சக்லேன் முஸ்டாக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சக்லேன் முஸ்டாக்
பாக்கித்தான் பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் சக்லேன் முஸ்டாக்
பட்டப்பெயர் சகி
பிறப்பு 29 திசம்பர் 1976 (1976-12-29) (அகவை 43)
லாகூர், பாக்கித்தான்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 134) செப்டம்பர் 8, 1995: எ இலங்கை
கடைசித் தேர்வு ஏப்ரல் 1, 2004: எ இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 103) செப்டம்பர் 29, 1995: எ இலங்கை
கடைசி ஒருநாள் போட்டி அக்டோபர் 7, 2003:  எ தென்னாப்பிரிக்கா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வுஒ.நாமுதல்தரஏ-தர
ஆட்டங்கள் 49 169 194 323
ஓட்டங்கள் 927 711 3,405 1,339
துடுப்பாட்ட சராசரி 14.48 11.85 16.69 11.64
100கள்/50கள் 1/2 0/0 1/14 0/0
அதிக ஓட்டங்கள் 101* 37* 101* 38*
பந்து வீச்சுகள் 14,070 8,770 44,634 16,062
இலக்குகள் 208 288 833 478
பந்துவீச்சு சராசரி 29.83 21.78 23.56 23.55
சுற்றில் 5 இலக்குகள் 13 6 60 7
ஆட்டத்தில் 10 இலக்குகள் 3 n/a 15 n/a
சிறந்த பந்துவீச்சு 8/164 5/20 8/65 5/20
பிடிகள்/ஸ்டம்புகள் 15/– 40/– 67/– 80/–

டிசம்பர் 8, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சக்லேன் முஸ்டாக் (Saqlain Mushtaq, பிறப்பு: திசம்பர் 29 1976 ), முன்னாள் பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995இலிருந்து 2004வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் இவர் இஸ்லாமாபாத் துடுப்பாட்ட சங்கம், லாகூர்பாட்ஷாஸ், பாக்கித்தான் சர்வதேச ஏர்லைன்ஸ்,சர்ரே மற்றும் சசக்ஸ் ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

சர்வதேச போட்டிகள்[தொகு]

தேர்வுத் துடுப்பாட்டம்[தொகு]

1995 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. செப்டம்பர் 8  இல் பெசாவரில்  நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் 54 பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 8 ஓட்டங்களை எடுத்தார். பந்துவீச்சில் 18 ஓவர்கள் வீசி 48 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 2 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் சராசரி 2.72 ஆகும்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 26 ஓவர்கள் வீசி 58 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 2 இலக்கினைக் கைப்பற்றியுள்ளார். இதில் 10 ஓவர்களை மெய்டனாக வீசினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[1]

இறுதிப் போட்டி[தொகு]

2004 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணி , பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. ஏப்ரல் 28 இல் முல்தானில்  நடைபெற்றஇந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியின் முதல் ஆட்டப் பகுதியில் பந்துவீச்சில் 43 ஓவர்கள் வீசி 204 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.இதில் 1 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் 4 ஓவர்களை மெய்டனாக வீசினார். இவரின் சராசரி 4.74 ஆகும். 6 பந்துகளில் 5 ஓட்டங்கள் எடுத்தார்.பின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் 14 பந்துகளில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் அனில் கும்ப்ளேவின்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 50ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[2]

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்[தொகு]

1995  ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் பாக்கித்தான் அணியில் விளையாடும் வாய்பினைப் பெற்றார், செப்டம்பர் 29இல் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 5 ஓவர்கள் வீசி 27 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 9 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

இறுதிப் போட்டி[தொகு]

2003 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதில் பாக்கித்தான் அணியில் விளையாடும் வாய்பினைப் பெற்றார், அக்டோபர் 7 , இல் நடைபெற்ற தென்னாப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதியாக விளையாடினார். இந்தப் போட்டியில் 8 ஓவர்கள் வீசி 52 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார்.ஆனால் இலக்கினைக் கைப்பற்றவில்லை.இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி டக்வோர்த் லூயிஸ் முறைப்படி 13 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[3]

சான்றுகள்[தொகு]

  1. "1st Test, Sri Lanka tour of Pakistan at Peshawar, Sep 8-11 1995 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-25
  2. "1st Test, India tour of Pakistan at Multan, Mar 28-Apr 1 2004 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-25
  3. 3.0 3.1 "1st ODI, Sri Lanka tour of Pakistan at Gujranwala, Sep 29 1995 | Match Summary | ESPNCricinfo", ESPNcricinfo, retrieved 2018-05-25

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்லேன்_முஸ்டாக்&oldid=2900616" இருந்து மீள்விக்கப்பட்டது