உள்ளடக்கத்துக்குச் செல்

டிரினிட்டி பாலம், பெரு மான்செசுட்டர்

ஆள்கூறுகள்: 53°28′57″N 2°15′03″W / 53.4825°N 2.2509°W / 53.4825; -2.2509
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிரினிட்டி பாலம்
டிரினிட்டி பாலம்
ஆள்கூற்று53°28′57″N 2°15′03″W / 53.4825°N 2.2509°W / 53.4825; -2.2509
வாகன வகை/வழிகள்நடைப்பாலம்
கடப்பதுஇர்வெல் ஆறு
இடம்மான்செசுட்டர் மற்றும் சல்போர்டு, பெரு மான்செசுட்டர், ஐக்கிய இராச்சியம்
Characteristics
வடிவமைப்புசந்தியாகோ கலத்திராவாவால் வடிவமைக்கப்பட்ட முனைநெம்புத் தூண் வடம் தாங்கு பாலம் (Cantilever spar cable-stayed bridge)
History
கட்டி முடித்த நாள்1995

டிரினிட்டி பாலம் (Trinity Bridge) ஒரு மூவழி நடைப்பாலம். இர்வெல் ஆற்றுக்குக் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பாலம் மான்செசுட்டரில் உள்ள இரண்டு நகரங்களையும், பெரு மான்செசுட்டரில் உள்ள சல்போர்டையும் இணைக்கிறது. எசுப்பானியக் கட்டிடக்கலைஞரான சந்தியாகோ கலத்திராவாவினால் வடிவமைக்கப்பட்ட இப்பாலம், 1995ல் கட்டிமுடிக்கப்பட்டது. கலத்திராவாவின் தொடக்ககாலப் பாலங்களில் ஒன்றான இதுவே இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்ட ஒரே திட்டம் ஆகும்.

அமைப்பு

[தொகு]

நேரான வெண்ணிறக் கோடுகளாக அமைந்த இந்தப் பாலத்தின் கட்டமைப்பு சந்தியாகோ கலத்திராவாவின் வழமையான வடிவமைப்புப் பாணியில் அமைந்தது. 41 மீட்டர் உயரமான வட்டக் குறுக்குமுகம் கொண்ட தாங்கு தூண் இப்பாலத்தின் முக்கிய அம்சமாக விளங்குகிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Hands and Parker (2000). Manchester. ellipsis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-899858-77-6.

படங்கள்

[தொகு]