உள்ளடக்கத்துக்குச் செல்

2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017 இலிருந்து வழிமாற்றப்பட்டது)

2017 சட்டப் பேரவை தேர்தல் உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2017 ஆம் ஆண்டின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடந்த தேர்தலைக் குறிக்கும்.

2017 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்

← 2012 11 பிப்ரவரி – 8 மார்ச் 2017 2022 →

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் 403 இடங்கள்
அதிகபட்சமாக 202 தொகுதிகள் தேவைப்படுகிறது
வாக்களித்தோர்61.24% Increase1.84%[1]
  Majority party Minority party
 
கட்சி பா.ஜ.க சமாஜ்வாதி கட்சி
கூட்டணி தே.ச.கூ சமாஜ்வாதி காங்கிரசு கூட்டணி
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
- -
முந்தைய
தேர்தல்
47 224
வென்ற
தொகுதிகள்
312 47
மாற்றம் Increase265 177
மொத்த வாக்குகள் 34,403,299 18,923,769
விழுக்காடு 39.67% 21.82%
மாற்றம் Increase 24.67% 7.33%

  Third party
 
கட்சி பசக
கூட்டணி -
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
-
முந்தைய
தேர்தல்
80
வென்ற
தொகுதிகள்
19
மாற்றம் 61
மொத்த வாக்குகள் 19,281,340
விழுக்காடு 22.23%
மாற்றம் 3.68%



முந்தைய முதலமைச்சர்

அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி கட்சி

முதலமைச்சர் -தெரிவு

யோகி ஆதித்யநாத்
பா.ஜ.க


பின்னணி

[தொகு]

தேர்தல் தேதிகளை இந்தியத் தேர்தல் ஆணையம் 2016 இல் அறிவிக்கவில்லை. 2012இல் நடந்த முந்தைய தேர்தலில் சமாச்வாதி கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி  பெற்றது. அகிலேசு யாதவ் தலைமையில் அரசு அமைக்கப்பட்டது. இந்த சட்டமன்றம் 2017 மே மாதம் முடிவடைகிறது. உத்திரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, குசராத், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி மார்ச் மாதங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். உத்திரப் பிரதேசத்துக்கு பிப்பரவரி 11, 15, 23, 27 மார்ச்சு 4, 8 என ஏழு கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது [2] வாக்கு எண்ணிக்கிக்கை மார்ச்சு 11 அன்று நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட 04 சனவரி முதல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தன.

தேர்தல் முறையில் மாற்றங்கள்

[தொகு]

சனவரி 2016 இல், இந்திய தேர்தல் ஆணையம் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் அட்டவணையை அனைத்து 403 சட்டசபை தொகுதிகளுக்கும் வெளியிட்டது. ஜீலை 2016இல் வாக்குச் சாவடி எண்ணிக்கையை அதிகரிக்க முடிவெடுத்தது. 1,500க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள் உள்ள இடங்களில் புதிய தேர்தல் மையங்கள் அமைக்கப்படும். முசாபர்நகர், புதனா, புர்காசி, கடோலி, சார்தாவால், மித்னாப்பூர் ஆகிய ஆறு தொகுதிகளில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1,769 இலிருந்து 1,819 ஆக அதிகரிக்கப்படும்.

வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை  பரேலி, ஆக்ரா கன்டோன்மென்ட், தெற்கு ஆக்ரா, அலிகார், கோவிந்த் நகர், ஆரிய நகர், சாசகான்பூர், காசியாபாத், மீரட், மொரடாபாத், அலகாபாத் வடக்கு, அலகாபாத் தெற்கு, நகர்புற கோரக்பூர், அயோத்தியா, சான்சி நகர், மேற்கு லக்னோ, கிழக்கு லக்னோ, லக்னோ வடக்கு, வாரணாசி கன்டோன்மென்ட், வாரணாசி வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பயன்படுத்தப்படும்.[3]

அட்டவணை

[தொகு]
தேர்தலின் அட்டவணை
நிகழ்வு தேதி
தேர்தல் அறிவிப்பு 4 சனவரி 2017
வேட்பு மனு அளிப்பு தொடக்கம் 17, 20, 24, 30 சனவரி, 02, 07, 09 பிப்ரவரி 2017
வேட்பு மனு அளிக்க இறுதி நாள் 24, 27, 31 சனவரி, 06, 09, 14, 17 பிப்ரவரி 2017
வேட்பு மனு பரிசீலனை 25, 30 சனவரி, 0,7,10, 16, 17 பிப்ரவரி 2017
வேட்பு மனு திரும்ப இறுதி நாள் 27 சனவரி, 01, 03, 09, 13, 18, 20 பிப்ரவரி 2017
வாக்குப்பதிவு நாள் 11 , 15 19, 23, 27 பிப்ரவரி, 04, 08 மார்ச்சு 2017
வாக்குப்பதிவு எண்ணப்படும் தேதி 11 மார்ச்சு 2017

முதல் கட்டத்தில் 73 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டத்தில் 67 தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டத்தில் 69 தொகுதிகளுக்கும், நான்காம் கட்டத்தில் 53 தொதிகளுக்கும், ஐந்தாம் கட்டத்தில் 52 தொகுதிகளுக்கும், ஆறாம் கட்டத்தில் 49 தொகுதிகளுக்கும், ஏழாம் கட்டத்தில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

அரசியல் மாற்றங்கள்

[தொகு]

பகுசன் சமாச் கட்சி

[தொகு]

2017ஆம் ஆண்டு தேர்தல் பகுசன் சமாச் கட்சிக்கும்[4][5] பாரதீய சனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.[6][7] ஆகத்து 2016இல் பகுசன் சமாச் கட்சி சர்வஜன் ஹித்தே, சர்வஜன் சுக்கே என்று பல பேரணிகளை நடத்தியுள்ளது.இப் பேரணிகள் ஆக்ராவில் தொடங்கி பெரும் பேரணிகளாக அசம்கர்,, அலகாபாத் மற்றும் சகாரன்பூர் நகரங்களில் நடந்தது.[8][9] இப் பேரணிகளில் மாயாவதி குமாரி ஆளும் attacked misrule and Gundaraj of சமாச்வாதி கட்சியின் முறையற்ற ஆட்சியையும் மக்களுக்கு பாதுகாப்பு இன்மை குறித்தும் தாக்கி பேசினார் , மத அரசியல் செய்வதாகவும் ஆச் தின் (நல்ல நாட்கள்) என்ற பாசகவின் நிறைவேற்றாத உறுதிமொழி குறித்தும் தாக்கினார். மேலும் காங்கிரசின் மோசமான அரசியலையும் தாக்கினார் .[10][11] 9 செப்டம்பர் 2016 அன்று பசகவின் நிறுவன தலைவர் கன்சிராம் அவர்களின் பத்தாவது பரிநிர்வாணம் விழா நடக்கிறது. அச்சமயம் மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் பெருந்திரளான மக்கள் அங்கு கூடினர் [12][13] பசக 100 தொகுதிகளுக்கு மேல் முசுலிம் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இது இது நாள் வரை உபியில் பெரும் கட்சியின் சார்பாக நிறுத்தப்பட்டுள்ள அதிகபட்ச முசுலிம் வேட்பாளர்கள் ஆகும்.[14] 2016 ஆகத்தில் மூன்று முசுலிம் காங்கிரசு ச.ம.உ களும், ஒரு சமாச்வாதி கட்சியின் ஒரு முசுலிம் ச.ம.உ றும் பசகவில் இணைந்தனர். பாசகவிலிருந்து முன்னாள் அமைச்சர் பகசயில் இணைந்தார் [15][16]

சமாச்வாதி கட்சி

[தொகு]

16 மார்ச்சு 2016 அன்று சமாச்வாதி கட்சி 142 வேட்பாளர்கள் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. குடும்பச் சண்டைகள் கட்சியின் செல்வாக்கை பாதிக்கும் என்று கருதப்படுகிறது.[17] கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவுடனும் அவரது தம்பியான சிவ்பால் யாதவுடனும் முலாயமின் மகனும் உத்திரப் பிரதேச முதல்வருமான அகிலேசு யாதவிற்கும் மோதல் முற்றியது. வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத ச.ம.உ களை அவர் சந்திக்கிறார்.[18] முலாயம் அறிவித்த 325 வேட்பாளர்களுக்கு போட்டியாக அகிலேசு யாதவ் 235 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்[19] மகனும் மாநில முதல்வருமான அகிலேசு யாதவையும் அவரது தம்பி ராம்கோபால் யாதவையும் ஆறு ஆண்டுகளுக்கு சமாச்வாதி கட்சியிலிருந்து நீக்கி முலாயம் சிங் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.[20] சனிக்கிழமை அன்று அகிலேசு யாதவையும் ராம்கோபாலையும் ஆறு ஆண்டுகளுக்கு கட்சியிலிருந்து நீக்கிய அறிவிப்பை முலாயம் திரும்ப பெற்றுக்கொண்டார்.[21] ஞாயிறு அன்று தேசிய பொதுக்குழுவை கூட்டி அகிலேசை பொதுக்குழு \ கட்சி தலைவர் ஆக்கியதற்காக[22] முலாயம் மீண்டும் ராம் கோபால் யாதவை கட்சியை விட்டு நீக்கினார்[23] யார் கட்சிக்கு தலைவர் என்பதில் அகிலேசுக்கும் முலாயம் குழுவுக்கும் தகராறு உள்ளதால் தாங்களே உண்மையான சமாச்வாதி கட்சி என்றும் தங்களுக்கே மிதிவண்டி சின்னம் கிடைக்கவேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளார்கள்,. சனவரி 17 அன்று தீர்ப்பு வழங்குவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது [24] அகிலேசுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி அவரது குழுவே உண்மையான சமாச்வாதி என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது[25] 298 தொகுதிகள் சமாச்வாதி கட்சிக்கும் 105 தொகுதிகள் காங்கிரசுக்கும் ஒதுக்கப்பட்டு கூட்டணி உறுதியாகியுள்ளது.[26] முலாயம் சிங் யாதவ் சமாச்வாதி சச்வந்த் நகர் தொகுதியில் கட்சி வேட்பாளருக்கு வாக்கு கேட்காமல் அவரை எதிர்த்து நிற்கும் தன் தம்பி சிவ்பால் யாதவுக்கு வாக்கு சேகரித்தார்[27] சமாச்வாதி கூட்டணிக்காக லாலு பிரசாத் யாதவ் பரப்புரை மேற்கொள்கிறார்.[28] சமாச்வாதி வேட்பாளர் வாரணாசி கன்டோன்மெண்ட் தொகுதியிலிருந்து விலகிக்கொண்டார்.[29]

பாசக

[தொகு]

முதலமைச்சர் வேட்பாளரை தாங்கள் அறிவிக்காமல் தேர்தலை சந்திப்போம் என்று பாசக கூறியது [30] மூத்த காங்கிரசு தலைவர் ரீட்டா பகுகுணா பாசகவில் சேர்ந்தார்.[31] காங்கிரசு, பசக, சமாச்வாதி கட்சி ஆகியவற்றின் ஆறு ச.ம.உ கள் பாசகவில் இணைந்தனர்.[32] சமாச்வாதி கட்சியின் பா சட்டமன்ற உறுப்பினரும் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராசா மகேந்திரா அரிடமன் சிங்கும் கெராகெர் தொகுதி வேட்பாளருமான அவரது மனைவி ராணி பக்சாலிக்கா சிங்கும் பாசகவில் சேர்ந்தனர்[33] ராசா மகேந்திரா சிங் 1993லிருந்து 2012 வரை பாசகவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரசு

[தொகு]

தன் முதலமைச்சர் வேட்பாளராக சீலா தீட்சித்தை காங்கிரசு முன்னிறுத்துகிறது.[34] சமாச்வாதி கட்சியுடன் (அகிலேசு தலைமையிலுள்ள) கூட்டணி வைக்க காங்கிரசு முயன்று வருகிறது.[35] காங்கிரசு சமாச்வாதி கட்சி கூட்டணி உறுதியாகியுள்ளது.[36]

கருத்துக் கணிப்புகள்

[தொகு]
தேதி மேற்கோள் நிறுவனம்(கள்)
பசக பாசக சமாச்வாதி கட்சி காங்கிரசு மற்றவர்கள்
மே 2016 [37] ஏபிபி நியுசு 185 120 80 13 5
Jul-ஆகத்து 2016 [38] ஏபிபி நியுசு - லோத்நிதி 103-113 (108) 124-134 (129) 141-151 (146) 8-14 (11) 6-12 (9)
ஆகத்து 2016 [39] இந்தியா டுடே - சி வோட்டர் 95-111 (103) 134-150 (142) 133-149 (141) 5-13 (9) 4-12 (8)
அக்டோபர் 2016 [40] இந்தியா டுடே - ஆக்சிசு 115-124 (120) 170-183 (177) 94-103 (99) 8-12 (10) 2-6 (4)
நவ-டிச 2016 [41] இசிடிவி டெக்னாலசி 108 194 57 30 14
சனவரி 2017 [42] ஏபிபி நியுசு - லோத்நிதி - சிடிடிஎசு 93-103 (98) 129-139 (134) 141-151 (146) 13-19 (16) N/A
சனவரி 2017 [43] இந்தியா டுடே - ஆக்சிசு 79-85 (82) 206-216 (211) 92-97 (95) 5-7 (6) 7-11 (9)
சனவரி 2017 [44] விடிபி அசோசியேட்சு 76 165 149 04 N/A
சராசரி 110 159 114 12 N/A

வாக்குப்பதிவு

[தொகு]

முதல் கட்டத்தில் 73 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 64% வாக்குகள் பதிவாகின.[45] இரண்டாம் கட்டத்தில் 67 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 66% வாக்குகள் பதிவாகின.[46][47] மூன்றாம் கட்டத்தில் 69 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 62% வாக்குகள் பதிவாகின[48] நான்காம் கட்டத்தில் 53 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 61% வாக்குகள் பதிவாகின.[49] ஐந்தாவது கட்டத்தில் 52 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.36% வாக்குகள் பதிவாகின.[50] ஆறாவது கட்டத்தில் 49 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 57.03% வாக்குகள் பதிவாகின.[51] ஏழாவது கட்டத்தில் 40 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 60.03% வாக்குகள் பதிவாகின.[52]

தேர்தல் நடந்த கட்டங்களில் எத்தனை தொகுதிகள்

முடிவுகள்

[தொகு]
கட்சியின் பெயர் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை பெற்ற வாக்கு %
பாசக - தேசகூ 312 39.7
அப்னா தளம் (சோனேலால்) -தேசகூ 9 1.0
சுகல்தேவ் பாரதிய சமாச் கட்சி - தேசகூ 4 0.7
சமாச்வாதி கட்சி 47 21.8
இந்திய தேசிய காங்கிரசு சமாவாதி கூட்டணி 7 6.2
பகுசன் சமாச் கட்சி 19 22.2
ராசுட்டிரிய லோக்தளம் 1 1.8
நிர்பல் இந்தியன் சோகித் அமாரா ஆம் தளம் 1 0.6
சுயேட்சைகள் 3 2.6

இதையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Uttar Pradesh General Legislative Election 2017". eci.gov.in.
  2. "Elections Begin On Feb 4, Counting On March 11: Your Quick Guide". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் சனவரி 4, 2017.
  3. http://eci.nic.in/eci_main1/current/PN2Corrigendum_04012017.pdf
  4. Rana, Uday (19 May 2016). "BSP's chances look very strong, feels Congress". பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  5. "Mayawati sees good omen for 2017". 7 December 2015. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  6. Sharma, Sandipan (18 November 2015). "No chance of a UP grand alliance: It will be a BJP-BSP contest in the 2017 state polls". பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  7. Ghosh, Shubham (17 March 2016). "UP polls 2017: Survey shows BJP, BSP will have an intense battle in Purvanchal". பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  8. "In First Rally, Mayawati Plays Up To Dalits, They Say BSP Is 'Anti-Virus'". http://www.ndtv.com/india-news/in-first-rally-mayawati-plays-up-to-dalits-they-say-bsp-is-anti-virus-1446617. 
  9. "After mega rally, BSP chief jumps to top of Twitter trends". http://timesofindia.indiatimes.com/city/meerut/After-mega-rally-BSP-chief-jumps-to-top-of-Twitter-trends/articleshow/54286033.cms. 
  10. "Mayawati woos Dalits, Muslims at Saharanpur rally; accuses BJP of engineering communal tension in UP". http://indiatoday.intoday.in/story/mayawati-dalits-muslims-saharanpur-rally-bjp-communal/1/761901.html. 
  11. "Mayawati looks beyond Uttar Pradesh for BSP’s expansion". http://www.livemint.com/Politics/CpHCk0GZko3qcvg0KGpIrK/Mayawati-looks-beyond-UP-for-BSPs-expansion.html. 
  12. "With an eye on Muslim-Dalit vote: Mayawati's back with a bang". http://www.dailyo.in/politics/mayawati-bsp-lucknow-rally-sp-bjp-congress-up-polls-dalit-muslim/story/1/13333.html. 
  13. "Lucknow: Bahujan Samaj Party chief Mayawati targets Modi govt ahead of UP polls". http://www.firstpost.com/politics/lucknow-bahujan-samaj-party-chief-mayawati-targets-modi-govt-ahead-of-up-polls-3041696.html. 
  14. "Crafting the bahujan rainbow". http://indianexpress.com/article/opinion/columns/uttar-pradesh-elections-2017-bahujan-bsp-mayawati-muslim-votes-bjp-congress-campaign-3033271/. 
  15. RASHID, OMAR. "Boost for Mayawati as 4 Muslim MLAs join BSP". http://www.thehindu.com/news/national/other-states/boost-for-mayawati-as-4-muslim-mlas-join-bsp/article8969896.ece. 
  16. "BSP RECEIVED A SHOT IN THE ARM". http://www.dailypioneer.com/state-editions/bsp-received-a-shot-in-the-arm.html. 
  17. "Samajwadi Party Family Feud: Timeline of Happenings in Uttar Pradesh Pari-war". news18. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 29, 2016.
  18. "Feud in Samajwadi Party appears to be worsening, Akhilesh Yadav meets supporters". indianexpress. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 29, 2016.
  19. "Split wide open in SP: After Mulayam, Akhilesh Yadav releases parallel list of 235 candidates". எகனாமிக் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 30, 2016.
  20. "Mulayam expels Akhilesh from party for 6 years". த இந்து. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 30, 2016.
  21. "Why Mulayam Singh Yadav was forced to revoke expulsion of Akhilesh Yadav". எகனாமிக் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 31, 2016.
  22. "Ram Gopal Yadav: Architect of the Sunday coup in SP". எக்கனாமிக் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 2, 2017.
  23. "Mulayam Singh expels Ramgopal Yadav for six years, again". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 2, 2017.
  24. "EC reserves order on Samajwadi Party fight over cycle, to pass interim order on Jan 17". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2017.
  25. "After winning 'cycle' symbol, Akhilesh Yadav meets Mulayam Singh". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2017.
  26. "Uttar Pradesh election: Samajwadi Party seals deal with Congress; keeps 298 seats, concedes 105". இந்தியா டுடே. பார்க்கப்பட்ட நாள் சனவரி 25, 2017.
  27. "Uttar Pradesh Elections 2017: State Votes - And Mulayam Singh Campaigns Against Son Akhilesh Yadav". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  28. [Lalu Prasad to campaign for SP-Congress alliance in Uttar Pradesh "டைம்சு ஆப் இந்தியா"]. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 20, 2017. {{cite web}}: Check |url= value (help); Check date values in: |accessdate= (help)
  29. SP candidate withdraws nomination from Varanasi Cantt seat
  30. "BJP will not project CM face for UP assembly polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 30, 2016.
  31. "Another Bahuguna leaves Congress for BJP". த இந்து. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 30, 2016.
  32. "Uttar Pradesh: Six MLAs from Congress, BSP, SP join BJP". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 30, 2016.
  33. "Samajwadi Party candidates Raja Aridaman, Rani Pakshalika join BJP". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 14, 2017.
  34. "Cong names Sheila Dikshit as UP CM candidate, says chosen for experience and good work". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 30, 2016.
  35. Cycle or not, Congress, Akhilesh Yadav get ready for joint poll ride
  36. "Samajwadi Party-Congress eye 35-37% of total votes in Uttar Pradesh". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 19, 2017.
  37. "ABP News Opinion Poll: BSP to win 185 seats if UP polls are held now". ABP Live. 16 March 2016 இம் மூலத்தில் இருந்து 25 மே 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160525112733/http://www.abplive.in/india-news/abp-news-opinion-poll-bsp-to-win-185-seats-if-up-polls-are-held-now-306920. பார்த்த நாள்: 4 January 2017. 
  38. "BJP chasing SP in UP, BSP runners up, Congress a distant straggler". ABP News. 22 August 2016 இம் மூலத்தில் இருந்து 2 ஜனவரி 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170102184846/http://www.abplive.in/india-news/bjp-chasing-sp-in-up-bsp-runners-up-congress-a-distant-straggler-402955. பார்த்த நாள்: 23 December 2016. 
  39. "India TV-CVoter survey: BJP, SP neck and neck, BSP third in UP assembly poll stakes". India TV. 14 September 2016. http://www.indiatvnews.com/politics/national-india-tv-cvoter-survey-bjp-sp-neck-and-neck-bsp-third-in-up-assembly-poll-stakes-346408. பார்த்த நாள்: 23 December 2016. 
  40. "India Today-Axis Opinion Poll for Uttar Pradesh: BJP dream run to continue, but a hung Assembly likely". India Today. 12 October 2016. http://indiatoday.intoday.in/story/india-today-axis-opinion-poll-uttar-pradesh-elections-mayawati-akhilesh/1/785429.html. பார்த்த நாள்: 23 December 2016. 
  41. . http://https://twitter.com/YammaniS January 2017. 
  42. "ABP-CSDS Poll: Akhilesh Will Remain UP CM, SP Will Beat BJP & BSP". thequint.com. https://www.thequint.com/politics/2017/01/04/akhilesh-favourite-cm-sp-biggest-muslim-vote-bank-csds-poll-mulayam-ram-gopal-yadav-narendra-modi-mayawati-bjp. பார்த்த நாள்: 6 January 2017. [தொடர்பிழந்த இணைப்பு]
  43. "Modis BJP weathers demonetisation storm, set to win Uttar Pradesh: Key takeaways from India Today-Axis Opinion Poll". http://indiatoday.intoday.in/story/india-today-axis-poll-uttar-pradesh-demonetisation-modi/1/849637.html. 
  44. "VDPAssociates on Twitter". Twitter. https://twitter.com/VDPAssociates/status/817038865676570624. 
  45. "UP Election 2017: At 64 Per Cent, UP Betters Last Time's Turnout In First Phase". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 12, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  46. "Assembly Elections 2017: 65.16% voter turnout in UP, 68% in Uttarakhand". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 16, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  47. Enthusiastic voting in 2nd phase of UP polls, 65 per cent turnout recorded
  48. UP Elections 2017: 62% Turnout In Phase 3 As UP Votes In Samajwadi Strongholds - 10 Points
  49. 61% turnout in fourth phase of U.P. polls
  50. 57.36 per cent turnout registered in fifth phase of UP polls
  51. "At 57%, voting higher than previous poll, less than in phase V". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 5, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  52. "60.03 per cent voting in seventh and final phase of UP polls". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 9, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)