சந்தியாகோ கலத்ராவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Santiago Calatrava Valls
Calatrava IMG 2489.jpg
Santiago Calatrava in 2010
பிறப்பு28 சூலை 1951 (1951-07-28) (அகவை 71)
ஸ்பெயின்
கல்விசுவிட்சர்லாந்து நடுவண் தொழில்நுட்ப நிறுவனம்
Work
Engineering disciplineகட்டமைப்புப் பொறியியலாளர், கட்டடக்கலைஞர், சிற்பம்
Institution memberships[Institution of Structural Engineers]
Practice nameSantiago Calatrava
Significant projectsஎருசலேம் நரம்புப் பாலம்
அறிவியலுக்கும் கலைகளுக்குமான நகரம்
டெனெர்ஃப் ஆடிட்டோரியம்
பிற

சந்தியாகோ கலத்ராவா (ஜூலை 28, 1951) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரது வடிவமைப்புகள் இன்று உலகம் முழுவதிலும் பரவலான பிரபலம் பெற்றுள்ளன.

தோற்றமும் கல்வியும்[தொகு]

கலத்ராவா ஸ்பெயினிலுள்ள வலென்சியா என்னுமிடத்தில் பிறந்தார். அங்கேயுள்ள கலை மற்றும் கைவினைகள் கல்லூரியிலும், கட்டிடக்கலைக் கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1975 ல் சுவிட்சர்லாந்தின், சூரிச் நகரத்திலுள்ள சுவிஸ் பெடரல் பொறியியல் நிறுவனத்தில் சேர்ந்து குடிசார் பொறியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே என்பவருடைய செல்வாக்கினால் உந்தப்பட்ட கலத்ராவா, கட்டிடக்கலையில் சிக்கலான வடிவங்களைப் புரிந்துகொள்வதும் அவற்றை உருவாக்குவதும் எப்படி என்பது குறித்து ஆராய்ந்தார். 1981 ல், அவரது முனைவர் பட்டத்துக்கான "வெளிச்சட்டகங்களின் மடிக்கப்படக்கூடிய தன்மை" (On the Foldability of Space Frames) பற்றிய ஆராய்ச்சிகளை நிறைவு செய்துகொண்டு, கட்டிடக்கலை மற்றும் குடிசார் பொறியியலில் தனது தொழிலைத் தொடங்கினார்.

கட்டிடக்கலைப் பாணி[தொகு]

தனித்துவமான, படைப்பாற்றல் சார்ந்த, பெரும் செல்வாக்கு மிக்க கலத்ராவாவின் பாணி, வளைந்து கொடாத பொறியியலின் கோட்பாடுகளும், கட்டிடக்கலையின் கவர்ச்சிமிக்க அழகியல் அம்சங்களும் இசைவுடன் இணைந்த ஒன்றாகும். இவருடைய வடிவமைப்புகளுக்கான வடிவங்களுக்கும் அமைப்புகளுக்குமான கருத்துருக்கள் பெரும்பாலும், இயற்கைச் சூழலிலிருந்து பெறப்பட்டனவாகும். பாலங்கள் முதலிய சில குடிசார் பொறியியல் வேலைத் திட்டங்களுக்கான வடிவமைப்புகளை இவரது வேலைகள் புதிய மட்டத்துக்கு எடுத்துச் சென்றன. இவர் பல தொடர்வண்டி நிலையங்களை வடிவமைத்துள்ளார். ஒளி பொருந்தியனவும், திறந்த அமைப்பும், இலகுவாகப் பயணம் செய்யத்தக்கதாகவும் இவ் வடிவமைப்புகள் அமைந்துள்ளன.

பொதுவாக ஒரு கட்டிடக்கலைஞராகவே அறியப்பட்டாலும், கலத்ராவா ஒரு திறமையான சிற்பியும், ஓவியரும் ஆவார். கட்டிடக்கலை என்பது இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த கலையே என்பது இவரது கருத்து.

குறிப்பிடத்தக்க வேலைத்திட்டங்கள்[தொகு]

நிறைவு பெற்றவை[தொகு]

கட்டப்படும்/கட்டப்படவுள்ள திட்டங்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • 2005 ஏ.ஐ.ஏ தங்கப் பதக்கம்.

கண்காட்சிகள்[தொகு]

2006 மார்ச் 5 ஆம் தேதி முதல் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி இடம்பெற்றது.

வெளியிணைப்புகள்[தொகு]

Maps:

Profiles:

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்தியாகோ_கலத்ராவா&oldid=3242858" இருந்து மீள்விக்கப்பட்டது