உள்ளடக்கத்துக்குச் செல்

சாய் பராஞ்சபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாய் பராஞ்ச்பை
2011ல் சாய் பராஞ்ச்பே
பிறப்பு19 மார்ச்சு 1938 (1938-03-19) (அகவை 86)
இலக்னோ, பிரித்தானிய இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
அருண் ஜோக்லெக்கர்(விவாகரத்து)
பிள்ளைகள்2
விருதுகள்
 • பத்மபூசண் (2006)
 • சிறந்த திரைக்கதைக்கான தேசிய திரைப்பட விருது,
 • சிறந்த இந்தித் திரைப்படத்திற்கான தேசிய திரப்பட விருது

சாய் பராஞ்ச்பே (பிறப்பு 19 மார்ச் 1938) ஓர் இந்திய திரைப்பட இயக்குநரும் மற்றும் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் ஸ்பர்ஷ், கதா, சாஸ்மே புத்தூர் மற்றும் திஷா ஆகிய விருதுகளைப் பெற்ற திரைப்படங்களின் இயக்குநர் ஆவார். ஜஸ்வந்தி, சக்கே ஷேஜாரி மற்றும் அல்பெல் போன்ற பல மராத்தி நாடகங்களையும் எழுதி இயக்கியுள்ளார்.

சாயின் கலைத்திறமையைப் பாராட்டி இந்திய அரசு 2006 இல் அவருக்கு, பத்ம பூசண் பட்டத்தை வழங்கியது.[1]

தொடக்க ஆண்டுகள்[தொகு]

சாய் பராஞ்ச்பே 1938 மார்ச் 19 அன்று மும்பையில் உருசியரான யூரா ஸ்லெப்ட்சாஃப் மற்றும் சகுந்தலா பராஞ்சபே ஆகியோருக்கு பிறந்தார்.[2] சகுந்தலா பராஞ்பே 1930கள் மற்றும் 1940களில் மராத்தி மற்றும் இந்தி படங்களில் வி. சாந்தராமின் இந்தி சமூகம் சார் படமான - துனியா நா மானே (1937) உட்பட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் ஒரு எழுத்தாளரும் மற்றும் சமூக சேவகரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.[3] 2006ல் பத்ம பூஷன் விருது பெற்றார்.

சாயின் பெற்றோர் இவர் பிறந்த சிறிது காலத்திலேயே விவாகரத்து செய்தனர். இவரது தாய் தனது தந்தையான சர் ஆர். பி. பராஞ்ச்பேவின் வீட்டில் சாயை வளர்த்தார். ஆர். பி. பராஞ்பே ஒரு புகழ்பெற்ற கணிதவியலாளரும் கல்வியாளரும் ஆவார். மேலும் அவர் 1944 முதல் 1947 வரை ஆத்திரேலியாவில் இந்திய உயர் ஆணையராகப் பணியாற்றினார். சாய் புனே உட்பட இந்தியாவின் பல நகரங்களிலும், ஆஸ்திரேலியாவின் கான்பெராவிலும் சில ஆண்டுகள் கல்வி கற்றார்.[4][5] சிறுவயதில், புனேவில் உள்ள பெர்குசன் மலையில் உள்ள 40கள் மற்றும் 50களில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளரான தனது மாமா அச்யுத் ரானடேவின் வீட்டிற்கு இவர் நடந்து செல்வார். அங்கு அச்யுத் ஒரு திரைக்கதையை விவரிப்பது போல் கதைகளைச் சொல்வார்.[6] சாய் சீக்கிரமாகவே எழுதத் தொடங்கினார். இவரது முதல் விசித்திரக் கதைகள் புத்தகமான முலாஞ்சா மேவா (மராத்தியில்), இவருக்கு எட்டு வயதாக இருக்கும்போதே வெளியிடப்பட்டது.[7]

பரஞ்ச்பை [8] 1963இல் புது தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பட்டம் பெற்றார்.

தொழில்[தொகு]

இந்தியாவின் மகாராட்டிராவின் புனேவிலுள்ள அனைத்திந்திய வானொலியில் ஒரு அறிவிப்பாளராக சாயி தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் விரைவில் வானொலியின் குழந்தைகள் திட்டத்தில் ஈடுபட்டார்.

பல ஆண்டுகளாக, பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக மராத்தி, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். இவர் ஆறு திரைப்படங்கள், இரண்டு குழந்தைகள் படங்கள் மற்றும் ஐந்து ஆவணப்படங்களை எழுதி இயக்கியுள்ளார். மேலும், குழந்தைகளுக்காக பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவற்றில் ஆறு தேசிய அல்லது மாநில அளவிலான விருதுகளை வென்றுள்ளன.

தில்லியில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். தொலைக்காட்சிக்காக தயாரிக்கப்பட்ட இவரது முதல் திரைப்படம் - தி லிட்டில் டீ ஷாப் (1972), ,[9] ஈரானில் ஆசிய ஒலிபரப்பு ஒன்றிய விருதை இப்படம் வென்றது. அந்த ஆண்டின் பிற்பகுதியில், இவர் மும்பை தூர்தர்ஷனின் தொடக்க நிகழ்ச்சியைத் தயாரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970களில், குழந்தைகளுக்கான மதிப்பு அடிப்படையிலான பொழுதுபோக்கை ஊக்குவிக்கும் மற்றும் உறுதிசெய்யும் நோக்கத்துடன் இந்திய அரசு அமைப்பான குழந்தைகள் இந்திய திரைப்பட சமூகத்தின் தலைவராக இருமுறை பணியாற்றினார்.[10] குழந்தைகள் இந்திய திரைப்பட சமூகத்திற்காக, நான்கு குழந்தைகளுக்கான திரைப்படங்களைத் தயாரித்தார். இதில் விருது பெற்ற ஜாடூ கா ஷாங்க் (1974) மற்றும் சிக்கந்தர் (1976) ஆகியவை அடங்கும்.[11]

சாயி பரராஞ்ச்பேவின் முதல் திரைப்படமான ஸ்பர்ஷ், 1980இல் வெளியிடப்பட்டது. இது தேசிய திரைப்பட விருது உட்பட ஐந்து திரைப்பட விருதுகளை வென்றது. தொடர்ந்து சஷ்மே புத்தூர் (1981) மற்றும் கதா (1982) ஆகிய நகைச்சுவைப் படங்கள் வெளிவந்தன. கதா , முயலும் ஆமையும் கதை பற்றிய நாட்டுப்புறக் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு இசை நையாண்டி ஆகும்.[12] அவர் அடுத்ததாக அடோஸ் படோஸ் (1984) மற்றும் சோட் படே (1985) ஆகிய தொலைக்காட்சித் தொடர்களை உருவாக்கினார். மராத்தி நாடகமான மசா கேல் மண்டு தே வின் இயக்குநர், எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவாக இவர் பணியாற்றினார். இது 27 செப்டம்பர் 1986 அன்று தானே, கட்காரி ரங்காயத்தனில் நிகழ்த்தப்பட்டது.[13]

தேசிய எழுத்தறிவு இயக்கத்தைப் பற்றிய அங்கூதா சாப் (1988) சாயியின் அடுத்தடுத்த திரைப்படங்கள்: திஷா (1990) புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அவலநிலை பற்றி; பபீஹா (வன காதல் பறவை) (1993); சாஸ் (1997) (இந்திய பின்னணி பாடும் சகோதரிகளான லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே ஆகியோரின் வாழ்க்கையால் ஈர்க்கப்பட்டிருக்கலாம்);[14] மற்றும் சகா சக் (2005), (இது சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது) ஆகியவையாகும்.[7]

ஹம் பஞ்சி ஏக் சாவல் கே, பார்ட்டியானா மற்றும் பெஹ்னா ஆகிய தொடர்களையும் இவர் உருவாக்கினார். ஸ்ரீதர் ரங்கயன் பபீஹா படத்திலும் , ஹம் பஞ்சி ஏக் சால் கே மற்றும் பார்ட்டியானா தொடர்களிலும் சாய்க்கு உதவினார். 

மசா கேல் மாண்டு தே, ஜஸ்வந்தி மற்றும் சாகே ஷேஜாரி போன்ற நாடகங்களையும் பரஞ்ச்பை எழுதி மேடையேற்றியுள்ளார்.[15]

ஹெல்பிங் ஹேண்ட் (லண்டன்),லக்ஷ்மி, வர்ணா ஆர்கெஸ்ட்ரா மற்றும் பங்கஜ் முல்லிக் , டாக்கிங் புக்ஸ், கேப்டன் உட்பட பல ஆவணப்படங்களை பரஞ்ச்பை இயக்கியுள்ளார். அவரது 1993 ஆவணப்படம் சூடியன், ஒரு சிறிய மகாராஷ்டிரா கிராமத்தில் திரைப்படப் பிரிவுக்காக மதுவுக்கு எதிரான போராட்டம் பற்றியது. இத்திரைப்படம் சமூகப் பிரச்சினைகளுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[9]

2001 ஆம் ஆண்டில், குழந்தைகளுக்கான பாகோ பூத் திரைப்படத்தை பரஞ்ச்பை தயாரித்தார். 2005 ஆம் ஆண்டு கோவாவில் நடைபெற்ற முதல் இந்திய சர்வதேச மகளிர் திரைப்பட விழாவில், இவரது திரைப்படங்கள் பற்றிய விமர்சனம் நடைபெற்றது. அதில் இவரது சிறந்த திரைப்படங்கள் இடம்பெற்றன.[16] 2007 ஆம் ஆண்டுக்கான 55வது தேசிய திரைப்பட விருதுகளின் திரைப்படப் பிரிவில் நடுவர் குழுவின் தலைவராக இருந்தார்.[17]

ஜூலை 2009 இல், உலக வங்கியின் முன்முயற்சியான தெற்காசிய பிராந்திய மேம்பாட்டு சந்தையில் (SAR DM) பரஞ்ச்பையின் ஆவணப்படமான சூயி வெளியிடப்பட்டது.[9] சிகிச்சை, கவனிப்பு, சக மற்றும் சமூக ஆதரவு, மறுவாழ்வு மற்றும் பணியிடங்கள் உள்ளிட்ட போதைப்பொருள் உபயோகிப்பாளர்களின் வாழ்க்கையில் பல பகுதிகளை சூயி ஆராய்கிறது. மேலும் மும்பையை தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான சங்கல்ப் மறுவாழ்வு அறக்கட்டளையுடன் இணைந்து இப்படம் உருவாக்கப்பட்டது. 29 நிமிடத் திரைப்படமான இது உலக எயிட்சு நாளான 1 டிசம்பர் 2009 அன்று தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டது [18][19]

2016 ஆம் ஆண்டில், இவர் மராத்தியில் எழுதப்பட்ட தனது சுயசரிதையான சாயா: மஜா கலாப்ரவாஸ் என்ற புத்தகத்தை வெளியிட்டார். இது 2020 இல் அதன் ஐந்தாவது பதிப்பை எட்டிய சிறந்த விற்பனை கொண்ட புத்தகமாக இருந்தது. பின்னர் இவர் எ பேட்ச் குவில்ட் - எ கொலாஜ் ஆஃப் மை க்ரியேட்டிவ் லைஃப் என்ற தலைப்பில் தனது சுயசரிதையின் ஆங்கில பதிப்பை 2020இல் வெளியிட்டார். இதில் சில அத்தியாயங்கள் திருத்தி எழுதப்பட்டன.[20]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சாய் நாடக கலைஞர் அருண் ஜோக்லேகரை மணந்தார்; இவர்களுக்கு கவுதம் என்ற மகனும், வின்னி என்ற மகளும் உள்ளனர். தம்பதியினர் மணமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு பிரிந்தனர்.[21] 1992இல் அருண் இறக்கும் வரை இவர்கள் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் பிரிந்த பிறகு, அருண் சாயின் ஸ்பர்ஷ் (1980) மற்றும் கதா (1983) ஆகிய படங்களில் நடித்தார். இவர்களது மகன், கௌதம் ஜோக்லேகர் மராத்தி திரைப்படங்களின் இயக்குனர் (பக் பக் பகாக், ஜெய் ஜெய் மகாராஷ்டிரா மாசா) மற்றும் தொழில்முறை ஒளிப்பதிவாளர் ஆவார். மேலும் இவர்களின் மகள் வின்னி பராஞ்ச்பே ஜோக்லேகர் கல்வியாளர் மற்றும் இல்லத்தரசி ஆவார். வின்னி 1980களில் சாயியின் பல திரைப்படங்கள், நாடகங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தார். வின்னி மற்றும் அவரது கணவர், அபய்க்கு (இப்போது இறந்துவிட்டார்), இரண்டு குழந்தைகள் உள்ளனர் - அபீர் மற்றும் அன்ஷூனி. நானா படேகர் இயக்கிய பிரஹார் திரைப்படத்தில் மாதுரி தீட்சித் கதாநாயகியாக நடிக்க அவருடன் கௌதம் நடித்தார்.

சாய் பராஞ்ச்பே ஒரு பல்லூடக ஆளுமையாவார். இவர் தனது சொந்த வழியை உருவாக்கி, பழையனவற்றை அழித்து, முக்கிய இணையான திரைப்படங்களுக்கு இடையே ஒரு அழியாத கோட்டை உருவாக்கினார்.[22]

பாராட்டுக்கள்[தொகு]

திரைப்பட விருதுகள்[தொகு]

வருடம் விருது திரைப்படம் வகை முடிவு மேற்கோள்
1980 தேசிய திரைப்பட விருதுகள் ஸ்பர்ஷ் சிறந்த திரைக்கதை வெற்றி [23]
சிறந்த இந்தி திரைப்படம் வெற்றி
1983 கதா வெற்றி
1992 சூடியான் சமூக அக்கறையுள்ள திரைப்படம் வெற்றி
1992 பிலிம்பேர் விருதுகள் சஸ்மே புட்டூர்] சிறந்த இயக்குனர் பரிந்துரை [24]
1985 ஸ்பர்ஷ் வெற்றி
சிறந்த உறையாடல்கள் வெற்றி
1992 திஷா சிறந்த கதை பரிந்துரை

மற்ற விருதுகள்[தொகு]

நூல் பட்டியல்[தொகு]

 • நானா பட்னாவிஸ், இந்தியா புக் ஹவுஸ் கல்வி அறக்கட்டளை; எக்கோ பதிப்பு பதிப்பு, 1971.
 • ரிக்மரோல் மற்றும் பிற நாடகங்கள், பெங்குயின் புக்ஸ் இந்தியா (பஃபின்). 2008.பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-333066-7 .

திரைப்படவியல்[தொகு]

 • தி லிட்டில் டீ ஷாப் (டிவி 1972)
 • ஜாது கா ஷங்க் (1974)
 • பேகார் (1975)
 • சிக்கந்தர் (1976)
 • டப்செரி பால் திட்டம் (1976)
 • கேப்டன் லக்ஷ்மி (1977)
 • அச்சத்திலிருந்து விடுதலை (1978)
 • ஸ்பர்ஷ் (1980)
 • சாஸ்மே புத்தூர் (1981)
 • பேசும் புத்தகங்கள் (1981)
 • கதா (1983)
 • அடோஸ் படோஸ் (டிவி 1984)
 • சோட் படே (டிவி 1985)
 • அங்கூதா சாப் (1988)
 • திஷா (1990)
 • பபீஹா 1993)
 • சூரியன் (1993)
 • சாஸ் (1997)
 • பாகோ பூத் (2000) [25]
 • சகா சக் (2005)
 • சூ (2009)

மேலும் படிக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Padma Bhushan Awardees Ms. Sai Paranjpye, Arts, Maharashtra, 2006.
 2. "Sai Paranjpye at ASHA". Archived from the original on 17 December 2007.
 3. Shakuntala Profile History, names Pranajpye.
 4. Three Years In Australia பரணிடப்பட்டது 2012-02-09 at the வந்தவழி இயந்திரம் Item: 13460, booksandcollectibles.
 5. Das, Arti (2019-03-23). "I am a first-class writer and a second-class director: Sai Paranjpye" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/entertainment/movies/i-am-a-first-class-writer-and-a-second-class-director-sai-paranjpye/article26606850.ece. 
 6. Cinema with sense, தி இந்து, 14 July 2008.
 7. 7.0 7.1 NIGHT OUT with Sai Paranjpye பரணிடப்பட்டது 21 மார்ச்சு 2006 at the வந்தவழி இயந்திரம் Indian Express, Pune Newsline, Tuesday, 7 June 2005.
 8. NSD Alumni பரணிடப்பட்டது 18 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம் National School of Drama (NSD) Annual Report 2005-2006.
 9. 9.0 9.1 9.2 Sai Paranjpye, Indian Filmmaker library, World Bank.
 10. Director’s Profile cmsvatavaran.
 11. Biography movies New York Times.
 12. Katha Review World Festival of Foreign Films.
 13. Maza Khel mandu de.
 14. Sai Paranjpye's latest film, Saaz Rediff.com, 14 May 1997.
 15. name="Scroll-Ramnath-Grin-2020">Ramnath, Nandini (28 November 2020). "Sai Paranjpye interview: 'I guess I was born with a grin'". Scroll.in. பார்க்கப்பட்ட நாள் 2021-03-20.
 16. New Feature Film "Xapai" to be directed by Sai Paranjpye பரணிடப்பட்டது 2017-10-12 at the வந்தவழி இயந்திரம் Goanet, 18 December 2005.
 17. National awards "free from lobbying": Paranjpye Press Trust of India, 2009.
 18. Injecting drug users take central role in anti-stigma film Accessed 22 January 2010
 19. "NCB drive against drug abuse gets rolling – DNA – English News & Features – Mumbai". 3dsyndication.com. 2009-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.
 20. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Scroll-Ramnath-Grin-2020 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 21. Sai speak! The Times of India, 8 July 2002.
 22. Directorate of Film Festival, January,1993.
 23. "National Film Awards (1979)". gomolo.com. Archived from the original on 2016-01-22. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02.
 24. "Best Dialogue Writer (Technical Awards)" lists winners of this award from 1958 through 1999, Indiatimes
 25. "Bhago Bhoot Full Movie". Archived from the original on 2023-03-02. பார்க்கப்பட்ட நாள் 2023-03-02 – via YouTube.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
 26. "Profiles in creativity". Archived from the original on 14 August 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-10-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாய்_பராஞ்சபே&oldid=3944412" இலிருந்து மீள்விக்கப்பட்டது