பாட்டி வடை சுட்ட கதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் சிறுவர் கதைகள்
பாட்டி வடை சுட்ட கதை
முயலும் ஆமையும் கதை
காகம் கல் போட்ட கதை
குரங்கு அப்பம் பகிர்ந்த கதை
பொன்முட்டை இட்ட வாத்தின் கதை
சட்டி குட்டி போட்ட கதை
தங்கக் கோடாரியின் கதை
[[]]
[[]]
[[]]

தொகு

பாட்டி வடை சுட்ட கதை, தமிழ்ச் சூழலில் மிகப்பரவலாக வழங்கிவரும் செவிவழி நீதிக்கதையாகும். தலைமுறை தலைமுறையாக வளர்ந்தவர்களால் சிறுவர்களுக்கு இக்கதை சொல்லப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதலில் கேட்கும் கதையாக பெரும்பாலும் இக்கதையே அமைவது இதன் சிறப்பு.

சில சிறுவர் இலக்கிய நூல்களில் இக்கதை அச்சு வடிவத்திலும் காணக் கிடைக்கிறது.

ஒரு பாட்டி மற்றும் குழந்தைகள் அறிந்த சில விலங்குகள் இக்கதையின் பாத்திரங்களாக வருகின்றனர். பல்வேறு சிறு சிறு திரிபுகளுடன் இக்கதை எல்லா இடங்களிலும் பொதுவானதாகக் காணப்படுகிறது.

கதைச் சுருக்கம்[தொகு]

ஓர் ஊரில் பாட்டி ஒருத்தி வடை சுட்டு விற்று வந்தாள். ஒரு நாள் அவ்வழியாக பறந்து வந்த காக்கா ஒன்று ஒரு வடையை தூக்கிக்கொண்டு பறந்து போய் மரக்கிளை ஒன்றில் உட்கார்ந்து கொண்டது. அந்த வழியாக வந்த நரி, வடையோடு காக்காவை பார்த்துவிட்டது; வடையைத் தான் எடுத்துக்கொள்ள ஒரு தந்திரம் செய்தது. காக்காவைப் பார்த்து காக்கா, நீ மிகவும் அழகாக இருக்கிறாய். உனக்கு குரலும் கூட அழகாக இருக்கக்கூடும், ஒரு பாட்டுப் பாடு என்றது. காக்கா தன் வாயைத் திறந்து "கா.. கா..." என்று பாட்டுப் பாடவே வாயிலிருந்த வடை கீழே விழுந்துவிட்டது. நரி வடையை கவ்வி எடுத்துக்கொண்டு போனது.

வேறு இடங்களில்[தொகு]

இக் கதை பிரான்ஸ் நாட்டிலும் உள்ளது. ஆனால், நரியும் காகமும் மட்டும் தான் உள்ளன. வடைக்குப் பதிலாக பாலடைக்கட்டி இருந்துள்ளது. 1621-1695-ல் ஆண்டில் "லா ஃபொன்டென்" என்பவரால் தொகுக்கப்பட்டது.

கதையின் மாறுபட்ட வடிவங்கள்[தொகு]

இக்கதையின் முடிவு பின்னாட்களில் வெவ்வேறு விதமாக மாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. காக்கா தன் கால்களின் இடுக்கில் வடையை வைத்துக் கொண்டு பாடிக்காட்டி நரியை ஏமாற்றியதாக கதை முடியும் இதில் பிரபலமான வடிவமாகும். இவ்வாறான இன்னுமொரு வடிவம் பின்வருமாறு அமைகின்றது:

[1]

சிறுவர்களிடம் ஏமாற்றுவதை சொல்லிக் கொடுத்த பாட்டி வடை சுட்ட கதை இருபத்தொன்றாம் நுாற்றாண்டில் முற்றலும் வேறுபட்ட வடிவத்தைக் கொண்டுள்ளது.அதாவது, "பாட்டியிடம் திருடவந்த காக்கையைப் பார்த்து பாட்டி பேசுகின்றது.நான் வடை சுடுவதற்கு ஏதுவாக ஏதேனும் உதவி செய்தால் உழைப்புக்கு அடையாளமாக ஒரு வடை தருகிறேன் என்று பாட்டி கூறியுள்ளது.காக்காயும் மரங்களில் உள்ள காய்ந்த குச்சிகளை ஒடித்து வந்து பாட்டியிடம் கொடுக்க, பாட்டியும் அதற்கு ஒருவடையை கொடுத்துள்ளது.இக்கதையில் குழந்தைகளுக்கு உழைக்கக் கூடிய பழக்கத்தை அடையாளப்படுத்திக் காட்டுகின்றது. இக்கதை தமிழ் திரைப்படப்பாடல்களில் எடுத்தாளப்பட்டிருப்பதுடன் சிறுவர் நாடகங்களாகவும் நடிக்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாட்டி_வடை_சுட்ட_கதை&oldid=3837452" இலிருந்து மீள்விக்கப்பட்டது