இராமநாதபுரம் மண்டை நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படிமம்:RAMANATHAPURAM SAMBAL INDIAN DOG BREED.jpg
இராமநாதபுரம் கோம்ப நாய்

இராமநாதபுரம் கோம்ப நாய், இராமநாதபுரம் கோம்பை நாய் அல்லது மந்தை நாய் (Ramanathapuram komba dog அல்லது manthai dog) என்பது தமிழ்நாட்டின், இராமநாதபுரம் மாவட்டத்தில் காணப்படும் ஒரு நாய் இனமாகும்.[1] இரமநாதபுர மாவட்டத்தின் பல கோயில் சிற்பங்களில், இந்த நாயின் சிற்பம் காணப்படுவதால் இந்த மாவட்டத்தில் இந்த நாய் நீண்டகாலமாக இருப்பது தெரியவருகிறது.

விளக்கம்[தொகு]

இந்த நாயானது 26 முதல் 30 அங்குலம் வரை உயரமானதாகவும், பெரிய உடலையும், பெரிய கால்களையும், உறுதியான எலும்புகளுடனும், தடிமனான வாலைக் கொண்டதாக இருக்கும். மேலும் இதன் தலை பெரியதாகவும், அகன்ற தாடையுடன், கூர்மையற்ற தடித்த மூக்கை உடையதாகவும், முன் நெற்றி அகலமாக வளைந்ததாகவும், ஆட்டுக் காதுகளைப் போல நீண்டு தொங்கும் பெரிய காதுகளைக் கொண்டதாகவும் இருக்கும். இதன் அடிக்கால்களும், வால் முனையும் வெள்ளையாக இருக்கும். இது 18 முதல் 19 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

உட்பிரிவுகள்[தொகு]

இந்த நாயகளானது அவற்றின் நிறத்தைக் கொண்டு 13 பிரிவுகளாக உள்ளன அவை:

  1. சாம்பல் நாய் (சாம்பல் நிறம்)
  2. கருமறை (கறுப்பும் வெள்ளையும் கலந்த நிறம்)
  3. புள்ளிமறை (கருப்பு உடலில் வெள்ளைத் திட்டுக்கள்)
  4. பாலமறை சாம்பல் (வெள்ளையும், சாம்பல் நிறமும் கலந்தது)
  5. புலிச்சாரல் (உடலில் புலிபோல வரிகள் உள்ளது)
  6. பொடி நிறமும் வெள்ளையும் கலந்த நாய்
  7. பிள்ளை நாய்
  8. மயிலை நாய் (வெள்ளை நிறம்)
  9. செவலைச் சாம்பல் (சாப்பலும் சிவப்பும் கலந்தது)
  10. செவலை (சிவப்பு நிறம்)
  11. கரும்சாம்பல் (கருஞ்சாம்பல் நிறம்)
  12. வெள்ளை சாம்பல் (வெண்மையும், சாம்பலும் கலந்த நிறம்)
  13. பாலமறை (வெள்ளை நிற உடலில் சிவப்புத் திட்டுக்கள்)

பயன்பாடு[தொகு]

இந்த நாய்களை பழங்காலத்தில் போருக்கும், பன்றி, முயல் வேட்டைக்கும் பயன்படுத்தியுள்ளனர். தற்போது இந்த மாவட்டத்தில் ஆட்டு மந்தைகளை மேய்க்கும் இடையர் இன மக்களால், தங்கள் ஆட்டுமந்தைகளைப் பாதுகாக்க மேய்ப்பு நாயாக வளர்க்கப்படுகிறது. ஆட்டு மந்தைகளைக் காப்பதால் இப்பெயரென்றும், இதன் தலை பெரிதாக இருப்பதால் இப்பெயர் என்றும் இருவிதமாக கூறப்படுகிறது. இது கோம்பை நாயின் ஒரு வடிவம் என்றும் கூறுவோர் சிலர் இதை இராமநாதபுரம் கோம்பை என்றும் குறிப்பிடுகின்றனர்.[2]

படக்காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. இரா. சிவசித்து (11 நவம்பர் 2017). "அசல் சிப்பிப்பாறை - கடைசிப் பதிவு". கட்டுரை. இந்து தமிழ். 8 ஏப்ரல் 2019 அன்று பார்க்கப்பட்டது.
  2. "வானகமே இளவெயிலே மரச்செறிவே 23: மந்தையை வழிநடத்தும் மேய்ப்பு நாய்கள்". இந்து தமிழ் திசை (2 மார்ச், 2019)

வெளி இணைப்புகள்[தொகு]

யூடியூபில் இராமநாதபுரம் மண்டை நாய் குறித்து