கழுதைப்பிட்டி, மூலிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழுதைப்பிட்டி, மூலிகை : Acanthus ilicifolius

கழுதைப்பிட்டி அல்லது கழிமுள்ளி (தாவரவியல் வகைப்பாடு:Acanthus ilicifolius[1] , ஆங்கிலம்: Holy Mangrove; சீனம் : 老鼠勒) , கழுதைமுள்ளி[2] என அழைக்கப்படும். இச்செடி, தமிழகத்தின் மூலிகைகளில் ஒன்றாகும்.மேலும், இது அலையாத்தித் தாவரங்கள் அல்லது கண்டல் தாவரங்களில் (mangrove) ஒன்றாகும். இது கடலின் கரையோரங்களில் உள்ள, உவர் சதுப்பு நிலங்களில் வளரும் தாவரம் ஆகும். இது தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் என்பதன் கீ்ழ் வரும், தாவரங்களில் ஒன்றாகும்.[3] இந்திய, சீன பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது பயன்படுத்தப் படுகிறது. [4]

பெயரியல்[தொகு]

இதன் தாயகம் இலங்கையின் புங்குடு தீவில் இருக்கும் பகுதியான, கழுதைப்பிட்டித் துறை என அறியப்படுகிறது. அதனால் தான் இதன் பெயரில் கழுதைப்பிட்டி என்ற அடைமொழி அமைகிறது. இவற்றில் மூன்று இனங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இருப்பினும், வங்காளதேசம், கம்போடியா, சீனா, ஆங்காங், இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, மக்காவு, பாக்கித்தான், சிறீலங்கா, தைவான், கிழக்குத் தீமோர், வியட்நாம்,[5] பசிபிக் தீவுகள்[6][7] ஆகிய நாடுகளிலும் இது காணப்படுகின்றன.

தாவர இயல்புகள்[தொகு]

தச்சுத்தேனீ

இது இந்தியா, முதல் ஆத்திரேலியா வரை உள்ள பல நாட்டுக் கடற்கரையின், சதுப்பு நிலக் காடுகளில் காணப்படுகிறது. இலைகளின் விளிம்புகள் முட்களுடன் காணப்படும். அதிகப்படியான உப்பு, இலையின் வெளியில் தள்ளப்படுவதால், சில நேரங்களில் உடலின் மேற்பகுதி உப்புப் படர்ந்து காணப்படும். மூன்று மீட்டர் வரை வளரக்கூடியது. பூக்களின் இதழ் வெளிர் நீலமாக இருக்கும். ஒரு பெரிய பூவிதழை உடையது. பூக்கள் கொத்துகளாகக் காணப்படுகிறது. திசம்பர் முதல் மே மாதம் வரை பூக்கள் பூக்கின்றன. விதைப்பை வெடிக்கும் போது, விதைகள், இரண்டு மீட்டர் சென்று விழும் வல்லமையைப் பெற்றிருக்கிறது. தாவர இனப்பால்(sap) உப்புச் சுவை உடையதாக உள்ளது. மகரந்தச்சேர்க்கையானது, தச்சுத்தேனீக்களினால் (carpenter bees) பெரும்பாலும் நடக்கிறது. சில நேரங்களில் தேன்சிட்டுகளாலும் (sunbirds) நடக்கிறது. தாவரத்தின் மேற்புற பகுதிகள் இஞ்சியுடன் சேர்த்து பயன்படுத்தும் போது, கால்களில் ஏற்படும் புண்கள், மலச்சிக்கல் போன்றவை குணமாகின்றன. குழந்தை பிறத்தழின் போது, அது எளிதாக, சில சித்த மருத்துவர்கள், இந்த இலைச்சாற்றைக் குடிக்க கொடுக்கப்படுகிறது. பாம்பு கடிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அலங்காரத்தாவரமாக பலர் இதனை வளர்க்கிறார்கள்.

வகைப்பாடு[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:

தாவர வகைப்பாட்டியல் வரலாற்றின் புதிய வகைப்பாட்டு முறைகளை, விக்கியினங்கள், விக்கித்தரவு ஆகிய திட்டங்களில் இற்றைப்படுத்தப்படுகின்றன. எனவே, இங்குள்ள தரவுகளை, கீழுள்ள இணைப்புகளின் வழியே சென்று சரிபார்த்துக் கொள்ளவும்.

கழுதைப்பிட்டி, மூலிகை
முன்னிலைஉயிரினம் (உயிரலகு)
படம்
வகைப்பாடுஇனம்
தோற்ற வகைஅகான்தசுத் தாவரப்பேரினம்
பெயர்Holy Mangrove, 老鼠簕, 厦门老鼠簕, 老鼠簕 (ஆங்கிலம்)
IUCN எண்168780
IUCN நிலைதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்
பொதுவகக் காட்சியகம்கழுதைப்பிட்டி, மூலிகை
பொதுவகப் பகுப்புகழுதைப்பிட்டி, மூலிகை
GRIN தளம்https://npgsweb.ars-grin.gov/gringlobal/taxonomydetail.aspx?id=1079
Superregnum
Eukaryota
கழுதைப்பிட்டி, மூலிகை
உயிரியல் வகைப்பாடு

ஏபிச்சி III[தொகு]

Classification System: APG III

Superregnum: Eukaryota
Regnum: Plantae
Cladus: பூக்கும் தாவரங்கள்
Angiosperms
Cladus: Eudicots
Cladus: Core eudicots
Cladus: Asterids
Cladus: Euasterids I
Ordo: Lamiales
Familia: Acanthaceae
Subfamilia: Acanthoideae
Tribus: Acantheae
Genus: Acanthus
Species: Acanthus ilicifolius

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Acanthus ilicifolius". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்பிரவரி 2024.
    "Acanthus ilicifolius". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 22 பெப்பிரவரி 2024.
  2. http://dsalsrv02.uchicago.edu/cgi-bin/philologic/getobject.pl?c.2:1:5460.tamillex.2142133.2142142[தொடர்பிழந்த இணைப்பு]
  3. http://www.iucnredlist.org/details/full/168780/0
  4. https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3612333/
  5. http://www.iucnredlist.org/details/168780/0
  6. Barker, R. M. (1986). "A taxonomic revision of Australian Acanthaceae". Journal of the Adelaide Botanic Gardens 9: (1–) 64–75 (–286). http://www.environment.sa.gov.au/files/789a2a67-4e20-42e0-ae7b-9f8600be36be/JABG09P001_Barker.pdf. பார்த்த நாள்: 29 May 2013. 
  7. AustTRFPK6.1 url= http://keys.trin.org.au:8080/key-server/data/0e0f0504-0103-430d-8004-060d07080d04/media/Html/taxon/Acanthus_ilicifolius.htm | accessdate= 29 May 2013

உயவுத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

இவற்றையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுதைப்பிட்டி,_மூலிகை&oldid=3900403" இலிருந்து மீள்விக்கப்பட்டது