றும் இத்தாலியத்தில் டூமோ என்றும், டச்சு மொழியில் டொம்கெர்கு என்றும் வழங்குகின்றனர். கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், மரபார்ந்த கிறித்தவம், மற்றும் சில லூதரனிய மெதடிச திருச்சபைகள் போன்ற சமயவட்டத் தலைவர் ஆட்சிக்குட்பட்ட திருச்சபைகளில் மட்டுமே பெருங்கோவில்களுக்கு குறிப்பிட்டப் பயன்பாடு உள்ளது.[2] ஆயரின் இருக்கை கொண்ட கதீட்ரல்கள் முதலில் இத்தாலி, கால், எசுப்பானியா மற்றும் வடக்கு ஆபிரிக்காவில் 4வது நூற்றாண்டில் உருவாகத் தொடங்கின. ஆனால் மேற்கத்திய கத்தோலிக்க திருச்சபையில் 12வது நூற்றாண்டு வரை, இத்தகைய வழக்கம் பரவலாகவில்லை. 12வது நூற்றாண்டு வாக்கில் பெருங்கோவில்களுக்கான தனி கட்டிட வடிவமைப்பு, கட்டமைப்புகள், சட்ட அடையாளங்கள் உருவாகத் தொடங்கின.
கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்தை அடுத்து மேற்கு ஐரோப்பாவின் பல பகுதிகளில் உருவான சீர்திருத்தச் சபைகள் ஆயர்கள் இல்லாது அமைந்தன. இந்தவிடங்களில் இருந்த கதீட்ரல் கட்டிடங்கள் தங்கள் பெயரையும் மதிப்பையும் தக்க வைத்துக் கொண்டன; ஆனால் படிமுறை மேலாதிக்கம் அறவே இல்லாதிருந்தது. 16வது நூற்றாண்டு முதல், குறிப்பாக 19வது நூற்றாண்டில், மேற்கு ஐரோப்பிய திருச்சபைகள் மறைபணி செயற்பாடுகளை மேற்கொண்டு ஆசியா, ஆபிரிக்கா, ஆத்திரேலேசியா, ஓசியானா, அமெரிக்காக்களில் பல புதியத் திருச்சபைகளைத் தோற்றுவித்தன. தவிரவும், கத்தோலிக்க திருச்சபையும் மரபார்ந்த திருச்சபையும் முன்னாள் சீர்திருத்தப் பகுதிகளில் பல புதிய திருச்சபைகளை உருவாக்கினர். இவற்றால் ஒரே நகரத்தில் பல்வேறு திருச்சபைகளுக்கான மூன்று அதற்கும் மேற்பட்ட பெருங்கோவில்கள் இருப்பது அரிதல்ல.
கோவிற்பற்று ஒன்று தற்காலிகமாக மறைமாவட்டப் பெருங்கோவிலாக பயன்படுத்தப்படும்போது அதனை மறைமாவட்ட இணைப் பெருங்கோவில் என்று அழைக்கின்றனர். ஆர்ச்பிஷப் அல்லது மெட்ரோபொலிட்டன் ஆயரின் பீடாலயம் மெட்ரொபொலிட்டன் கதீட்ரல் எனப்படுகிறது.
காட்சிக் கூடம்
-
உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கிலுள்ள புனித நிக்கோலசு பீடாலயம்
-
ஐக்கிய இராச்சியத்திலுள்ள கவன்ட்ரி கதீட்ரல்
-
கோர்தோபா பீடாலயம்
-
பிரேசிலின் பிரசிலியாவிலுள்ள மெட்ரொபொலிட்டன் கதீட்ரல்
-
பல்காரியாவின் சோஃவியாவில் புனித அலெக்சாண்டர் நெவ்சுக்கி பல்காரிய மரபுசார் கதீட்ரல்
-
ஜெர்மனியின் கோல்ன் நகர கதீட்ரல் ஹொஹோ டொமிகிர்க் செயின்ட் பீட்டர் மற்றும் மாரியா. இது ஓர் யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் ஆகும்.
மேற்சான்றுகள்
- ↑ Shorter Oxford English Dictionary, ISBN 0-19-860575-7
- ↑ 2.0 2.1 New Standard Encyclopedia, 1992 by Standard Educational Corporation, Chicago, Illinois; page B-262c