காய்கடி நாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காய்கடி (Kaikadi) என்பது ஒரு நாய் இனமாகும்,[1] இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் வாழக்கூடிய நாடோடி மக்கள் பெயரால் அழைக்கப்படுகிறது. காய்கடி நாய்கள்  கால்நடைகளை பாதுகாப்பதில் முன்னணியானவை. மேலும் இவை முயல் போன்றவற்றை வேட்டையாடும் திறமை கொண்டவை. இந்த நாய்கள் கிராமப் பகுதி வீடுகளில்  பரந்த திறந்தவெளியில் காவலுக்கு உகந்தவை.[2]

தோற்றம்[தொகு]

இவை, வெள்ளை பழுப்பு  கருப்பு ஆகிய நிறங்களில் காணப்படுகின்றன. காய்கடி நாய்கள் சிறியவை (சுமார் 40 சென்டிமீட்டர் அல்லது அதைவிட குறைந்தவை) கால்கள் மெல்லியதாக நீண்டு இருக்கும், என்றாலும் கால் தொடைகள் சக்தி வாய்ந்தவை. இவற்றின் வால் நீண்டு இருக்கும். நீண்ட எச்சரிக்கை மிகுந்த காதுகளும், நீண்ட மற்றும் மெல்லிய தலையும், குறுகிய முடியும் உடைய இந்த நாயினம் குறைந்த பராமரிப்பு தேவைப்படுவது ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காய்கடி_நாய்&oldid=2433874" இருந்து மீள்விக்கப்பட்டது