கோம்பை நாய்
Appearance
பிற பெயர்கள் | கோம்பை Indian Boar Hound Indian Malinois Indian Boardog | ||||||
---|---|---|---|---|---|---|---|
தோன்றிய நாடு | இந்தியா | ||||||
| |||||||
| |||||||
நாய் (கேனிஸ் லூபிஸ் பெமிலியாரிஸ்) |
கோம்பை நாய் என்பது தமிழக நாய் இனங்களுள் ஒன்றாகும்.[1] இந்த நாய் இனம் தற்போதும் தமிழகப்பகுதியில் உள்ளது. இது வேட்டைநாய் வகையினைச் சார்ந்ததாகும். அதிக வீரம் கொண்ட நாயாகவும், கட்டளைகளுக்கு கீழ்படியும் தன்மையும் உள்ளதாக அறியப்படுகிறது. இந்த வேட்டைநாய் இனத்தினை காவலுக்காகவும் வளர்க்கின்றனர்.[2]
இந்த நாய் இனத்தினை டெஸ்மாண்ட் மோரிஸ் எனும் விலங்கியல் நிபுணர் செங்கோட்டை நாய்கள் எனும் அழிவுற்ற நாய் இனத்தின் உறவுகளாக குறிப்பிட்டுள்ளார். செங்கோட்டை நாய்கள் என்பவை புலியையே வேட்டையாடும் வீரம் கொண்டவையாக அறியப்படுகின்றன. இரண்டு செங்கோட்டை நாய்கள் இணைந்து புலியை வென்றுவிடுமென கூறப்படுகிறது.
செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெஸ்மாண்ட் மோரிஸ்.
ஆதாரங்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- புலியை மிரட்டிய கோம்பை இரா. சிவசித்து, தி இந்து தமிழ், 2017 நவம்பர் 18
- எளிய மக்களுடன் பயணிக்கும் நாய்! இரா. சிவசித்து, தி இந்து தமிழ், 2017 நவம்பர் 25