ஒரு கை ஓசை (தொலைக்காட்சி தொடர்)
Jump to navigation
Jump to search
ஒரு கை ஓசை | |
---|---|
![]() | |
வகை | நாடகம் |
இயக்கம் | என்.பிரியன் |
நடிப்பு | சுஜிதா சாக்ஷி சிவா மகாலட்சுமி |
நாடு | இந்தியா |
மொழிகள் | தமிழ் |
எபிசோடுகள் | 260 |
தயாரிப்பு | |
படப்பிடிப்பு தளங்கள் | இந்தியா |
ஓட்டம் | தோராயமாக 20-25 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி) |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜீ தமிழ் |
ஒளிபரப்பான காலம் | 20 சனவரி 2014 30 சனவரி 2015 | –
ஒரு கை ஓசை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜனவரி 20ம் திகதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 09:30 மணிக்கு ஒளிபரப்பான நெடுந்தொடர் ஆகும். இந்தத் தொடரில் சின்னத்திரை நாயகி சுஜிதா கதாநாயகியாக நடித்தார். இவர் கணவருக்காக, விளக்கு வச்ச நேரத்தில்ல, மைதிலி, மருதாணி போன்ற பல வெற்றி தொடர்களில் நடித்தார்.[1][2] ஜீ தமிழ் தொலைக்கட்சிக்காக இவர் நடிக்கும் முதல் மெகா தொடர் இதுவாகும். வசந்தி என்ற கதாபாத்திரம் மூலம் ஒரு கை ஓசை தொடரில் நடிக்கிறார் சுஜிதா. இந்தத் தொடர் பெண்களின் வாழ்வுரிமைக்காகப் போராடும் தொடர் ஆகும்.
இந்த தொடர் 20 ஜனவரி 2015 அன்று 260 பகுதிகளுடன் நிறைவடைந்தது. இதற்குப் பதிலாக லட்சுமி வந்தாச்சு நெடுந் தொடர் ஒளிபரப்பானது.
நடிகர்கள்[தொகு]
- சுஜிதா - வசந்தி
- சாக்ஷி சிவா
- ஜோகினி
- மகா லட்சுமி
- புவனேஸ்வரி
வசனம் மற்றும் ஒளிப்பதிவு[தொகு]
இந்தத் தொடருக்கு குரு சம்பந் குமார் வசனம் எழுதி உள்ளார் மற்றும் மா பொ.. ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இவற்றைப் பார்க்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Oru Kai Osai serial on Zee Tamil". www.tamiltvshows.net.
- ↑ "ஜீ தமிழ் – ‘ஒரு கை ஓசை’ தொடர்…". screen4tv.com.
வெளி இணைப்புகள்[தொகு]
ஜீ தமிழ் : திங்கள்-வெள்ளி இரவு 9:30 மணிக்கு | ||
---|---|---|
முன்னைய நிகழ்ச்சி | ஒரு கை ஓசை (20 சனவரி 2014 – 30 சனவரி 2015) |
அடுத்த நிகழ்ச்சி |
டான்ஸ் தமிழா டான்ஸ் (திங்கள் - புதன்) (2013 - 17 ஜனவரி 2014) |
லட்சுமி வந்தாச்சு (2 பிப்ரவரி 2015 - 16 ஜூன் 2017) |