குல் தாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குல் தாங்
தோன்றிய நாடு இந்தியா
பாக்கித்தான்
தனிக்கூறுகள்
எடை ஆண் 55–85 lb (25–39 kg)
பெண் 45–65 lb (20–29 kg)
உயரம் ஆண் 18–22 அங் (46–56 cm)
பெண் 18–22 அங் (46–56 cm)
மேல்தோல் குறுகிய, அடர்ந்த
நிறம் வெள்ளை, முகத்தில் எப்போதாவது சில அடையாளங்கள்
வாழ்நாள் 10–14 ஆண்டுகள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

குல் தாங் (Gull Dong) என்பது இந்தியாவிலும் பாக்கித்தானிலும் காணப்படும் நாய் இனமாகும். இது பெரும்பாலும் நாய் சண்டை, வேட்டை மற்றும் காவலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.[1]

தோற்றம்[தொகு]

குல் தாங் என்பது ஒரு குல் தெரியர் நாயினை புல்லி குத்தாவுடன் கலப்புச் செய்து தோற்றுவிக்கப்பட்ட இனமாகும். இவை பிரித்தானியாவின் இந்தியாவில் தோன்றியது. இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இதன் "வேகத்திற்கும் உறுதிக்கும்" குல் தாங் கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் பிரித்தானியா ஆட்சிக்காலத்தில் புல் தெரியர்கள் வடமேற்கு இந்தியத் துணைக்கண்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இது இப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானின் நவீன குடியரசுகளை உள்ளடக்கிய பகுதியாகும். பிரித்தானிய இந்தியாவில், புல் தெரியர் நாய் இனம் பிரபலமானது.[2] இந்திய புல் தெரியர் மன்றம், கல்கத்தாவில் நிறுவப்பட்டது. புல் தெரியர்கள் உள்ளூர் இனங்களுடன் கலப்புச் செய்யப்பட்டன. இது பெரும்பாலும் இந்தியப் புல் தெரியர் என்றும் பாகிஸ்தான் புல் தெரியர் என்றும் அழைக்கப்படுகிறது. குல் தெரியர் என்பது இசுடாபோர்ட்ஷையர் புல் தெரியரைப் போன்ற குறுகிய, மென்மையான ரோமங்களைக் கொண்ட நடுத்தர அளவிலான நாய் ஆகும்.[3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The bloody world of dog fighting: Victory or death, there is no mercy!". Express Tribune. Archived from the original on 11 November 2020.
  2. Copeman, George Henry; Rumble, Tony (1983) (in en). Capital as an Incentive. Jupiter Books. பக். 115. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780881689907. "The breed's popularity spread to India and Africa and to other countries of the Commonwealth, from whence it travelled to the United States and elsewhere." 
  3. Kemmerer, Lisa (27 August 2015). Bear Necessities: Rescue, Rehabilitation, Sanctuary, and Advocacy. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789004293090. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குல்_தாங்&oldid=3510915" இலிருந்து மீள்விக்கப்பட்டது