கீட்டோ அமிலத்துவம்
Appearance
கீட்டோ அமிலத்துவம் | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | உட்சுரப்பியல் |
நோய்களின் தரவுத்தளம் | 29670 |
ஈமெடிசின் | med/102 |
கீட்டோ அமிலத்துவம் (Ketoacidosis) என்பது அமினோ அமிலங்கள் அமினோநீக்கம் அடைவதாலும், கொழுப்பு அமிலங்கள் சிதைவதாலும் உண்டாகும் அதிக செறிவடைந்த கீட்டோன் உடலங்களுடன் (கொழுப்பு வளர்சிதை மாற்ற இடைப் பொருட்கள்) தொடர்புடைய வளர்சிதைமாற்ற நிலையைக் குறிக்கும். அசெட்டோஅசெடிக் அமிலம், பீட்டா-ஐடிராக்சி பியூடைரேட்டு ஆகியவை நம் உடலில் சாதாரணமாக உருவாகும் இரண்டு கீட்டோன்களாகும்.
கீட்டோ அமிலத்துவமானது நோய்வாய்ப்பட்ட வளர்சிதைமாற்ற நிலையான மீக்கடுமையான, கட்டுப்படாத கீட்டோன் மிகைப்பு நிலையைக் (ketosis) குறிக்கும். கீட்டோ அமிலத்துவத்தில் நம் உடம்பு கீட்டோன் உற்பத்தியை போதுமான அளவு சீரமைக்க முடியாததால், அதிக அளவில் கீட்டோ அமிலங்கள் இரத்தத்தில் சேர்ந்து அதன் கார அமிலத்தன்மையைப் பெருமளவுக் குறைக்கின்றது. கீட்டோ அமிலத்துவத்தின் உச்ச அளவில் மரணமும் ஏற்படலாம்[1].
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Death after soup and water diet". BBC News. 27 July 2009. http://news.bbc.co.uk/1/hi/england/tyne/8171281.stm.