உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பிடுபூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Mantodea
புதைப்படிவ காலம்:145–0 Ma
கிரீத்தேசியக் காலம்–தற்காலம் வரை
Adult female Sphodromantis viridis
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
Pterygota
உள்வகுப்பு:
பெருவரிசை:
வரிசை:
Mantodea

Families

Acanthopidae
Amorphoscelidae
Chaeteessidae
Empusidae
Eremiaphilidae
Hymenopodidae
Iridopterygidae
Liturgusidae
Mantidae
Mantoididae
Metallyticidae
Sibyllidae
Tarachodidae
Thespidae
Toxoderidae

வேறு பெயர்கள்
  • Manteodea Burmeister, 1829
  • Mantearia
  • Mantoptera

கும்பிடுப்பூச்சி அல்லதுதயிர்க்கடை பூச்சி[1] இடையன் பூச்சி[2] என்பது வெட்டுக்கிளிகள் போன்ற இனத்தைச் சேர்ந்த ஒருவகை பூச்சியினமாகும். பிறப் பூச்சிகளைப் போலக் கும்பிடுப்பூச்சிகளுக்கும் மூன்று அடுக்கு உடலமைப்பு உள்ளது. அதாவது தலை, நெஞ்சுக்கூடு மற்றும் அடிவயிறு பகுதி. பெண் கும்பிடுப்பூச்சிகள் ஆண் கும்பிடுப்பூச்சிகளை விட உடலமைப்பில் பெரிதாகவும், வலிமையானதாகவும் காணப்படும்.

பெயர் விளக்கம்

[தொகு]

கும்பிடுப்பூச்சி தன் முன்னங்கால்களை நீட்டிக் கொண்டு நிற்பது வழக்கம். இதனால், அப்பூச்சி பார்ப்பதற்கு கும்பிடுவதைப் போல தோன்றும், எனவே அப்பூச்சியைக் கும்பிடுப்பூச்சி என்று அழைப்பது வழக்கம்[3]. மேலும், தமிழ் மக்களுக்கு இடையே அப்பூச்சியைப் பெருமாள் பூச்சி என்றழைப்பதும் வழக்கமான ஒன்றாகும்.

விளக்கம்

[தொகு]

கும்பிடுபூச்சிகள் பொதுவாக பச்சை, பழுப்பு போன்ற நிறங்களில் தாவரங்களில் உருமறைப்புத் தோற்றத்துடன் காணப்படும். இது வேட்டையாடிப் பூச்சி ஆகும். இதன் வலுவான, முட்களைக் கொண்ட முன்னங்கால்களைக் கொண்டு, பிற பூச்சிகளை வேட்டையாடுகிறது. உட்கார்ந்தபடியும் பறந்தபடியும் இவை இரையைப் பிடிக்கும் திறன் கொண்டவை. இந்தப் பூச்சியில் சிறியது முதல் பெரியதுவரை பல்வேறு வகைகள் உண்டு. தோட்டப் பகுதிகள், புல்வெளிகள், காட்டுப் பகுதிகளில் தென்படும். தனியாகவே இருக்கும். இரவில் சுறுசுறுப்பாகக் காணப்படும், பகலிலும் தென்படக்கூடியன. ஒளியை நோக்கி ஈர்க்கப்படும்.

சில இளம் கும்பிடு பூச்சிகள் கறுப்பும் பச்சையும் கலந்ததாக இருப்பதுண்டு. இளமையாக இருக்கும்போது ஒரு நிறத்திலும் வளர்ந்த பிறகு வேறொரு நிறத்தை அடைவதும் பூச்சிகளில் இயல்பு. இளம்பூச்சிகளுக்குப் பொதுவாக இறக்கை இருக்காது. இதனால் இளம் பூச்சிகள் பார்ப்பதற்கு சற்றே நீண்ட கட்டெறும்பைப் போன்று இருக்கும்.[4]

படத்தொகுப்பு

[தொகு]

மூலம்

[தொகு]
  • Ehrmann, Reinhard (2002). Mantodea Gottesanbeterinnen der Welt (in German). Münster: Natur und Tier-Verlag. ISBN 978-3-931587-60-4.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  • Klausnitzer, Bernhard (1987). Insects: Their Biology and Cultural History. Unknown. ISBN 0-87663-666-0.
  • O'Toole, Christopher (2002). Firefly Encyclopedia of Insects and Spiders. Firefly. ISBN 1-55297-612-2.
  • Checklist of Mantodea originally compiled by the Los Angeles County Museum
  • Tree of Life — Mantodea பரணிடப்பட்டது 2007-09-08 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சருகுகளுக்கு இடையே கும்பிடு பூச்சி". கட்டுரை. தி இந்து. 4 பெப்ரவரி 2017. Retrieved 4 பெப்ரவரி 2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. தமிழ்க் கலைக்களஞ்சியம் பாகம் 1 பக்கம் 537
  3. Bullock, William. A companion to the London Museum and Pantherion. 1812. may be downloaded from: http://archive.org/details/companiontomrbul00bull
  4. ஆதி வள்ளியப்பன் (28 அக்டோபர் 2017). "நீளக் கட்டெறும்பு?". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 28 அக்டோபர் 2017.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mantodea
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கும்பிடுபூச்சி&oldid=3600867" இலிருந்து மீள்விக்கப்பட்டது