கோவா சட்டமன்றத் தேர்தல், 2017

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவா சட்டமன்றத் தேர்தல், 2017

← 2012 4 February 2017 2022 →

அனைத்து 40 தொகுதிளுக்கும் கோவா சட்டமன்றம்
21 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது
வாக்களித்தோர்82.56% Red Arrow Down.svg 0.38%
  First party Second party Third party
  Hand INC.svg Indian Election Symbol Lion.svg
தலைவர் பிரதாப்சிங் ரானே லட்சுமிகாந்த் பர்சேகர் சுடின் தவாலிகர்
கட்சி காங்கிரசு பா.ஜ.க மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரின் தொகுதி போரியம் மாண்ட்ரேம்
(தோல்வி)
மார்கெய்ம்
முந்தைய தேர்தல் 9 21 3
வென்ற தொகுதிகள் 17 13 3
மாற்றம் Green Arrow Up.svg 8 Red Arrow Down.svg 8 Straight Line Steady.svg
மொத்த வாக்குகள் 259,758 297,588 103,290
விழுக்காடு 28.4% 32.5% 11.3%

  Fourth party
 
தலைவர் விஜய் சர்தேசாய்
கட்சி கோவா முன்னேற்ற கட்சி
கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி
தலைவரின் தொகுதி படோர்டா
முந்தைய தேர்தல் Party Established
வென்ற தொகுதிகள் 3
மாற்றம் Green Arrow Up.svg 3
மொத்த வாக்குகள் 31,900
விழுக்காடு 3.5%

2017 Goa assembly elections.png

முந்தைய முதலமைச்சர்

லட்சுமிகாந்த் பர்சேகர்
பாரதிய ஜனதா கட்சி

முதலமைச்சர் -தெரிவு

மனோகர் பாரிக்கர்
பாரதிய ஜனதா கட்சி

கோவா சட்டமன்றத் தேர்தல், 2017 கோவா சட்டமன்றத்திற்கான 40 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 4 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை அனைத்து 40 தொதிகளிலும் பொருத்தப்பட்டது. இந்தியாவில் முழு மாநிலத்திற்கும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை பயன்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.[1][2][3]

பின்னணி[தொகு]

தற்போதைய சட்டமன்றம் மார்ச் 18, 2017 அன்று முடிவடைகிறது[4] , கடந்த தேர்தலில்  பாசக மனோகர் பாரிக்கர் தலைமையில் பெரும்பான்மை பெற்றது. மனோகர் பாரிக்கர் கோவாவின் தலைமை அமைச்சராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இல், பாதுகாப்பு அமைச்சர் ஆக தெரிவு செய்யப்பட்டதால் அவர் பதவி விலகினார், அதன் காரணமாக லட்சுமிகாந்த் பர்சேகர் முதல்வராக பொறுப்பேற்றார்.[5][6]

அட்டவணை[தொகு]

  • 11 சனவரி 2017 - வேட்பு மனு அளித்தல் 
  • 18 சனவரி 2017 - வேட்பு மனுவை அளிக்க கடைசி தேதி
  • 19 சனவரி 2017 - வேட்பு மனுவை சீராய்வது
  • 21 சனவரி 2017 - வேட்பு மனுவை திரும்ப பெறுவது
  • 4 பிப்ரவரி 2017 - வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும்.[7]

கூட்டணிகள்[தொகு]

பாசக[தொகு]

37 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள கிறுத்துவர்கள் பலமாக உள்ள 3 தொகுதிகளில் மற்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் என்று மாநில பாசக தலைவர் வினய் தெண்டுல்கர் தெரிவித்தார்.[8]

21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாசக அறிவித்தது.[9]வாசுகோ தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிருப்தி கொண்டு பாசகவின் தெற்கு கோவா மாவட்ட துணைத் தலைவர் கிருட்டிண சல்கார் கட்சியிலிருந்து விலகினார். [10]

மகாராட்டிரவாதி கோமந்த கட்சி[தொகு]

2012 தேர்தலுக்கு முன்பிருந்தே தாங்கள் பாசகவுடன் கூட்டணி வைத்திருந்ததாகவும், அது தற்போது முறிந்து விட்டது என்றும் சனவரி 5, 2017 அன்று இக் கட்சியின் தலைவர் கூறினார்.[11] 22 தொகுதிகளில் மகோக போட்டியிடும் என்று கூறினார்[12]

ஆம் ஆத்மி கட்சி[தொகு]

ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக எல்விசு கோம்சை அறிவித்தது.[13] [14]

வாக்குப்பதிவு[தொகு]

83% வாக்குப்பதிவு நடந்தது. தவறான நடத்தை விதிகள் பின்பற்றபட்டதன் காரணமாக மர்மகோவா தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.[15]


கட்சியின் பெயர் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை பெற்ற வாக்கு %
இந்திய தேசிய காங்கிரசு 17 28.4
பாசக 13 32.5
தேசியவாத காங்கிரசு 1 2.3
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி 3 11.3
கோவா முன்னேற்ற கட்சி 3 3.5
கட்சி சார்பற்றவர்கள் 3 11.1

ஆளுநர் பாசகவை ஆட்சியமைக்க அழைத்து 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். [16] நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாசக அரசு வென்றுள்ளது.[17]

இதையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "AnnexureVI VVPAT Page 24" (PDF). 2018-02-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-01-05 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Poll panel to introduce paper trail for Goa polls".
  3. http://timesofindia.indiatimes.com/city/goa/an-election-of-many-firsts/articleshow/56009463.cms
  4. "Terms of the Houses". இந்தியத் தேர்தல் ஆணையம்/தேசியத் தகவல் மையம் (இந்தியா).
  5. "Manohar Parrikar gets defence, Suresh Prabhu becomes new railway minister". இந்தியா டுடே. November 9, 2014. http://indiatoday.intoday.in/story/manohar-parrikar-gets-defence-suresh-prabhu-railway-minister-nadda-sadananda-gowda/1/399942.html. 
  6. "Meet Laxmikant Parsekar: Goa's new chief minister, a BJP loyalist". Firstpost. November 9, 2014. http://www.firstpost.com/politics/meet-laxmikant-parsekar-goas-new-chief-minister-a-bjp-loyalist-1793503.html. 
  7. "Announcement: Schedule for the General Elections to the Legislative Assemblies of Goa, Manipur, Punjab, Uttarakhand and Uttar Pradesh" (PDF). Election Commission of India. 4 January 2017. 4 ஜனவரி 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 5 ஜனவரி 2017 அன்று பார்க்கப்பட்டது.
  8. "BJP to contest 37 seats in Goa, support 3 candidates in Catholic stronghold". இந்துசுத்தான் டைம்சு. சனவரி 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  9. "BJP announces 21 shortlisted candidates". நவ்இந்து டைம்சு. சனவரி 7, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Bharatiya Janata Party sees rebellion in port town". டைம்சு ஆப் இந்தியா. சனவரி 14, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  11. "MGP breaks alliance with BJP ahead of upcoming Goa elections". நியு இந்தியன் எக்சுபிரசு. சனவரி 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  12. "Maharashtrawadi Gomantak Party breaks ranks with BJP in Goa". இந்து. சனவரி 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  13. "Goa: As BJP and ally drift apart, AAP tests northern saffron waters". இந்தியன் எக்சுபிரசு. சனவரி 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  14. "AAP declares Elvis Gomes as its CM candidate in Goa". இந்தியன் எக்சுபிரசு. சனவரி 5, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Goa sees highest voter turnout at 83%; Punjab sees 78.6% polling, clashes reported". /indianexpress. பெப்ரவரி 4, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Parrikar to Take Oath in Goa Today With 10 Ministers". News18. மார்ச் 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Manohar Parrikar wins floor test in Goa assembly, 22 votes to 16". லைவ் மின்ட். மார்ச் 20, 2017 அன்று பார்க்கப்பட்டது.