உள்ளடக்கத்துக்குச் செல்

கொண்டை மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொண்டை மீன்கொத்தி
ஆண் பெண் மெ. இலுகுப்ரிசு பலிடா அசாகிவா, யப்பான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மெகாசெரில்
இனம்:
மெ. இலுகுப்ரிசு
இருசொற் பெயரீடு
மெகாசெரில் இலுகுப்ரிசு
தெம்னிக், 1834
     கொண்டை மீன்கொத்தி உத்தேச பரம்பல்

கொண்டை மீன்கொத்தி (Crested kingfisher) (மெகாசெரில் இலுகுப்ரிசு) என்பது மிகப் பெரிய மீன்கொத்தி ஆகும். இது தெற்கு ஆசியாவின் சில பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டது. இது இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து கிழக்கு நோக்கி யப்பான் வரை காணப்படுகிறது. இது மற்ற மூன்று மெகாசெரில் சிற்றின குழுவினை உருவாக்குகிறது.[2]

வகைபாட்டியல்

[தொகு]

1834ஆம் ஆண்டில் இடச்சு விலங்கியல் நிபுணர் கோயன்ராட் ஜேக்கப் தெம்மினிக், அல்சிடோ இலுகுப்ரிசு என இருசொற் பெயரீட்டு அழைத்தார்.[3][4] ஆனால் தற்போதைய பேரினப் பெயரான பெகாசிரில் செருமனியினைச் சார்ந்த இயற்கையாளர் ஜோஹன் ஜேகப்பு காபுவால் 1848ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[5]மெகாசெரில் என்பது பண்டைக் கிரேக்க மெகாஸ், "பெரிய" என்ற பொருளுடன் தற்போதைய செரில் பேரினத்துடனும், லுகுப்ரிசு எனும் இலத்தீன் சொல்லானது "துக்ககரமானது" பொருளுடனும் கூடியது.[6]

இந்த சிற்றினத்தின் கீழ் நான்கு துணை சிற்றினங்கள் உள்ளன:[7]

விளக்கம்

[தொகு]

கொண்டை மீன்கொத்தி 41 முதல் 43 செ.மீ. நீள உடலுடன், கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் கொண்டையுடன் கூடியது.[8] இது சமமாக வால் இறக்கைகளையுடையது. புருவமின்றி புள்ளிகள் கொண்ட மார்பகத்தைக் கொண்டுள்ளது. சில நேரங்களில் ரூபசுடன் தவறாக இனம் காணப்படுகிறது.

இந்தியாவின் மேற்கு சிக்கிமில் உள்ள தாராப் கிராமத்தில்

வரம்பும் வாழிடமும்

[தொகு]
Crested Kingfisher
கொண்டை மீன்கொத்தி, இமயமலைத் தொடர், உத்தரகண்ட், இந்தியா

இது இமயமலை, வட இந்தியாவில் இமயமலை அடிவாரம், வங்காளதேசம், வடக்கு இந்தோசீனா, தென்கிழக்காசியா மற்றும் யப்பானில் வசிக்கிறது. இந்த பறவை முக்கியமாக மலை ஆறுகள் மற்றும் மலைகளின் அடிவாரத்தில் உள்ள பெரிய ஆறுகளில் காணப்படுகிறது.

நடத்தை

[தொகு]

இனப்பெருக்கம்

[தொகு]

இது கூடுகளைக் காட்டில் செங்குத்து கரையில் துளை தோண்டி அமைக்கின்றது. இந்த கரையானது நீரோடை அல்லது பள்ளத்தாக்கில் இருக்கலாம் அல்லது நீர் நிலைகளிலிருந்து 1.5 கிமீ (0.93 மை) தொலைவில் இருக்கலாம். இந்த மீன்கொத்திகள் தங்கள் கால்கள் மற்றும் அலகுகளைப் பயன்படுத்திக் குழி தோண்டுகின்றன. இது 10–15 செ. மீ. (3.9–5.9 அங்குலம்) அகலம் மற்றும் 2–3 மீ (6 அடி 7 அங்குலம்–9 அடி 10 அங்குலம்) நீளம் வரை இருக்கும். பெண் மீன்கொத்தி 4 முதல் 7 முட்டைகள் வரை இடுகின்றன. குஞ்சுகளுக்கு சுமார் 40 நாட்கள் வரை இரண்டு பெற்றோர்களாலும் உணவளிக்கப்படுகிறது.[8]

நிலை

[தொகு]

வடகிழக்கு சீனாவில் இப்பறவையின் எண்ணிக்கையில் சரிவு வாழிட அழிப்பினால் ஏற்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Megaceryle lugubris". IUCN Red List of Threatened Species 2016: e.T22683620A92992024. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22683620A92992024.en. https://www.iucnredlist.org/species/22683620/92992024. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Woodall, P.F. (2017). del Hoyo, J.; Elliott, A.; Sargatal, J.; Christie, D.A.; de Juana, E. (eds.). "Crested Kingfisher (Megaceryle lugubris)". Handbook of the Birds of the World Alive. Lynx Edicions. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.
  3. Temminck, Coenraad Jacob (1838) [1834]. Nouveau recueil de planches coloriées d'oiseaux, pour servir de suite et de complément aux planches enluminées de Buffon (in பிரெஞ்சு). Vol. Volume 4. Paris: F.G. Levrault. Plate 548 text. {{cite book}}: |volume= has extra text (help) The 5 volumes were originally issued in 102 parts, 1820-1839.
  4. Peters, James Lee, ed. (1945). Check-list of Birds of the World. Vol. Volume 5. Cambridge, Massachusetts: Harvard University Press. p. 166. {{cite book}}: |volume= has extra text (help)
  5. Johann Jakob Kaup (1848). "Die Familie der Eisvögel (Alcedidae)" (in de). Verhandlungen des Naturhistorischen Vereins für das Großherzogthum Hessen und Umgebung 2: 68. இணையக் கணினி நூலக மையம்:183221382. 
  6. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. pp. 232, 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
  7. Gill, Frank; Donsker, David, eds. (2017). "Rollers, ground rollers & kingfishers". World Bird List Version 7.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 28 May 2017.
  8. 8.0 8.1 Fry, C. Hilary (1992). Kingfishers, Bee-eaters, and Rollers. Christopher Helm.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொண்டை_மீன்கொத்தி&oldid=3476950" இலிருந்து மீள்விக்கப்பட்டது