உள்ளடக்கத்துக்குச் செல்

முயலும் ஆமையும் கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் சிறுவர் கதைகள்
பாட்டி வடை சுட்ட கதை
முயலும் ஆமையும் கதை
காகம் கல் போட்ட கதை
குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
பொன்முட்டை இட்ட வாத்தின் கதை
சட்டி குட்டி போட்ட கதை
தங்கக் கோடாரியின் கதை
[[]]
[[]]
[[]]

தொகு

முயலும் ஆமையும் கதை தமிழ்ச் சூழலில் மிகப்பரவலாக வழங்கிவரும் செவி வழி நீதிக் கதையாகும்.இக்கதை சோம்பேறித்தனம் மற்றும் ஏளனம் போன்றவற்றின் விளைவுகளைக் கூறுகிறது.சில சிறுவர் இலக்கிய நூல்களில் இக்கதை அச்சுவடிவத்திலும் காணக்கிடைகிறது. ஒரு முயல்,நரி மற்றும் சில விலங்குகள் இக்கதையின் பாத்திரங்களாக வருகின்றனர்.

கதைச் சுருக்கம்

[தொகு]

ஒரு காட்டில் பல மிருகங்கள் வசித்து வந்தன.அங்கு வசித்து வந்த முயலுக்கு கர்வம் அதிகம்.அது தானே இக்காட்டில் வேகமாக ஓடுவேன் என்ற கர்வம் வந்தது.மெதுவாக நகரக்கூடிய ஆமையிடம் ஏளனமாக ஒருநாள் முயல் தன்னுடன் ஓட்டப் பந்தயத்திற்கு வருமாறு கேட்டது.முதலில் இல்லை எனக்கூறிய ஆமை முயலின் கர்வத்தை அடக்க வேண்டுமென நினைத்து ஆம் என்றது.பல மிருகங்களுக்கு இடையில் போட்டி ஆரம்பமானது.ஒரு முடிவிடமும் அறிவிக்கப்பட்டது.முயல் ஆமையை விட பன்மடங்கு வேகத்தில் ஓடியது.ஆமையோ மிகவும் மெதுவாகவே சென்றது.முக்கால்வாசி தூரம் ஓடி முடித்த முயல் ஆமை மெதுவாக வருவதைக்கண்டு ஒருமரத்தின் கீழ் நித்திரை செய்தது.ஆமையோ மெது மெதுவாக முயல் தூங்கிய தூரத்தைக்கடந்து முடிவுக்கோட்டை நெருங்கியது.அந்த நேரம் தூக்கம் கலைந்த முயல். ஆமை எல்லையை நெருங்கியதை கண்டு ஓட்டம் பிடித்தது.எனினும் முயலுக்கு முதல் ஆமை வெற்றி இலக்கை அடைந்தது.

இக்கதை முயலாமையை கூறும் கதை எனவும் விபரிக்கப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=முயலும்_ஆமையும்_கதை&oldid=3837449" இலிருந்து மீள்விக்கப்பட்டது