2017 உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல் உத்தராகண்ட சட்டமன்றத்திற்கான 70 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 15 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும்.
இதன் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டத்தில் வாக்குப்பதிவு நடந்தது. 2012 தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் இந்திய தேசிய காங்கிரசு விசய் பகுகுணா தலைவராவுள்ள முற்போக்கு சனநாயக முன்னணி (உத்தராகண்டம்) உதவியுடன் ஆட்சி அமைத்தது. வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இங்கு தேர்தலின் போது நான்கு தொகுதிகளில் பயன்படுத்தப்படும்.[1][2]
உத்தராகண்டத்தின் 69 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 68% வாக்குப் பதிவு நடந்தது. கர்னபிரயாக் தொகுதி பகுசன் சமாச் வேட்பாளர் குல்தீப் சிங் சாலை விபத்தில் மரணமடைந்ததால் அத்தொகுதியில் தேர்தல் நடைபெறவில்லை.[4]