உவர்ச் சதுப்புநிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கானெக்டிக்கட்டிலுள்ள அத்திலாந்திக்கரை உவர்ச் சதுப்புநிலம்.
புரூக்லினில் உள்ள கடற் பூங்காவிலுள்ள உவர்ச் சதுப்பு நிலம்.

உவர்ச் சதுப்புநிலம் என்பது நிலத்துக்கும், உவர் நீருக்கும் இடையில் அமைந்துள்ள மாறுநிலை, அலையிடைச் சதுப்புநில வகையாகும். இதில் பெருமளவு, உவர்நீரைத் தாக்குப்பிடிக்கக் கூடிய தாவரங்கள் காணப்படுகின்றன. உவர்ச் சதுப்புநிலங்கள், பிற ஈரநிலங்களுடன் சேர்த்துப் பயனற்ற நிலங்களாகக் கருதப்பட்டு வந்தன. ஆனால், இன்று இவ்வகை நிலங்கள், வெப்பவலயக் காடுகளுடன் போட்டியிடக் கூடிய அளவு உயிரியல் உற்பத்தித்திறன் கொண்டவை என்பது அறிந்ததே. அன்றாட கடல்மட்ட ஏற்ற இறக்கங்கள் சத்துப் பொருட்களைக் கொண்டுவருதல், உவர்நீரில் இடம்பெறும் இயல்பான வேதியியல் செயற்பாடுகள், வந்துசேரும் சத்துப் பொருட்கள் தாவர வேர்களில் படிதல், நிழலில்லாத ஆழமற்ற நீரில் பாசிக்கள் வளர்தல் என்பன இதற்கான காரணங்களிற் சிலவாகும். வட அமெரிக்கக் குடாக் கரைகளில் உள்ளதுபோல், உவர்ச் சதுப்புநிலங்கள் தீவிர காலநிலைகளிலிருந்து பாதுகாப்பு வழங்குகின்றன. கடந்தகாலத்தில் பெருமளவு உவர்ச் சதுப்பு நிலங்கள், வேளாண்மைத் தேவைகளுக்காகவும் நகர மேம்பாட்டுக்காகவும் மீட்கப்பட்டன. ஆனால் தற்காலத்தில் ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களில் இந்நிலப் பகுதிகள் சட்டங்கள் மூலம் பாதுகாக்கப்பட்டு உள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உவர்ச்_சதுப்புநிலம்&oldid=3247398" இருந்து மீள்விக்கப்பட்டது