இராம்பூர் வேட்டைநாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராம்பூர் வேட்டைநாய்
இராம்பூர் வேட்டைநாய்
பிற பெயர்கள் வட இந்திய வேட்டைநாய்
இராம்பூர் நாய்
இராம்பூர் வேட்டைநாய்
தோன்றிய நாடு இந்தியா
தனிக்கூறுகள்
எடை 23–32 kg (51–71 lb)
உயரம் 56–76 cm (22–30 அங்)
மேல்தோல் குட்டை
வாழ்நாள் 10-12 ஆண்டுகள்
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

இராம்பூர் வேட்டைநாய் (Rampur Greyhound) என்பது தில்லிக்கும் பரேலிக்கும் இடையில் அமைந்துள்ள வட இந்தியாவின் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த நீண்ட மெல்லிய கால்களும் கூரிய பாயும் விரைவோட்டமுடைய முயல் வேட்டை நாய் வகையினைச் சார்ந்தது. ராம்பூர் வேட்டைநாய் ஆரம்பக்காலத்தில் ஆப்கானித்தான் வேட்டைநாயிலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது, 19ஆம் நூற்றாண்டில் இந்த இனத்தின் வேகத்தை மேம்படுத்துவதற்காக வேட்டைநாய்களில் விரிவான இனக்கலப்பு மூலம் இவற்றின் தற்போதைய இனம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.[1][2][3] ராம்பூர் வேட்டைநாய் குட்டையான முடி கொண்ட, சக்தி வாய்ந்த கட்டமைக்கப்பட்ட வேட்டைநாயாகும். இது தோற்றத்தில் இசுலோகியை ஒத்திருக்கிறது. இது தோன்றிய பகுதிக்கு வெளியே அரிதாகவே காணப்படுகிறது. இங்கு இது வேட்டை நாயாகப் பராமரிக்கப்படுகிறது. அரிதாக ஒரு துணையாக வளர்க்கப்படுகிறது.[2][3][4]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. David Alderton (2000). Hounds of the World. Shrewsbury: Swan Hill Press. பக். 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85310-912-6. 
  2. 2.0 2.1 Bruce Fogle (2009). The encyclopedia of the dog. New York: DK Publishing. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7566-6004-8. https://archive.org/details/encyclopediaofdo0000fogl. 
  3. 3.0 3.1 Hancock, David (2012). Sighthounds: their form, their function and their future. Ramsbury, Marlborough: The Crowood Press Ltd. பக். 109–112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84797-392-4. https://archive.org/details/sighthoundstheir0000hanc. 
  4. Mason, Walter E. (1915). Dogs of all nations. San Francisco: The Panama-Pacific International Exposition. பக். 40. https://archive.org/details/dogsofallnations00masorich. 

வெளி இணைப்புகள்[தொகு]