உள்ளடக்கத்துக்குச் செல்

சிப்பிப்பாறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிப்பிப்பாறை
தோன்றிய நாடு இந்தியா
தனிக்கூறுகள்
உயரம் ஆண் 63 cm (25 அங்) பொதுவாக
பெண் 56 cm (22 அங்) பொதுவாக
மேல்தோல் Short
வாழ்நாள் 13 முதல் 14 வருடங்கள் வரை
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்)

சிப்பிப்பாறை (Chippiparai) தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு நாய் இனமாகும்.  தற்காலத்தில் இது பெரியாறு ஏரியைச் சுற்றிய பகுதியில் காணப்படுகிறது. இது முதன்மையாக காட்டுப்பன்றி, மான், முயல் ஆகியவற்றை வேட்டையாட பயன்படுத்தப்படுகிறது. இது வீட்டுக் காவலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்துக்கு அருகே உள்ள சிப்பிப்பாறையில் அரச குடும்பத்தினரால் இனப்பெருக்கம் செய்யப்பட்டன. இந்த நாயினங்கள் திருநெல்வேலி மற்றும் மதுரையை ஆண்ட ஆட்சியாளர்களால் மதிப்புமிக்க மற்றும் கண்ணியமிக்க ஒரு சின்னமாக வளர்க்கப்பட்டு வந்தது.[1][2]

விளக்கம்[தொகு]

தலையின் தோற்றம்

தோற்றம்[தொகு]

இவை வழக்கமாக இளமஞ்சள் நிறத்தில், செம்மண்ணிறத்தவையாகவும், மிக லேசான வெள்ளி, சாம்பல் நிறக் கோடுகளுடன் மற்றும் நீண்ட வளைவான வாலுடன் இருக்கும். மற்ற நிறங்களாக சாம்பல் மற்றும் இளமஞ்சளில் சில  வேறுபாடுகள், கூட இருக்கலாம். இது ஒரு நடுத்தர அளவு நாய், இவை  25 அங்குலம் அல்லது 63.5 செ.மீ தோள் உயரம் கொண்டவை.,[3] அண்மைய கணக்கீட்டின்படி ஆண் நாய்கள் தோராயமாக 63.0 செமீ, பெண் நாய்கள் 56.0 செமீ தோள் உயரம் உடையவையாக உள்ளன.[4] இதன் உடல் முடிகள் குட்டையானவையாக பளபளப்பானவையாக உள்ளது இதனால் இவை வெப்பத்தைத் தாங்க உதவியாக உள்ளன. இதன் முடியின் நீளம் குறைவாக உள்ளதால் இவை தெள்ளுப் பூச்சிகளை எளிதாக புரண்டு படுத்து உதிர்க்கின்றன. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஸ்லோகி, அல்லது ராம்பூர் வேட்டை நாய்களை மிகவும் ஒத்ததாக இருக்கிறது.

ஆண் நாய்

மேற்கோள்[தொகு]

  1. Karthickeyan, S.M.K.; Ravimurugan T.; Hisham, A.; & Sivaselvam, S.N. Chippiparai breed of dogs in Tamil Nadu: An assessment of physical and performance characteristics.
  2. [://www.hindutamil.in/news/supplements/uyir-moochi/665818-chippiparai-dogs-1.html]
  3. Dr Gautam Unny. "Chippiparai- Pets - Indiatimes". Pets.indiatimes.com. Archived from the original on 2014-05-08. பார்க்கப்பட்ட நாள் 2014-05-08.
  4. Karthickeyan, S.M.K.; Ravimurugan T.; Hisham, A.; & Sivaselvam, S.N. Chippiparai breed of dogs in Tamil Nadu: An assessment of physical and performance characteristics.

வெளி இணைப்புகள்[தொகு]

இரா.சிவசித்து தி இந்து 2017 அக்டோபர் 28

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிப்பிப்பாறை&oldid=3554067" இலிருந்து மீள்விக்கப்பட்டது