கஞ்சிரப்பள்ளி

ஆள்கூறுகள்: 9°33′0″N 76°47′0″E / 9.55000°N 76.78333°E / 9.55000; 76.78333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கஞ்சிரப்பள்ளி
நகரம்
ஒரு மழைக்கால காலை நேரத்தில் கஞ்சிரப்பள்ளி
ஒரு மழைக்கால காலை நேரத்தில் கஞ்சிரப்பள்ளி
கஞ்சிரப்பள்ளி is located in கேரளம்
கஞ்சிரப்பள்ளி
கஞ்சிரப்பள்ளி
கேரளாவில் கஞ்சிரப்பள்ளியின் அமைவிடம்
கஞ்சிரப்பள்ளி is located in இந்தியா
கஞ்சிரப்பள்ளி
கஞ்சிரப்பள்ளி
கஞ்சிரப்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°33′0″N 76°47′0″E / 9.55000°N 76.78333°E / 9.55000; 76.78333
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்கோட்டயம்
அரசு
 • வகைபேரூராட்சி
பரப்பளவு
 • மொத்தம்52.47 km2 (20.26 sq mi)
மக்கள்தொகை (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு)
 • மொத்தம்43,057
 • அடர்த்தி820/km2 (2,100/sq mi)
மொழிகள்
 • அலுவல்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்686507 (கஞ்சிரப்பள்ளி தலைமை அஞ்சல் நிலையம்)
தொலைபேசி இணைப்பு எண்04828
வாகனப் பதிவுகேஎல்-34 (கஞ்சிரப்பள்ளி) அல்லது கேஎல்-05 (கோட்டயம்)
கடற்கரை நகரம்0 கிலோமீட்டர்கள் (0 mi)
அருகிலுள்ள நகரங்கள்கோட்டயம், தொடுபுழா, பாளை, பொன்குன்னம்
மக்களவைத் தொகுதிபத்தனம்திட்டா
காலநிலைவெப்பமண்டலம் (கோப்பென்)
சராசரி கோடைகால வெப்பநிலை31 °C (88 °F)
சராசரி குளிர்கால வெப்பநிலை23 °C (73 °F)
மதுர மீனாட்சி கோவில் ஊர்வலம்

கஞ்சிரப்பள்ளி (Kanjirappally) தென்னிந்திய மாநிலமான கேரளா மாநிலத்தின் கோட்டயம் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும்.[1] இது மாவட்டத் தலைநகரிலிருந்து சுமார் 38 கிமீ (24 மைல்) தூரத்திலுள்ளது.


பெயர்க் காரணம்[தொகு]

கஞ்சிரப்பள்ளி என்ற பெயர் இந்த இடங்களில் அதிகமாகக் காணப்படும் எட்டி (மலையாளம்: கஞ்சிர மரம்) மரத்திலிருந்து தோன்றியதாக நம்பப்படுகிறது.[2]

காலநிலை[தொகு]

கேரளாவின் அதிக மழைப்பொழியும் பகுதியாக இந்நகரம் உள்ளது. மேலும் கோடைக்காலத்திலும் அதிக மழையை பெறுகிறது. இந்தியாவில் சமமான மழைக்காடுகள் வகை காலநிலையை அனுபவிக்கும் மிகச் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். சராசரி ஆண்டு மழை 4156 மிமீ ஆக இருக்கிறது.[3]

போக்குவரத்து[தொகு]

தேசிய நெடுஞ்சாலை (பழைய தே.நெ.எண் 220 கொல்லம் - தேனி இப்போது 83 ) கஞ்சிராப்பள்ளியை முக்கிய அருகிலுள்ள நகரங்களுடன் இணைக்கிறது. கோட்டயம் - குமுளி சாலை கஞ்சிராப்பள்ளியை முண்டக்காயம் போன்ற முக்கிய அருகிலுள்ள நகரங்களுடன் இணைக்கிறது. கோட்டயம் ( 38 கிமீ ), குட்டிக்கானம் ( 34 கிமீ), குமுளி ( 72 கிமீ ), பொன்குன்னம் ( 5 கிமீ )

அருகிலுள்ள கொச்சி பன்னாட்டு வானூர்தி நிலையம் நெடும்பாசேரியில் உள்ளது. அருகிலுள்ள தொடர் வண்டி நிலையம் கோட்டயம், சங்கனாச்சேரியில் உள்ளது. அருகிலுள்ள கேரள மாநிலச் சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து நிலையம் பொன்குன்னத்தில் உள்ளது .

சபரிகிரி பன்னாட்டு வானூர்தி நிலையம்[தொகு]

பத்தனம்திட்டா மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ள சபரிமலை பக்தர்களின் பயணத்தை எளிதாக்குவதாக எருமேலி மணிமாலையில் உள்ள ஹாரிசன் தோட்டங்களின் செருவள்ளி தோட்டத்தில் ம் ஒன்றை, கேரளாவின் 5வது பன்னாட்டு வானூர்தி நிலையமான சபரிகிரி பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் கட்டுமானத்தை 19 ஜூலை 2017 அன்றுஅறிவித்துள்ளது.[4]

கஞ்சிரப்பள்ளி சட்டமன்றத் தொகுதி பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

பிரபலங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.kanjirappally.com/html/historyfrm.htm
  2. http://www.kanjirappally.com/html/historyfrm.htm
  3. Kumar, PK Pradeep. Physiographic Features and Changes in the rainfall pattern of Kerala. Physical Oceanography and meteorology division. 
  4. "Kerala cabinet gives nod to green airport in Kanjirappally to facilitate travel for Sabarimala pilgrims". Firstpost. பார்க்கப்பட்ட நாள் 17 February 2019.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கஞ்சிரப்பள்ளி&oldid=3594162" இலிருந்து மீள்விக்கப்பட்டது