எதிர்மின் அயனி இடைவெளி
BMP/ELECTROLYTES: | |||
Na+=140 | Cl−=100 | BUN=20 | / |
Glu=150 | |||
K+=4 | CO2=22 | PCr=1.0 | \ |
ARTERIAL BLOOD GAS: | |||
HCO3-=24 | paCO2=40 | paO2=95 | pH=7.40 |
ALVEOLAR GAS: | |||
pACO2=36 | pAO2=105 | A-a g=10 | |
OTHER: | |||
Ca=9.5 | Mg2+=2.0 | PO4=1 | |
CK=55 | BE=−0.36 | AG=16 | |
SERUM OSMOLARITY/RENAL: | |||
PMO = 300 | PCO=295 | POG=5 | BUN:Cr=20 |
URINALYSIS: | |||
UNa+=80 | UCl−=100 | UAG=5 | FENa=0.95 |
UK+=25 | USG=1.01 | UCr=60 | UO=800 |
PROTEIN/GI/LIVER FUNCTION TESTS: | |||
LDH=100 | TP=7.6 | AST=25 | TBIL=0.7 |
ALP=71 | Alb=4.0 | ALT=40 | BC=0.5 |
AST/ALT=0.6 | BU=0.2 | ||
AF alb=3.0 | SAAG=1.0 | SOG=60 | |
CSF: | |||
CSF alb=30 | CSF glu=60 | CSF/S alb=7.5 | CSF/S glu=0.4 |
எதிர்மின் அயனி இடைவெளி (anion gap) என்பது மருத்துவத் துறையில் வளர்சிதை மாற்ற அமிலத்துவத்தின் (metabolic acidosis) காரணங்களைப் பகுத்தறியப் பெரிதும் உதவும் ஒரு செயற்கைக் கணக்கீடு ஆகும்.[1][2]
கருதுகோள்
[தொகு]மனித குருதித் தெளியத்தில் (serum) முக்கிய நேர்மின் அயனிகள் சோடியம் மற்றும் பொட்டாசியம் ஆகும். முக்கிய எதிர்மின் அயனிகள் குளோரைடு, பைகார்பனேட் ஆகும். பொதுவாக நேர்மின் அயனிகளும் எதிர்மின் அயனிகளும் சமஅளவில் இருக்க வேண்டும். ஆனால் இவற்றின் அளவுகளைக் கணக்கிட்டுப் பார்ப்போமாயின் இவற்றின் அளவுகள் சமமாக இருப்பதில்லை. ஆகவே கணக்கிடவியலாத சில எதிர்மின் அயனிகள் இந்த இடைவெளிக்குக் காரணமென ஊகித்தறியலாம். சீரத்தில் உள்ள கணக்கிடவியலாத எதிர்மின் அயனிகளின் செறிவே எதிர்மின் அயனி இடைவெளி எனப்படும். புரதங்கள், சல்ஃபேட்டுகள் போன்றவை இந்த கணக்கிடவியலா எதிர்மின் அயனிகள் ஆகும்.
கணக்கீடு
[தொகு]சீரத்தில் உள்ள நேர்மின் அயனிகளின் (Na+& K+]) செறிவுக்கும் எதிர்மின் அயனிகளின் (Cl− & HCO3−) செறிவுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கணக்கிடுவதன் மூலம் இது அளவிடப்படுகிறது.
எதிர்மின் அயனி இடைவெளி = ( [Na+]+[K+] ) − ( [Cl−]+[HCO3−] )
[Na+]=140
[K+]=4
[Cl−]=100
[HCO3-]=24
ஆனால், பொட்டாசியத்தின் செறிவு குறைவென்பதால் அன்றாடப் பயன்பாட்டில் இது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
எதிர்மின் அயனி இடைவெளி (பொட்டாசியம் இன்றி) = ( [Na+] ) − ( [Cl−]+[HCO3−] )
அலகு
[தொகு]இது மில்லி சமானநிறை/லிட்டர் (mEq/L) எனும் அலகால் (unit) அளவிடப்படுகிறது.
இயல்பான மதிப்பு எல்லை
[தொகு]ஆரோக்கியமாக உள்ள வயதுவந்தோரில் சராசரி மதிப்பெல்லை 8-12 மி.ச.நிறை/லிட்டர் ஆகும். மருத்துவத்துறையில் இரு திட்டவிலக்கத்திற்குக் கீழுள்ள எல்லாம் இயல்பற்றவையே.
அளவுகளை அலசி ஆராய்தல்
[தொகு]எதிர்மின் அயனி அளவு வளர்சிதைமாற்ற அமிலத்துவத்தில் இயல்பான அளவிலோ, குறையாகவோ அல்லது மிகையாகவோ இருக்கலாம். இதைக் கணக்கிடுவதன் மூலம் வளர்சிதைமாற்றக் காரத்துவக் காரணியங்களை வேறுபடுத்தி அறியலாம்.
மிகை எதிர்மின் அயனி வளர்சிதை மாற்ற அமிலத்துவம்
[தொகு]உடலுள் உற்பத்தியாகும் எதிர்மின் அயனிகள் (லாக்டேட், கீட்டோ அமிலம்) ஆகியவற்றின் அளவு கூடுவதாலோ அல்லது உட்கொள்ளப்படும் நச்சினாலோ (மெத்தனால், எத்திலீன் கிளைக்கால்) இந்நிலை ஏற்படலாம்.
இயல்பளவு எதிர்மின் அயனி வளர்சிதைமாற்ற அமிலத்துவம்
[தொகு]இந்நிலையில் பைகார்பனேட் குறைவு குளோரைடு அயனி அதிகரிப்பால் ஈடுகட்டப்படுகிறது. ஆகவே இது மிகைகுளோரைடு அமிலத்துவம் (hyerchloremic acidois) எனவும் அறியப்படுகிறது.
குறை எதிர்மின் அயனி வளர்சிதைமாற்ற அமிலத்துவம்
[தொகு]ஆல்புமின் (albumin) ஒரு முக்கிய எதிர்மின் தன்மையுள்ள பிளாஸ்மா புரதமாகும். குருதிப்போக்கு, கல்லீரல் நார்இழைத்திசு வளர்ச்சி, நெஃப்ராட்டிக் நோய்த்தொகுதி (nephrotic syndrome) ஆகிய நிலைகளில் ஆல்புமின் இழப்பேற்படுகிறது. இந்த இழப்பீட்டைச் சரிகட்ட குளோரைடு மற்றும் பைகார்பனேட் அயனிகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன. எனவே எதிர்மின் அயனி இடைவெளி குறைகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The anion gap". N. Engl. J. Med. 297 (15): 814–7. 1977. doi:10.1056/NEJM197710132971507. பப்மெட்:895822.
- ↑ "Diagnostic importance of an increased serum anion gap". N. Engl. J. Med. 303 (15): 854–8. 1980. doi:10.1056/NEJM198010093031505. பப்மெட்:6774247.