2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலும் (403 தொகுதிகள்) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012 என்பது இந்தியாவில் உள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெப்ரவரி 8, 2012 முதல் மார்ச்சு 3, 2012 வரை நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலைக் குறிக்கிறது. 112மில்லியன் வாக்காளர்களுடன் உலகிலேயே அதிக வாக்களர்களைக் கொண்ட மாநிலமாக திகழ்கிறது. இந்த எண்ணிக்கை மொத்த அமெரிக்காவின் பாதி வாக்காளர்களுக்கு சமமானது.
இம்மாநில சட்டமன்றத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிக மாநிலங்களவை தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
2007ல் இம்மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததால் இத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது இம்மாநிலத்தின் முதல்வராக பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த மாயாவதி பதவியில் இருந்தார். இக்கட்சி கடந்த தேர்தலில் அதிகப்படியான தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த்து குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. அதன்படி பிப்ரவரி 4, 8,11,15, 19, 23 மற்றும் 28 ஆகிய தேதிகளில் நடைபெறும். முடிவு மார்ச் 6 அன்று வெளியிடப்பட்டது.
சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் யாதவ் முதலமைச்சராக அக்கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்டார்[1].
கட்சிகள்
[தொகு]- தேசிய கட்சிகள்
- மாநில கட்சிகள்
தேர்தல் அறிக்கைகள்
[தொகு]- இராமர் கோயில் கட்டுவதற்கு உத்தரவாதமும், சிறுபான்மையினருக்கான 4.5 சதவீத மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பிஜேபி எதிர்க்கும் என்று அறிவித்துள்ளது [2]
முடிவுகள்
[தொகு]தேர்தல் முடிவுகள் மக்கள் மாற்றத்தை விரும்பியதை காட்டியுள்ளது[3]. மக்களின் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் (en:Voter turnout) புதிய வரலாறு படைத்தது.[4]: 2007ல் வாக்காளர் ஓட்டளிப்பு 46 சதவீதத்திலிருந்து இத்தேர்தலில் 60 சதவீதமானது - இது உபியில் நடைபெற்ற தேர்தல்களிலேயே அதிகமாகும்.[5].
தொங்கும் சட்டமன்றங்கள் உபியில் வழமையானது, எனினும் கடந்த இரண்டு தேர்தல்களும் தனிகட்சியை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வித்துட்டுள்ளன. சமாஜ்வாதி கட்சி கடந்த தேர்தல்களில் பெற்ற 97 இருந்து தற்போது 224 தொகுதிகளை வெற்றிகொண்டுள்ளன. ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி கடந்த தேர்தலில் 206லிருந்து 80 தொகுகளையே வென்றுள்ளது.[6]. ராகுல் காந்தி தலைமையில் அதிகத் தொகுதிகளில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் பாரதிய ஜனதாவிற்குப் பின் நான்காவது இடத்தையே அடையமுடிந்தது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-12. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://www.thehindu.com/news/states/other-states/article2836862.ece
- ↑ http://www.ndtv.com/article/assembly-polls/mayawati-shunned-a-legacy-of-statues-and-corruption183224[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://expressbuzz.com/topnews/man-behind-historic-election-percentage-in-up/369497.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from [hhttp://ibnlive.in.com/news/up-polls-2012-voting-over-up-waits-for-results/235858-37-170.html the original] on 2012-03-06. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.