கையெழுத்துப் பிரதிகளின் அருங்காட்சியகம்
Miniatür Kitab Muzeyi | |
நிறுவப்பட்டது | 2002 |
---|---|
அமைவிடம் | பழைய நகரம், எண். 1/67, பக்கூ, அசர்பைஜான் |
வகை | புத்தக அருங்காட்சியகம் |
சேகரிப்பு அளவு | 5600 |
நிறுவியவர் | ஷாபியா சலாஹோவா |
இயக்குனர் | ஷாரிபா சலாஹோவா |
கையெழுத்துப் பிரதிகளின் அருங்காட்சியகம் (Baku Museum of Miniature Book) என்பது உலகின் கையெழுத்துப் பிரதிகளின் ஒரே அருங்காட்சியகமாகும். இது அசர்பைசான் நாட்டின் தலைநகரமான பக்கூவின் பழைய நகரம் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. [1] இந்த அருங்காட்சியகம் 2002 ஏப்ரல் 2 அன்று தனது செயல்பாட்டைத் தொடங்கியது. 2015 ஆம் ஆண்டில் இந்த அருங்காட்சியகம் கின்னஸ் உலக சாதனைகளின் புத்தகத்தில் இடம் பெற்ற மிகப்பெரிய தனியார் அருங்காட்சியகமாக திகழ்ந்தது. [2]
நிறுவனர்
[தொகு]உருசிய ஓவியரும், வரைவுக் கலைஞருமான தாஹிர் சலாஹோவின் சகோதரியான சாரிஃபா சலாஹோவா அருங்காட்சியகத்தில் உள்ள கண்காட்சிகளை 30 வருட காலப்பகுதிகளாக சேகரித்தார். அவரது தொகுப்பில் 64 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த 6500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. [3] குழந்தைப் பருவ கல்வியறிவை ஊக்குவிக்கும் நம்பிக்கையுடன் இந்த அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. [4]
அருங்காட்சியகத்தின் பண்புகள்
[தொகு]இந்தத் தொகுப்பில் புரட்சிக்குப் பிந்தைய உருசியா, சோவியத் ஒன்றிய காலத்திலும் வெளியிடப்பட்ட புத்தகங்கள் உள்ளன.
மால்டேவியா, சியார்சியா, உக்ரைன், பெலருஸ் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும், மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா குடியரசுகளிலிருந்தும் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் உள்ளன. சுகோவ்ஸ்கி, பார்டோ, கோகோல், தஸ்தயெவ்ஸ்கி மற்றும் பூஷ்கின் போன்றோரின் படைப்புகள் உட்பட பல அரிய பதிப்புகள் உள்ளன. [5] புகழ்பெற்ற அசர்பைஜான் பாரம்பரிய எழுத்தாளர்களான வாகிஃப், குர்ஷித்பானு நடவன், நிஜாமி கஞ்சாவி, நாசிமி, பிசுலி, சமேத் வர்கன், மிர்சா படாலி அகுந்தோவ் மற்றும் பலரின் நூல்களும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த தொகுப்பில் உள்ள மற்ற குறிப்பிடத்தக்க நூல்களில் குர்ஆனின் 17 ஆம் நூற்றாண்டின் நகலும், [6] 13 ஆம் நூற்றாண்டின் பீட்டர் ஷாஃபர் ( யோகன்னசு கூட்டன்பர்க்கின் வாரிசு) வெளியிட்ட புத்தகமும் அடங்கும். [7]
பார்வையாளர்கள் அருங்காட்சியகத்தில் அரிய பண்டைய மதப் புத்தகங்களையும் காணலாம். அருங்காட்சியகத்தில் உள்ள புத்தகங்களின் வயது 100க்கும் அதிகமாக உள்ளது. 1672இல் சவுதி அரேபியாவில் வெளியிடப்பட்ட குர்ஆன்தான் மிகவும் பழமையான புத்தகம். மேலும், பீட்டில்ஸ் இசைக் குழுவின் பாடல்களைக் கொண்ட ஒரு புத்தகமும் உள்ளது. அருங்காட்சியகத்தில் உள்ள சேகரிப்பில் புதிய வெளியீடுகள் தொடர்ந்து சேர்க்கப்படுகின்றன. [8]
இந்த அருங்காட்சியகத்தில் “சர்வதேசம்”, “பால்டிக் நாடுகள்”, “மிகச்சிறியவை”, “அசர்பைஜான் எழுத்தாளர்கள்”, “சோவியத் சகாப்தம்” “பழமையானது”, “குழந்தைகள்”, “புஷ்கின்”, “மத்திய ஆசியா” போன்ற 15 பிரிவுகள் உள்ளன. அருங்காட்சியகத்தில் 25 மெருகூட்டப்பட்ட கண்காட்சியும் உள்ளன.
அசர்பைஜான் பிரிவில் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் நாட்டின் தற்போதைய மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர்கள் பற்றியவை. அமெரிக்காவின் முன்னாள் குடியரசுத்தலைவர் பராக் ஒபாமா மற்றும் துருக்கிய தேசியவாதத் தலைவர் முஸ்தபா கெமால் அத்ததுர்க் ஆகியோரின் வாழ்க்கைக்காக அர்ப்பணிக்கப்பட்ட புத்தகங்களும் உள்ளன.
இந்த பிரிவில் அசர்பைஜானுக்கு பல்வேறு மாநிலங்களின் தலைவர்கள் வருகை பற்றிய புத்தகங்களும் அடங்கும். அசர்பைஜான் மொழியில் குழந்தைகளுக்கான புத்தகங்களும் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் உருசிய இலக்கியம் குறித்த தனி பகுதியும் உள்ளது.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த உருசியக் கவிஞர்களில் ஒருவரான பூஷ்கின் பற்றியும் அவரது படைப்புகள் பற்றியும் 320 புத்தகங்களை உள்ளடக்கியது. அவற்றில் மிகவும் பிரபலமானவை " யூஜின் ஒன்ஜின் " (1837), " தி குயின் ஆஃப் ஸ்பேட்ஸ் ", "ஸ்டோரீஸ் ஆஃப் பெல்கின்", "த ப்யோகிராபி ஆப் லெர்மொண்டோ" போன்றவை. அத்துடன் மாஸ்கோவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட புஷ்கின் கவிதைகளின் மிகச் சிறிய புத்தகமும் இருக்கிறது. [9]
கண்காட்சிகள்
[தொகு]அருங்காட்சியகத்தின் புத்தகங்கள் காபூல் (1988), இசுதான்புல் (1991), கைஃபா (1994), சீனா (1995), மாஸ்கோ (1997 , 2003), கீவ் , சிட்னி (2000), மெய்ன்ஸ் ( 2003), அங்காரா (2005), பாரிஸ் (1999 மற்றும் 2006), சவுதி அரேபியா (2007), இலண்டன் , மின்ஸ்க் (2009), ஷாங்காய் (2010), பெய்ஜிங், ஹவானா (2011) போன்ற நாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
குறிப்புகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Журнал «Библиотечное дело» - Новости
- ↑ "Azerbaijan museum listed in Guinness Book of Records".
- ↑ "Музей миниатюрной книги работает в Баку". Archived from the original on 2012-07-12. பார்க்கப்பட்ட நாள் 2011-10-13.
- ↑ "Museum of Miniature Books", atlasobscura.com 10/26/2014
- ↑ Сборник статей о музее миниатюрной книги Зарифы Салаховой
- ↑ "Museum of Miniature Books", atlasobscura.com 10/26/2014
- ↑ "Experience Literature in Miniature in Baku" பரணிடப்பட்டது 2018-11-30 at the வந்தவழி இயந்திரம், "The Prisma" 02/19/2012
- ↑ "Experience literature in miniature in Baku". Archived from the original on 2018-11-30. பார்க்கப்பட்ட நாள் 2020-11-20.
- ↑ "Baku's Miniature Book Museum".