சங்கீதா கட்டி
சங்கீதா கட்டி | |
---|---|
2006இல் கருநாடகாவின் முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாவிடமிருந்து இராஜ்யோத்சவ விருது பெறும் சங்கீதா கட்டி | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 7 அக்டோபர் 1970 தார்வாடு, கருநாடகம், இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை, சுகம் சங்கீதாம், பின்னணிப் பாடகர் |
தொழில்(கள்) | Singer, musician, composer |
இசைத்துறையில் | 1975–தற்போது வரை |
இணையதளம் | www |
சங்கீதா கட்டி குல்கர்னி, (Sangeeta Katti Kulkarni) இந்தியாவின் கருநாடகாவைச் சேர்ந்த பின்னணிப் பாடகரும், இந்துஸ்தானி இசை பாடகரும்]], இசைக்கலைஞரும், இசையமைப்பாளரும் ஆவார். இவருக்கு கர்நாடக அரசால் 2006இல் கர்நாடக ராஜ்யோத்சவ விருது வழங்கப்பட்டது. தன்னுடைய திருமணத்திற்கு பிறகு, சங்கீதா மன்மோகன் குல்கர்னி, என அறியப்படுகிறார். தனது மெல்லிசை இசையமைப்புகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். சென்னை, மாஸ்டர் இசைத்தட்டு நிறுவனம், எச்.எம்.வி, லஹரி இசைத்தட்டு நிறுவனம், சங்கீத் சாகர் போன்ற முன்னணி பதிவு நிறுவனங்கள் இவரது பாரம்பரிய இசை, பக்தி, மெல்லிசை, திரைப்படப் பாடல்கள், நாட்டுப்புற இசையில் பல இசைத் தட்டுகளை வெளியிட்டுள்ளனர்.
அறிமுகம்
[தொகு]டாக்டர் எச். ஏ. கட்டி, திருமதி பாரதி கட்டி ஆகியோருக்கு சங்கீதா கருநாடகாவின் தார்வாடில் [1] விஜயதசமி நாளின் சரசுவதி பூஜை அன்று, 1970 அக்டோபர் 7இல் பிறந்தார். [2] வேதியியலில் பட்டம் பெற்ற இவர் கன்னடம், இந்தி, ஆங்கிலம், மராத்தி போன்ற பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்.
இவர், இந்துஸ்தானி, கூட்டுவழிபாடு, கவிதைகள், தசவானி, அபங்கம், பாவகீதம், நாட்டுப்புறப் பாடல் ,பின்னணி பாடல் ஆகியவற்றில் சிறந்த அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
தொழில்
[தொகு]முன்னணி இசை இயக்குனர்களான உபேந்திர குமார், எம். ரங்காராவ், விஜய பாஸ்கர், கீரவாணி , சி அஸ்வத், அம்சலேகா போன்ற பிறருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். மேலும், இந்தியாவின் முன்னணி இசைக் கலைஞர்களான பாலமுரளிகிருஷ்ணா, கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்பிரமணியம், நடிகர் ராஜ்குமார், பி. பி. ஸ்ரீனிவாஸ் போன்ற பலருடன் இணைந்து பாடியுள்ளார். பாரம்பரிய இசை , மெல்லிசை ஆகியவற்றில் ஒன்பது வெவ்வேறு மொழிகளைப் பாடிய இவர் அனைத்திந்திய வானொலி, தொலைக்காட்சி ஆகிய இரண்டிலும் 'ஏ' தரக் கலைஞர் ஆவார்.
சமூகப் பணிகள்
[தொகு]இவர் கடந்த 45 ஆண்டுகளாக இந்திய இசைத்துறையில் பணியாற்றி வருகிறார். மேலும் இவர் சமூகப் பணிகளையும் செய்து வருகிறார். தேவைப்படும் சிறிய நகரங்கள் மற்றும் உதவி தேவைப்படும் கிராமப்புறங்களைச் சேர்ந்த பல கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு உதவுகிறார்.
முதியோர் இல்லங்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியிலும், இந்தியாவின் ஈமோஃபீலியா சங்கம் (தாவண்கரே) போன்ற அமைப்புகளுக்காக பல இவர் பல தொண்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். சங்கீத்- சரிதா (இந்திய இராகங்களின் இந்தியத் திரை மூலமான பயணம்), ஆர். டி. பர்மனுக்கு அஞ்சலி, முகேஷுக்கு அஞ்சலி, பாரம்பரிய இசை- இந்தியாவில் இசை பரிணாமம் போன்றவையும் இதில் அடங்கும்.
கார்கில் போர் நடந்தபோது, நிவாரண நிதி சேகரிப்பின் ஒரு பகுதியாக இவர் தெருவோர நிகழ்ச்சிகளை செய்தார். 2019இல் புல்வாமா தாக்குதல் நடந்தபோது, இவர், தனது மாணவர்களுடன் தேசப் பக்தி பாடல்களை பாடினார். பெங்களூரில் உள்ள சித்ரகலா பரிஷத்தில் தனது சொந்த சுர்பஹார் அமைப்பு மூலம் மாநிலத்தின் பிரமுகர்கள் முன்னிலையில் " ஏ வதன் கே நௌஜாவன்" என்ற பாடலை அர்ப்பணித்தார்.
இந்திய பாரம்பரிய இசைத்துறையில் இவரது தொடர்ச்சியான சேவை தொடர்கிறது, இப்போது கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் காலகட்டத்தில் கூட, இவர் பாடல்கள், கேள்வி-பதில் தொடர், எழுச்சியூட்டும் பாடங்களையும் நிகழ்படம் போன்றவற்றைப் பகிர்ந்து கொண்டார். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆத்திரேலியா, நியூசிலாந்து, வளைகுடா நாடுகள், கனடா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
பின்னணிப் பாடல்
[தொகு]இவர் பல கன்னடத் திரைப் பாடல்களையும் பாடியுள்ளார், நாகமண்டலா என்ற படத்தில் ஈ ஹசிரு சிரியலி மற்றும் கம்படா மியாலினா கோம்பேய போன்ற இவரது பாடல்கள் பரவலாக பாராட்டப்பட்டுள்ளன.
தற்போது
[தொகு]தனது கணவர், மன்மோகன் குல்கர்னி தனது இரண்டு குழந்தைகளான சி. சவானி குல்கர்னி மற்றும் சி. நினாத் குல்கர்னி ஆகியோருடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ (12 October 2002). Meet Sangeeta Katti பரணிடப்பட்டது 2003-11-12 at the வந்தவழி இயந்திரம், The Hindu
- ↑ "Sangeetha Katti biography". last.Fm. Last.FM. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- Sangeeta Katti's Official Website பரணிடப்பட்டது 2021-03-16 at the வந்தவழி இயந்திரம்
- Meet Sangeeta Katti பரணிடப்பட்டது 2008-09-25 at the வந்தவழி இயந்திரம்