2017 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கோவா சட்டப் பேரவையின் அனைத்து 40 தொகுதிளுக்கும் அதிகபட்சமாக 21 தொகுதிகள் தேவைப்படுகிறது | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வாக்களித்தோர் | 82.56% 0.38% | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
2017 கோவா சட்டப் பேரவைத் தேர்தல் கோவா சட்டமன்றத்திற்கான 40 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 4 பிப்ரவரி 2017 அன்று நடந்த தேர்தலைக் குறிக்கும். வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை அனைத்து 40 தொதிகளிலும் பொருத்தப்பட்டது. இந்தியாவில் முழு மாநிலத்திற்கும் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை பயன்படுத்தப்படுவது இதுவே முதன் முறையாகும்.[1][2][3]
பின்னணி
[தொகு]தற்போதைய சட்டமன்றம் மார்ச் 18, 2017 அன்று முடிவடைகிறது[4] , கடந்த தேர்தலில் பாசக மனோகர் பாரிக்கர் தலைமையில் பெரும்பான்மை பெற்றது. மனோகர் பாரிக்கர் கோவாவின் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 இல், பாதுகாப்பு அமைச்சர் ஆக தெரிவு செய்யப்பட்டதால் அவர் பதவி விலகினார், அதன் காரணமாக லட்சுமிகாந்த் பர்சேகர் முதல்வராக பொறுப்பேற்றார்.[5][6]
அட்டவணை
[தொகு]- 11 சனவரி 2017 - வேட்பு மனு அளித்தல்
- 18 சனவரி 2017 - வேட்பு மனுவை அளிக்க கடைசி தேதி
- 19 சனவரி 2017 - வேட்பு மனுவை சீராய்வது
- 21 சனவரி 2017 - வேட்பு மனுவை திரும்ப பெறுவது
- 4 பிப்ரவரி 2017 - வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறும்.[7]
கூட்டணிகள்
[தொகு]பாசக
[தொகு]37 தொகுதிகளில் போட்டியிட்டது. மீதமுள்ள கிறுத்துவர்கள் பலமாக உள்ள 3 தொகுதிகளில் மற்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் என்று மாநில பாசக தலைவர் வினய் தெண்டுல்கர் தெரிவித்தார்.[8]
21 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை பாசக அறிவித்தது.[9] வாசுகோ தொகுதி வேட்பாளர் தேர்வில் அதிருப்தி கொண்டு பாசகவின் தெற்கு கோவா மாவட்ட துணைத் தலைவர் கிருட்டிண சல்கார் கட்சியிலிருந்து விலகினார்.[10]
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
[தொகு]2012 தேர்தலுக்கு முன்பிருந்தே தாங்கள் பாசகவுடன் கூட்டணி வைத்திருந்ததாகவும், அது தற்போது முறிந்து விட்டது என்றும் சனவரி 5, 2017 அன்று இக் கட்சியின் தலைவர் கூறினார்.[11] 22 தொகுதிகளில் மகோக போட்டியிடும் என்று கூறினார்[12]
ஆம் ஆத்மி கட்சி
[தொகு]ஆம் ஆத்மி முதலமைச்சர் வேட்பாளராக எல்விசு கோம்சை அறிவித்தது.[13][14]
வாக்குப்பதிவு
[தொகு]83% வாக்குப்பதிவு நடந்தது. தவறான நடத்தை விதிகள் பின்பற்றபட்டதன் காரணமாக மர்மகோவா தொகுதிக்கு மறுதேர்தல் நடத்த பரிந்துரைக்கப்பட்டது.[15]
கட்சியின் பெயர் | வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை | பெற்ற வாக்கு % |
---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 17 | 28.4 |
பாசக | 13 | 32.5 |
தேசியவாத காங்கிரசு | 1 | 2.3 |
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி | 3 | 11.3 |
கோவா முன்னேற்ற கட்சி | 3 | 3.5 |
கட்சி சார்பற்றவர்கள் | 3 | 11.1 |
ஆளுநர் பாசகவை ஆட்சியமைக்க அழைத்து 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார்.[16] நம்பிக்கை வாக்கெடுப்பில் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாசக அரசு வென்றுள்ளது.[17]
இதையும் பார்க்க
[தொகு]- உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2017
- பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2017
- மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல், 2017
- உத்தராகண்ட சட்டமன்றத் தேர்தல், 2017
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "AnnexureVI VVPAT Page 24" (PDF). Archived from the original (PDF) on 2018-02-05. பார்க்கப்பட்ட நாள் 2017-01-05.
- ↑ "Poll panel to introduce paper trail for Goa polls".
- ↑ http://timesofindia.indiatimes.com/city/goa/an-election-of-many-firsts/articleshow/56009463.cms
- ↑ "Terms of the Houses". இந்தியத் தேர்தல் ஆணையம்/தேசியத் தகவல் மையம் (இந்தியா).
- ↑ "Manohar Parrikar gets defence, Suresh Prabhu becomes new railway minister". இந்தியா டுடே. November 9, 2014. http://indiatoday.intoday.in/story/manohar-parrikar-gets-defence-suresh-prabhu-railway-minister-nadda-sadananda-gowda/1/399942.html.
- ↑ "Meet Laxmikant Parsekar: Goa's new chief minister, a BJP loyalist". Firstpost. November 9, 2014. http://www.firstpost.com/politics/meet-laxmikant-parsekar-goas-new-chief-minister-a-bjp-loyalist-1793503.html.
- ↑ "Announcement: Schedule for the General Elections to the Legislative Assemblies of Goa, Manipur, Punjab, Uttarakhand and Uttar Pradesh" (PDF). Election Commission of India. 4 January 2017. Archived from the original (PDF) on 4 ஜனவரி 2017. பார்க்கப்பட்ட நாள் 5 ஜனவரி 2017.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ "BJP to contest 37 seats in Goa, support 3 candidates in Catholic stronghold". இந்துசுத்தான் டைம்சு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.
- ↑ "BJP announces 21 shortlisted candidates". நவ்இந்து டைம்சு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 7, 2017.
- ↑ "Bharatiya Janata Party sees rebellion in port town". டைம்சு ஆப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் சனவரி 14, 2017.
- ↑ "MGP breaks alliance with BJP ahead of upcoming Goa elections". நியு இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.
- ↑ "Maharashtrawadi Gomantak Party breaks ranks with BJP in Goa". இந்து. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.
- ↑ "Goa: As BJP and ally drift apart, AAP tests northern saffron waters". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.
- ↑ "AAP declares Elvis Gomes as its CM candidate in Goa". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் சனவரி 5, 2017.
- ↑ "Goa sees highest voter turnout at 83%; Punjab sees 78.6% polling, clashes reported". /indianexpress. பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 4, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Parrikar to Take Oath in Goa Today With 10 Ministers". News18. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Manohar Parrikar wins floor test in Goa assembly, 22 votes to 16". லைவ் மின்ட். பார்க்கப்பட்ட நாள் மார்ச் 20, 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)